சூரிய கிரகண நேரம் என்ன செய்ய கூடாது?

By News Room

சென்னையில் மாலை 05 மணி 13 நிமிடத்தில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. மாலை 6 மணி 25 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது. மும்பையில் மாலை 04 மணி 49 நிமிடத்திற்கு சூரிய கிரகணம் ஆரம்பிக்கிறது. 06 மணி 31 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது. டெல்லியில் மாலை 04 மணி 28 நிமிடத்தில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. மாலை 6 மணி 25 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது. கொல்கத்தாவில் மாலை 04 மணி 51 நிமிடத்தில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. மாலை 6 மணி 23 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது

#கிரகண_தோஷம்

துலாம் ராசியில் சூரியகிரகணம் நிகழ்வதால் 
சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், திருவாதிரை போன்ற கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கிரகண நேரத்தில் வெளியில் செல்லாமல் இறைவழிபாடு பாரயணங்களை படிக்கலாம் சாந்தி பரிகாரம் செய்து கொள்ளவும். சூரிய அஸ்மனத்திற்கு பிறகுதான் கிரகணம் முடிவடைகிறது எனவே சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே கிரகணத்தை பார்க்க முடியும். விரதம் இருந்து கிரகணம் முடிந்த உடன் வீட்டை கழுவிவிட்டு குளித்து  கோவிலுக்கு போய் விட்டு வந்து சாப்பிடலாம்.

மாலை நேரத்தில் கிரகணம் ஏற்படுவதால் அமாவாசை திதியில் காலை நேரத்தில் திதி தர்பணங்கள தரலாம் 
படையல் வைத்து வழிபாடு செய்யலாம்
கிரகண நேரம் முடிந்த பிறகு திதி கொடுப்பது சிறந்த பலனை தரும்

கற்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் 

நன்றி
அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்

.
மேலும்