நவகிரக பொங்கல்

By News Room

செவ்வாய் எனும் நெருப்பை அடுப்பில் ஏற்றி

சந்திரன் எனும் நீரை,

புதன் எனும் பித்தளை பானையில் ஊற்றி

சந்திரன் எனும் அரிசியில்

ராகு எனும் கருங்கற்களை நீக்கி உலையில் போட்டு

குரு எனும் வெல்லம் சேர்த்து

சுக்கிரன் எனும் முந்திரி சேர்த்து

சனி எனும் கருப்புகிஸ்மிஸ் சேர்த்து

புதனின் பசுமையை கொண்ட ஏலம் சேர்த்து

பொங்கிய பொங்கலை

சுக்கிரன் எனும் வெள்ளிதட்டில் இட்டு

கேது எனும் ஆன்மீக எண்ணத்தோடு

குரு எனும் குடும்பத்தோடு

சுக்கிரன் எனும் நட்போடு

செவ்வாய் எனும் மாடுபிடி வீரனோடு

சனி எனும் முதியோரோடு

ராகு எனும் பிற இனத்தாரோடு

சந்திரன் எனும் தெளிந்தமனத்தோடு

புதன் எனும் புதுமையாக

சூரியன் எனும் மகரசூரியனுக்கு படைத்து

நாமும் உண்போம் நண்பா.

.
மேலும்