காலத்தை இசைத்த கலைஞன் இளையராஜா 80

By News Room

காலத்தை இசைத்த கலைஞன்
இளையராஜா 80

ஜி குப்புசாமி

மின்நூல்

காலச்சுவடு பதிப்பகம்

37 பக்கங்கள்

மனம் முழுவதும் அன்பும், மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்த தருணங்களிலும், நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்து வெறுத்துப் போயிருந்த நாட்களிலும் துணையாக இருந்தது ராஜாவின் இசைதான்.

 பத்து வயதுகூட பூர்த்தியாகாத நாட்களில் கேட்க நேர்ந்த ராஜாவின் திரையிசைப்பாடல்கள் இவ்வளவு ஆண்டுகள் கழித்து கேட்கும்போதும் விவரிக்க இயலாத ஒருவித பரவச நிலையை உணர்த்திவிடுகிறது.

 ராஜாவுடனான சந்திப்பு பற்றிய குறிப்புகள், மின்னம்பலம் கட்டுரை, தி இந்து நடுப்பக்க கட்டுரை என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது இச்சிறுநூல்.

'ஏகாக்கிரக சிந்தனையோடு, மிக மிகக் கடுமையான உழைப்பில் தன்னைத்தானே வருத்திக்கொண்டு, தொழிலின் மீது அளப்பரிய பக்தியோடு, தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வகையில் இளையராஜா அபூர்வத்திலும் அபூர்வமான கலைஞர்தான்'.

 ஜி குப்புசாமி அவர்களின் மேற்கண்ட வரிகளே ராஜாவின் மீதான அவரது பிரம்மிப்பை விளக்கி விடுகிறது.

 ஒவ்வொருவரையும் ராஜாவின் ஒவ்வொரு பாடல் முழுமையாக வசீகரித்து, அகத்தில் நீங்காது நிலைபெற்று விடுகிறது.

 எனக்கு அவ்வகையில் மனதை ஈர்த்த ராஜாவின் பாடல் 'அரங்கேற்ற வேளை- ஆகாய வெண்ணிலாவே'.

.
மேலும்