புத்தக விமர்சனம்: பாரதியார் கவிதைகள் -பாரதியார்

By செய்திப்பிரிவு

பாரதியார் இந்த நூற்றாண்டின் மகாகவி புழுதி பறக்கும் எட்டையபுரத்தில் உதித்தவர்  முன்டாசு கட்டிய முரட்டு கவிஞர்.

எனக்கு என்னவோ பாரதிதாசன் என்னை ஈர்த்த அளவுக்கு இவரது கவிதைகள் என்னை  இது நாள் வரை பெரிதாக  ஈர்க்கவில்லை புத்தம் புதிய புதுக்கவிதைகளையே வாசித்தவன் என்பதால் இது நடந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

 பெரும்பாலான தெய்வங்களுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் இருக்கிறது ஆனால் பாரதா மாதாவுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார் பாரதியார் மனக்குளத்தானை அவரின் மனதில் நிறைத்து மனம் உருகி அகவல் பாடியவர் தான் இவர்.

வீராம்பட்டிணம்  செங்கழுநீர் அம்மன் மீது பாடல்களை இயற்றியவர் அல்லவா இவர் இயல்பாகவே பாரசக்தி பக்தர்.

பல்வகை பாடல்களை கவிதைகளை இயற்றியவர் எட்டையபுரத்து ஏககவி
பலவகையான மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பவர் இந்த கவிஞர்.

இந்த நூல் விகடன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது இதில் பதிப்பாசிரியர் மிக முக்கியமான அரிய பல கவிதைகளை பதிப்பித்துள்ளார்.
 
இவர் பேதை நெஞ்சே எனும் தலைப்பில் பாரதி எழுதியுள்ள கவிதைகளை பதிப்பித்துள்ளார் இதை படிக்கும் போது பேதை நெஞ்சே இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏது பெருமை இன்றைக்கு என்னென்னில் – ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்   எனும் உபதேச ரத்தின மாலை வரிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இது போல் இந்த நூல் முழுக்க முழுக்க பாரதியின் பெருமையை, அவர் உழைத்த உழைப்பை, அவரின் திறமைகளை வெளிப்படுத்துவதாகவே இந்த நூல் அமைந்துள்ளது.

பாரதியை நான் உளுந்தினும் உள்அளவே அறிந்திருந்தேன் இன்னும் அவர் நிறைய கொண்டாட பட வேண்டியவர்.

இன்னும் அவரை நிறைய அறிய வேண்டும் எனும் பேராவாவை இந்த நூல் தூண்டுகிறது.

பாரதியின் படங்கள்,வாழ்க்கை குறிப்புகள் இந்த நூலை மேலும் செழுமை படுத்துகிறது.

இந்த நூல் அறுநூறு பக்கங்களுக்குள்ளாக தான் இருக்கும் ஆனால் எனக்கு என்னமோ ஐந்தாறு நூற்றாண்டுகள் பின் சென்று பாரதியுடன் சுற்றிய உணர்வுகளை இந்த நூல் வாசகனுக்கு தருகிறது.

இது போன்ற பல நூல்கள் பதியப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் பதிப்பாசிரியர்கள்,பதிப்பகத்தார் முன் வந்து செய்ய வேண்டும்.

நான் குறிப்பாக திரு.கோமதி சங்கர் Gomathisankar Gosar போன்றோருக்கு இந்த கோரிக்கையை முன்வைத்து விடைபெறுகிறேன் ஏனெனில் கோமதி சார் மாதிரி பாரதியில் திளைத்தவர்கள் யாருமில்லை அந்த அளவுக்கு பாரதியை தனது காதலனாக ஏற்றுக்கொண்டவர் கோமதி சார்.

இதை பதிப்பித்த விகடன் பதிப்பகத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

பாராட்டுக்கள்.
 வாழிய செந்தமிழ்!
வளர்க நற்றமிழரர்!
வாழிய வாழிய வாழியவே!
வாசிப்பை நேசிப்போம்!
தொடர்ந்து பயணிப்போம்!
உங்களின்
தினேஷ் கண்ணா

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE