புத்தகம்: தமிழ் இந்து என்னும் கருவாட்டு சாம்பார் - க.இரா. தமிழரசன்

By செய்திப்பிரிவு

 "தமிழ் இந்து என்னும் கருவாட்டு சாம்பார் " என்கிற இந்த புத்தகம் மிகச்சிறந்த ஒரு ஆய்வு கட்டுரையாக நான் கருதுகிறேன் .

இந்த புத்தகத்தில் இருக்கிற ஒன்பது கட்டுரைகளையும் வாசித்து முடித்து இருக்கிறேன்   மிகவும்  கவனமாக ஆராய்ந்து  தோழர் க.இரா. தமிழரசன் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பார்ப்பனர்கள் எப்படி பிராமணர்கள் ஆனார்கள், பார்ப்பனர் என்ற சொல்லையும் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பார்ப்பனர்கள் செய்த தொழிலையும் இழிவு படுத்தியது யார் என்றும், தோழர் பெ.ம அவர்கள் கூறுகிற வலியுறுத்துகிற "தமிழ் இந்து" என்கிற சொல் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு அபாயகரமானது என்பதையும்,சாதிகள் தோன்றியது இப்பொழுது இருக்கிற நிலை மற்ற மதத்தில் புகுந்த சாதிய சிந்தனை ,பெரியார் ஏன் இந்து மதத்தில் இருந்து வெளியேறவில்லை என்பதையும்,தமிழர் மதங்களும், தமிழர் குலதெய்வ வழிபாடுகளும் தமிழ் கடவுள்களும் எப்படி இந்துமயமாகவும் பார்ப்பனியமயமாகவும் மாறிவிட்டன என்பதையும் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது. தமிழ் இந்து என்பதை ஏற்போரும்,எதிர்ப்போரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்...

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE