“அந்தபுள்ள சொன்னவடி கேக்கமாட்டீங்குது கொஞ்சம்கூட மரியாதை பெரியவுகட்ட இல்ல எடுத்தெரிஞ்சு பேசுது ஆரு சொன்னாலும் கட்டுமட்டுக்கு அடங்கமாட்டீங்குது என்னா பண்ணுறதுன்னுதெரியல”ன்னு வீட்டுக்குவந்த அக்கா வீட்டுகாரர்கிட்ட கொறசொல்லிக்கிட்டு இருந்துச்சு ருக்குமணி.
அவளோட மகளப்பத்தித்தான் இந்தப் புகாரு. அவுக வீட்டுக்கு போனவருசம் வந்துட்டுப் போனப்புறம் இப்பத்தான் வாராரு அவங்களோட அக்கா புருசன் பெருமாளு.. அவரு வந்தவர அந்தபுள்ள ”வா” ன்னுகேக்கல வந்தவன்ன ரூமுக்குள்ள போனவதான் . அங்கயேகெடக்கா. ருக்குமணி போயி எவ்வளவோ சொல்லிப்பாத்தா. அவ
”முடியாது” ன்னுட்டா.
அவளும் சொன்னா
“அவரு தப்பா நெனச்சிக் குவாரு வந்து வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்றதுல என்ன கொறஞ்சுபோயிடுவ”ன்னா
அதுக்கு அவமக செல்விசொன்னா
“ ஒனக்கு வேணும்னா போய வரவேத்துக்க தலையில வைச்சி கொண்டாடு என்னால முடியாது”ன்னு திட்டவட்டமாசொல்லிட்டா
“ஒனக்கு அவ்வளவு பிடிவாதமா நாளெழுத்து படிச்சிபுட்டோம்ன்ற திமிறா”ன்னு கேட்டா ருக்குமணி
“ஆமா அப்புடித்தான் வைச்சிக்க ஒன்னமாதிரி என்னால இருக்கமுடியாது”
ன்னா.
ருக்குவுக்கு கோவம் வந்துடுச்சு
“யாரப்பாத்து என்னா சொல்ற கழுத?”ன்னு கோவமாக்கேட்டா
”எல்லாம் வந்திருக்குதே அந்தக்கழுதையத்தான் சொல்றேன்
னா
ருக்குமணி அதிர்ந்துபோயிட்டா
ருக்குமணியோட புருசனுக்குஅது கிட்னிக்கு ரத்தம் போற கொழாயில ஆரம்பிச்சிசது. ஆரம்பத்துல மூத்திரம் மஞ்சலா போக அதை மஞ்சக்காமாலையா நு சோதனை பண்ணிப்பாத்ததுல மஞ்சக்காமாலை இல்லைன்னு ரிசல்ட் வந்துச்சு
ஆனா மூத்திரம் சரியாகல. அதுக்கு மேல ஒரு பெரிய ஆஸ்பத்திரியில ஸ்கேன் பண்ணிப்பாத்ததுல அந்த எடத்துல ஒரு கட்டி இருந்துச்சு. அதை வெட்டி எடுத்துட்டு ஒரு வலையம் வைச்சி கிட்னிக்கு ரத்தம் போக ஏற்பாடு பண்ணுனாங்க
ஆனா அப்புறமாத்தான் தெரிஞ்சது அது புத்துநோய்க்கட்டின்னு. இந்தக்கால கட்டத்துல ஒதவிக்கு அவ புருசோனோட நண்பர்கள் ஒதவிசெஞ்சாங்க. அப்ப அப்ப இவளோட அக்கா புருசனும் வந்து பாத்துக்கிட்டாரு. அவரு ஒரு பள்ளிக்கூடத்துல வாத்தியாரா இருந்தாரு
கொஞ்ச நாளில் அவ புருசன் அந்தப்புத்துநோய் உடம்பு பூராம் பரவி செரமப்பட்டு இறந்துட்டாரு. அதுக்கப்புறம் அவளோட அக்கா புருசன் அடிக்கடி வந்து போனாரு
அவரு வேலசெஞ்ச இடத்துல இருந்து கொஞ்சம் பணம் வந்துச்சு. அப்புறம் தெரிஞ்சவுக வீடுல வேல இதுல குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு
ருக்குமணிக்கி வெவரம் அவ்வளவா போதாது. மகனும் சின்னவன் அதுநாலஅவ எல்லாத்தையும் அவளோட அக்கா புருசன் பெருமாளுக்கிட்டக் கேட்டுத்தான் செய்வா. அதுநால அடிக்கடி வந்து ஒதவிசெய்வாரு பெருமாளுஅவருமேல மரியாத ரொம்ப வைச்சிருந்தா ருக்குமணி.
அவரு போன வருசம் வந்துட்டுப்போனப்புறம் இங்க வாரதில்லகேட்டா
“எனக்கு அங்க மரியாத இல்லஒம்பொண்ணு சரியா கவனிக்கிறதில்ல ஒன்னோட குடும்பத் துக்கு எவ்வளவு ஒதவிசெஞ்சேன் ஆனா செல்வி மதிக்கமாட்டீங்குறா”ன்னாரு
அதுக்கு ருக்குமணி
“ நீங்க வாங்க அவகிட்ட எடுத்துச்சொல்றேன்”னா. அதுக்கப்புறம் வர சம்மதிச்சிச்சாரு. அப்ப
வந்தப்பபோதுதான் இந்தப்பிரச்சனை பெருசா யிடுச்சு
”அவரக்கழுதன்னா சொல்ற”ன்னுகேட்டா ருக்குமணி அதுக்கு
“இல்ல தப்பாசொல்லிட்டேன் அது தெருநாயி”ன்னா
“அவருகாதுல விழுந்துடப்போகுதுடி மெதுவாப்பேசு”
ன்னா ருக்குமணி
அதுக்கு செல்வி
“ விழுகட்டும் நல்லாவே விழுகட்டும் அது சூடு சொரண இல்லாத நாயி அதுதான் வந்துருக் குன்னா”
ருக்குமணியால தாங்க முடியல கோவத்தோட உச்சிக்கேபோயிட்டா அவளோட முடியப்புடிச்சி இழுத்துட்டு வந்து அவருகிட்ட
“ மன்னிப்புக் கேளு”ன்னா
அதுக்கு
“உன் கால்ல எவ்வளவு வேண்ணாலும் வுழுகிறேன் ஆனா அவனுக்கு மரியாத கெடையாது”ன்னா
அடிக்கப்போன அவகிட்ட பெருமாள்
“ நான் போயிடுறேன்னு
அவள விட்டுடு ன்னு. சொல்லிட்டுக் கெளம்பிட்டாரு
ருக்குமணிக்கி ஒண்ணும் புரியல அப்ப செல்வி சொன்னா
“பாத்தியாஅவன் ஏன் ஓடுறான்னு தெரியுதா?
போனதடவ இங்க அவன் வந்திருந்தப்ப நடந்தது இது
மொதல்லயே அவன் பார்வை சரியில்ல
வழிஞ்சான் . பெரியப்பாவாச்சேன்னு நானு கண்டுக்கல்ல.
அதுக்கப்புறம் அவன் என்ன தொட்டுத்தொட்டுப் பேசுனான். சரி பெரியப்பாதானனு நான் பெருசா எடுத்துக்கல
அப்புறம் இன்னுகொஞ்சம் மேல போய் தப்பான இடங்களில் தெரியாத மாதிரி தொட்டான்
நான் தெரியாமப்பட்டிருக்கும் நு பெருசா எடுத்துக்கல ஆனா அதுதான் தப்பாப்போச்சு
அவன் என்ன டெஸ்ட் பண்ணிப்பாத்திருக்கான்
நான் எதுவும் சொல்லாததால என்னத் தப்பா எடை போட்டுட்டான்
எங்க காலேஜ் ல ஒரு பெண் பேராசிரியர் சொன்னாரு
“பெண்களுக்கு குட் டச் னுன்னா என்ன பேட் டச் னா என்ன நு சொல்லிக்கொடுத்தாரு. அது பேட் டச்சுன்னா மூஞ்சி அறைஞ்சிரு அதுவும் போக ஆபத்தான சூழ்நிலைனு ஒனக்குத்தெரிஞ்சா நீ எப்போதும் உன்னுடன் பெப்பர் ஸ்பிரே வைச்சிக்க ஆபத்துன்னு வந்தா அதை எதிரி மேல் ஸ்பிரே பண்ணு அவன் நிலை குலைஞ்சு போயிடுவான் நீ உன்னக்காப்பாத்திக்கலாம்” சொல்லிக்குடுத்திருந்தாங்க.
”அன்னிக்கி காலையில நீ வேலைக்கி போயிட்ட.அவன் கொஞ்சம் லேட்டாப்போறேன்னு வீட்டுல தங்கிட்டான் எனக்கு அன்னிக்கி காலேஜ் லீவு நான் வீட்டுல இருந்தேன். அவன் ஹால்ல இருந்தான்
நீ போனப்புறம்என்னோட ரூமுக்குள்ள வந்து அசிங்கமாப்பேசினான் நான் திட்டுனேன் அதுக்கு
“இதெல்லாம் சகஜம்தான்உங்க குடும்பத்துக்கு எவ்வளவோ செஞ்சிருக்கேன் நீ கொஞ்சம் அனுசரிச்சிபோனா இன்னும் நெறயா செய்வேன்”னான்
நான் சொன்னேன்
“நீ எனக்கு அப்பா மாதிரி இப்படிப் பேசலாமான்னு” கேட்டேன்
அதுக்கு அவன்
”நான் ஒன்னும் ஒங்க அப்பாகூடப்பொறக்கல. அங்கிள்ன்னு வைச்சிக்க”ன்னான். நான்சொன்னேன்
“வெளியபோடா நாயே”ன்னு அதுக்கு
அவன் கொஞ்சம் அத்துமீறுனான் நான் இதுமாதிரி நேரங்கல்ல பாதுகாப்புக்கு வைச்சிருக்குற பெப்பர் ஸ்பிரேய எடுத்து அவன் மூஞ்சில அடிச்சேன் அவனால தாங்கமுடியல.
“அம்மாகிட்ட சொல்லிடாத”ன்னு
கால்ல வுழுந்தான்
“ பொழச்சிப்போ நாயே இனிமே இந்தப்பக்கம் வந்துடாத வந்தா மரியாதை இல்ல”ன்னு சொல்லிட்டேன்
உன் கிட்டயும் சொல்லல.அதுநாலதான் அவன் இவ்வளவுநாளா இங்க வரல நீதான் வர வைச்சிட்ட”ன்னா.
அதைக்கேட்ட ருக்குமணி கண்ணுல இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பிச்சது
“.என்ன மன்னிச்சிருதாயி ஒன்னப்புரிஞ்சிக்காம என்னன்னவோ பேசிட்டேன்”னா
அப்ப செல்வி சொன்னா
“ ஒம்மேல தப்புல்ல ஒனக்கு வெவரம் பத்தாது. இப்பச்சொல்லு அவனத்திட்டுனது சரியா தப்பா என்மேல தப்பிருந்தா சொல்லு”ன்னா
அதுக்கு ருக்குமணி சொன்னா
“நீன்றதுனால அவன அத்தோட விட்டுட்ட நானா இருந்தா அன்னிக்கி வீட்டுல அவனோட பொணம் வுழுந்திருக்கும்”ன்னு
செல்விசொன்னா
“அதான் நான் உன்கிட்ட சொல்லல”ன்னு
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்