நீட் - சிறுகதை

By சரவணன்

கந்தசாமி தன்னோட சம்சாரம் வள்ளிக்கிட்ட சொல்லிட்டு இருந்தான் எப்புடியாவது நம்ப மகளை டாக்டர் படிக்கவைச்சி டாக்டர் ஆக்கிடனும். நம்மபரம்பரையிலயே ஆரும் டாக்டர் கெடையாது. ஓரளவுக்கு படிச்சவங்கதான் எல்லாம். நான் படிக்கையில இந்த வ்சதியெல்லாம் கெடையாது. நான் பத்தாவது படிக்கிறதுக்கே படுபாடாப்போச்சு. அதுக்கு மேல படிக்க குடும்ப வறுமை என்ன அனுமதிக்கல.

கெடைச்ச வேலையபாத்துட்டு வந்துட்டேன். அப்ப ஓட ஆரம்பிச்சது. இன்னும் வாழ்க்கையில ஓடிட்டு இருக்கேன். இப்ப நம்ம மக பிளஸ் 2 படிக்குது. அந்தப்புள்ளைய நல்லாப்படிக்கச்சொல்லிருக்கேன். அதுவும் நல்லாத்தான் படிக்குது. ஆனா டாக்டர் படிக்க நீட் எழுதனுமாமே அதுக்கு கோச்சிங் போகனுமாமே ஃபீஸ் லட்சக்கணக்குல சொல்லுறாங்களாம். அதான் என்னா பண்ணுறதுன்னு தெரியலன்னாரு

அதுக்கு வள்ளி சொல்லிச்சி அம்புட்டுகாசுக்கு எங்கயா போவ கைல கெடைக்கிறது வாய்க்கும் கைக்கும் சரியா இருக்கு. புள்ளைய இப்பபடிக்கவைக்கிறதே எல்லாம் கவருமெண்டு ஸ்கூல் 

செலவில்லைன்றதுனாலதான் இதுல எங்க கோச்சிங் அப்புறம் நீட்டிக்கிட்டேபோறதுக்குன்னு சொல்லிட்டு இருந்தா.

அவரோட மக செல்வி அப்பா எப்புடியாவது என்டரன்ஸ் ஃபீஸ் கட்டிடுங்க என் பிரண்டுமூலமா ஆன் லைல அப்ளை பண்ணிடலாம் நான் நீட் எழுதுறேம்பா. அவ கோச்சிங் போறா. அங்க தார ஸ்டடி மெட்டீரீயல்ஸ் எல்லாம் தாறேன்னு சொல்லிருக்கா. நான் படிச்சி அதுல பாஸாயிடுவேன்ற நம்பிக்கை எனக்குஇருக்கு.ன்னா.

கந்தசாமி காசைப்பொறட்டி ஃபீஸ் கட்டகுடுத்தாரு. அவளும் எண்ட்ரன்ஸ்க்கு அப்ளைபண்ணிட்டு படிச்சிட்டு இருந்தா. ஒரு நாளைக்கி 14 மணி நேரம் படிப்பு. அவளும் படிச்சிட்டு இருந்தா
இதுல அடைப்புன்னால பள்ளிக்கூடம் தொறக்காதது வசதியாப்போச்சு தினம் ஆன்லைகிளாஸ்க்கு அவ பிரண்டு வீட்டுல போய் படிக்க ஆரம்பிச்சிட்டா. இவங்க வீட்டுல அந்த வசதிகெடையாதே அதுனால அவளோட பிரண்டும் இவளுக்கு ஒதவி பண்ணுனா. அவங்க வீட்டுல

அந்தப்புள்ளைக்கி ஒரே அட்வைஸ் பணத்தை லட்சலட்சமா கொட்டிருக்கோம் . பாத்துப்படி. எப்புடியாவது கஸ்ட்டப்பட்டு மார்க் எடுத்துடும்மா. நம்மலுக்கு வேற வழியில்ல. இருந்த காசெல்லாம் பொறட்டி கடன் வாங்கி கட்டிருக்கோம். பாத்துப்படின்னு அட்வைஸ் குடுத்துட்டே இருப்பாங்க. அவளும் செல நேரம் எரிச்சலாயி தெரியும்மா அதான் விழுந்து விழுந்து படிக்கிறேன்ன்னு சொல்லுவா

இதுக்கு நடுவுல கோச்சிங்கிளாஸ்ல ஆன் லைன் டெஸ்ட் வைச்சாங்க அத அவ எழுதுனா. வள்ளிக்கிளாஸ்ல சேராததால எழுதல. எழுதி முடிச்சிட்டு அந்தப்பொண்ணு சொன்னா. ரொம்ப டஃப்பா இருக்கு என்னால அவ்வளவு மார்க் ஸ்கோர் பண்ணமுடியுமான்னு தெரியலன்ன இவகிட்ட கண்ணக்கசக்குனா. அதுக்கு வள்ளி சொன்னா இது மாடல் எக்ஸாம் தான. இது ஒரு தயாரிப்பு அவ்வளவுதான் மார்க் நெறையா வந்தா சந்தோசப்படு. இல்லைன்னா அடுத்ததுக்கு படிக்க ஆரம்பி . இதுக்குப்போய் ஏன் கவலைப்படுறேன்னு சொன்னா

அப்ப அந்தப்புள்ள சொல்லிச்சி . அது சரி எங்க அப்பாம்மாவுக்குயாரு பதில் சொல்றது. திட்டுவாங்களேன்னு கண் கலன்குனா. அவங்ககிட்டயும் சொல்லு. அடுத்த டெஸ்ட் நல்லா எழுதுவேன் கவலைப்படாதீங்கன்னு.ன்னா.

அவ பயந்தமாதிரியே டெஸ்ட் மார்க பாத்துட்டு அவங்க அப்பா அவளைத்திட்டினாரு. ஒன்னத்துக்கும் பிரயோஜனமில்லாத பொண்ணு நீ. காசுபூராம் போச்சுன்னு கத்துனாரு. அப்ப அவ சொன்னா அப்பா கவலைப்படாதீங்க . அடுத்தது நல்லா எழுதுவேன்னா. அப்ப கூட இருந்த வள்ளி சொன்னா. 

கவலைப்படாதீங்க அங்கிள் அவ அடுத்ததுல நல்ல மார்க் எடுப்பான்னு சொன்னா. அப்ப அவரு ஒன்னமாதிரி ஓசில படிச்சா போனாப்போகுதுன்னு விட்டுடலாம். லட்சக்கணக்குல காசு கட்டிருக்கேன்மா. அதுக்கு பலன் வேணாம்..... ஒழுங்கப்படிக்கச்சொல்லு உன் பிரண்டைன்னு கத்திட்டுபோனாரு. அவர் சொன்ன வார்த்தை அவளைக்காயப்படுத்திடுச்சு.

வள்ளி சொன்னா இனிமே நான் இங்க வந்தா நல்லாருக்காது நான் வாரது ஒங்கப்பாவுக்குப்புடிக்கலன்னா. அதுக்கு அந்தப்பொண்ணு சொல்லிச்சி அவரு அப்புடித்தான் கோவத்துல ஒளருவாரு. அப்புறம் சரியாகிடுவாரு. நீ வா எனக்கு நெறையா சந்தேகம் நீதான் தீத்துவைக்கிற . ப்ளீஸ் வாம்மா. ந்னு கெஞ்சினா. வள்ளிக்கு கஸ்ட்டமாப்போச்சு. அவளோட தன் மானம் எடம் குடுக்கல நீ என்னா சொன்னாலும் இனிமே நான் வர என் தன்மானம் எடம் கொடுக்காது

நான் இனிமே வரலைன்னுசொல்லிட்டுபோயிட்டா,
நீட்டுக்கு தேதியும் வந்துருச்சு. மறுநாள் தேர்வு. வள்ளி தேர்வுக்கு மொதநா படிச்சிட்டு இருந்தப்ப அவளுக்கு ஒரு போன் வந்துச்சு. அவ அப்படியே புத்தகத்தை மூடி வைச்சிட்டு வெளியே போயிட்டா. அவங்க அம்மாவும் அப்பாவும் அவளுக்கு போன்ல பேச முயற்ச்சி பண்ணுனாங்க. அது சுச்சாப்புன்னு வந்துச்சு. எங்க போனான்னு தெரியல. அவங்களுக்கு வயத்தை கலக்குச்சு. பேப்பர்ல அங்க அங்க வார செய்திகள் பயத்தை தூண்டுச்சி. ராத்திரி பூராம் வரல போனுமெடுக்கல. என்னா பண்ணுறதுன்னு தெரியல

அவ ஃபிரண்டுக்குபோன் பண்ணலாமுன்னா நம்பரும் தெரியல. வீடும் தெரியல. ராத்திரி பூராம் தூங்காம பயத்தோடயே இருந்தாங்க. என்னா ஆச்சுன்னு தெரியல. காலையில ஆறு மணிக்கி வள்ளி வீட்டுக்கு வந்தா. அவளோட அம்மாவும் அப்பாவும் அவளப்பாத்துட்டு கோவமா பேச ஆரம்பிச்சாங்க எங்கடி போன ராத்திரி பூறாமுன்னு

அப்ப அவ சொல்ல ஆரம்பிச்சா. நான் ஃபிரண்டு வீட்டுக்குத்தான் போயிருந்தேன். நேத்து சாயங்காலம் நான் படிச்சிட்டு இருக்குறப்ப அவ போன் பண்ணுனா. போன்ல அழுதா. என்னடின்னு கேட்டேன். ரொம்ப பயமாருக்கு. நாளைக்கி எக்சாம். ஆனா எனக்கு நம்பிக்கை வரல தேருவேன்னு. நீ வேற இங்க வாரதில்லையா. எனக்கு கஸ்ட்டமாப்போச்சு.எங்க அப்பாவேற வந்து இப்பத்தான் அடவைஸ் மார்க் எடுத்தே ஆகனும்ன்னு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு நான் என்ன பண்ணுறதுன்னு தெரியல ரொம்பக்கொளம்பிப்போயிருகேன்னா. நான் இரு நான் வறேன்னு சொல்லிட்டு அவங்க வீட்டுக்குப்போனேன்

அவ அங்க அழுதுட்டுஇருந்தா. நான் அவங்க அப்பாவை கூப்புட்டேன் அவர்கிட்டபேசுனேன். சார் நீங்க பணம் கட்டிருக்கீங்க உண்மைதான் அதுக்காக பொண்ணுக்கு அழுத்தம் ரொம்பக்குடுக்காதீங்க. மன அழுத்தம் வந்துச்சுன்னா. பயம் வந்துரும். படிக்க முடியாது படிச்சாலும் மனசில தங்காது. அதுக்குப்பதிலா நம்பிக்கை குடுங்க. என்ன வானாலும் நாங்க இருக்கோம்ன்ற தைரியம் குடுங்க. அப்பத்தான் புள்ளைங்க கவலைப்படாம படிக்க முடியும். உங்க அழுத்தத்துனால இவ தப்பான முடிவ எடுக்க இருந்தா. 

நான் வந்துதான் ஆறுதல் சொன்னேன் உங்ககிட்டபேசுறதாவும் சொன்னேன் நீட் ஒண்ணும் பிளஸ் 2 எக்சாமில்ல. ஒரே தடவையில ஜெயிக்கிறதுக்கு. இதுல ஜெயிப்போம் இல்லைன்னா அடுத்த தடவ எழுதுவோம்

வடநாட்டுல இதுக்குண்ணே பிளஸ் 2 முடிச்சிட்டு ஒருவருசம் வீட்டுல ஒக்காந்து பயிற்ச்சி எடுத்து எழுதுறாங்க. நாம ஒரே வருசத்துல ரெண்டையும் செய்யிறோம். இதுல வேகத்தைவிட விவேகம் முக்கியம்ன்னு சொல்லி புரியவைச்சேன். அப்புறம் ராத்திரி பூறாம் அவளுக்குதொணையா இருந்தேன் ரெண்டுபேரும் படிச்சோம் . காலையில எக்சாமுக்குக்கெளம்பச்சொல்லிட்டு நான் வீட்டுக்கு வந்தேன்னு சொன்னா.

அவளைப்பாக்க அவங்க அம்மா அப்பாவுக்கு பிரமிப்பா இருந்துச்சு
என்ன ஒரு மெச்சூரிட்டி நம்ம மகளுக்குன்னு கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்தாங்க.
அப்ப வள்ளி சொன்னா டாக்டர் ஆகுறதே உயிரைக்காப்பாத்தத்தான் தன்னோட உயிர் அதுக்கு முக்கியம்ன்னு தெரிஞ்சிகிட்டா பிரச்சனையில்ல.ராத்திரி நான் அங்க இருந்ததால சரியா படிக்க முடியல.

 ஆனா இப்பவே ஒரு உயிரைகாப்பாத்திட்ட சந்தோசம் வந்துர்ச்சு. தொடர்ந்து முய்றச்சி பண்ணுனா நான் நிச்சயம் ஒரு நல்ல டாக்டர் ஆவேன்னு கண்ணு கலங்கச்சொன்னா...அப்ப சொன்னாங்க நீ நிச்சயம் டாக்டர் ஆவம்மா... சொல்லும்போது அம்மாவுக்கும் அப்பாவுக்கு கண்ணு கலங்குச்சு.

(பின் குறிப்பு இது முழுக்கற்பனைக்கதை)
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE