நான் ஒரு பிரபல பத்திரிகையில் முக்கியமான பொறுப்பில் இருந்த போது (1979-80) இவரை பேட்டி எடுக்க சென்றோம் ஆசிரியருக்கு அடுத்த post இல் இருந்த ஒருவர் (அவர் எழுத்தாளரும் கூட மலர் ஒன்றின் பெயர் இவர் புனை பெயர் ) அதிக பிரசங்கித் தனமாக கூட வந்த பெண் ஊழியர்களை impress செய்ய கோணங்கித் தனமான சேஷ்டைகள் செய்வதும் சுவாமிகளை ஏதோ கேள்வி கேட்க கையை கையை தூக்குவதுமாக இருந்தார்.
இதை கவனித்த சுவாமிகள் தீர்த்தத்தை எடுத்து அந்த கை மீது வீசினார். உடனே அந்த நண்பர் கை அசைவற்று நின்றது. (ஸ்தம்பன பிரயோகம்) மேலே தூக்கவும் முடியவில்லை .கீழே இறக்கவும் முடியவில்லை. வலி தாங்க முடியாமல கதறினார். அரை மணி அந்த நிலை நீடித்தது. பிறகு யாவரும் வேண்டவே மீண்டும் புனித நீர் தெளித்து சரியாக்கினார். நண்பர் சுவாமிகளை விழுந்து விழுந்து கும்பிட்ட போதும் சுவாமிகள் சினம் தணியவில்லை.
பிறகு அந்த எழுத்தாளர் அதிகம் விளங்கி வரவில்லை. பத்திரிகை ஆசிரியர் மரணம் அடைந்தார். இவர் வேலை போனது. நான் வேறு ஆங்கில தினசரிக்கு போய் விட்டேன் . பன்றிமலை சுவாமிகள் நான் திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கும் போது (1970 -72) செய்த ஒரு அற்புதம் இன்னொரு முறை எழுதுகிறேன்.