வால்மீகி- விஞ்ஞானச் சிறுகதை

By சரவணன்

அந்த அரங்கம் தொழிலதிபர்களாலும் அரசியல் பிரமுகர்களாலும் பத்திரிக்கையாளர்களாலும் நிறம்பிவழிந்தது. அந்த ஆண்டின் மிகச்சிறந்த தொழிலதிபர்களைப் பாராட்டும் விதமாகமாகவும் சிறந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் முகமாகவும் மத்திய மந்திரி விருதுகளை அறிவித்து வழங்கிக்கொண்டிருந்தார். அதன் மிக உயரிய விருது அப்போது அறிவிக்கப்பட இருந்தது. அனைவரும் அறிவர் அது வால்மீகிசாப்ட்வேர் சொல்லூசன்ஸ் கம்பெனிக்குத் தான் கிடைக்கும் என்று. ஏனென்றால் மிகக்குறுகியகாலத்தில் வளர்ந்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதோடல்லாமல் அரசாங்கத்தின் பயன்பாட்டுக்கும் ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் வழங்கும் பல கோடிக்கணக்கான காண்ட்ராக்ட் அந்தக் கம்பெனிக்குத் தான் கிடைத்திருந்தது. 

மக்கள் எதிர்பார்த்தது போலவே மந்திரி அந்த விருதை அதன் CEO வால்மீகி அவர்களுக்கு அறிவித்தபோது. கைதட்டல்கள் விண்ணைப் பிழந்தன. வால்மீகி அவர் கம்பெனி நிறுவனர் மதன்லால் உடன் வந்து விருதைப் பெற்றுக் கொண்டார். அப்போது வால்மீகி அதை மதன்லாலுக்கு சமர்ப்பிப்பதாகச் சொன்னார். 

அப்போது நிருபர்கள் அவரை பேட்டி எடுத்தனர். ”எப்படி இதைச் சாதித்தீர்கள்?” என்று. அப்போது வால்மீகி சொன்னதைக்கேட்டு அதிர்ந்து போயினர்.அவர் சொன்னார்” நான் இந்த கம்பெனிக்கு வருவதற்கு முன்பு ஒரு திருடனாக இருந்தேன் அது உங்களுக்குத் தெரியுமா ?’என்றார். ”என்னை இந்த அளவுக்கு வளரவைத்தவர் எனது கம்பெனியின் நிறுவனர் மதன்லால்தான் என்று சொல்லி அது எப்படி நடந்தது ”என கூறத்தொடங்கினார்.

மதன்லால் ஒரு பெரிய தொழிலதிபர். அவர் தனியாக இருப்பதாலும் வீட்டையும் சொத்துக்களையும் பராமறிப்பது மிகவும் சிரமாக இருந்தது. அப்போதுதான் ரோபோட்டிக் விஞ்ஞானி சங்கர் ஒரு ரோபோவை வடிவமைத்திருந்தார் ஹியூமனாய்டு என்ற வடிவில் இருக்கும் அது. பார்ப்பதற்கு மனிதன் போலவே இருந்தாலும் அதன் மூளை பன்மடங்கு. அதன் செயல்பாடுகள் அபாரம் வாய்வழியாக இடும் கட்டளைகளைப்புரிந்து கொண்டு ஒரு மனிதன் போல் ஆனால் பிழையில்லாமல் வேகமாகவும் செய்ல்படும் ஆற்றல் படைத்தது. அதை வாங்குவது என்று மதன்லால் முடிவெடுத்தார்.

அதற்காக விஞ்ஞானி சங்கரிடம் பேசி இருந்தார். அதைப் பார்வையிட அவரது ஆய்வுக்கூடத்திற்குச்சென்றிருந்தார். ஆய்வுக்கூடத்தில் சென்றால் ரோபோவை காணவில்லை. எங்கே எனக்கேட்ட மதன்லாலுக்கு சங்கர் சற்றுபொறுங்கள் எனசொல்லிவிட்டு ”மித்ரா” என அழைத்தவுடன் ஒருவர் வந்தார். அவரை மதன்லாலுக்கு வணக்கம் சொல்லச்சொன்னார்.

அவர் அருகே வந்து வணங்கினார். அப்போது சங்கர் சொன்னார் இந்த மித்ராதான் என்னுடைய கண்டுபிடிப்பு என.மதன்லால் உண்மையிலேயே அசந்து போய்விட்டார். அப்படியே மனிதன் போலவே இருந்தது மித்ரா.

அப்போது சங்கர் சொன்னார் மதன்லாலிடம் இதை ச் சோதித்துப் பார்க்கலாம் என. மதன்லால் மித்ராவை சங்கரை வணங்கச் சொல்லி ஆணையிட்டார். அது அசையாமல் நின்றது உடனே மதன்லால் சிரித்தார். ”அதற்குள் ரிப்பேர் ஆகிவிட்டதா?”என
அப்போது சங்கர் சொன்னார் .

“ இது குரல் அதிர்வில் புரிந்து கொண்டு வேலைசெய்யும் டிசைன். உங்களுடைய குரலை இன்னும் நான் பதிவு செய்யவில்லை. இப்போது பதிவுசெய்கிறேன் பிறகு பாருங்கள்” என்று சொல்லிவிட்டு மதன்லாலின் குரலைப்பதிவு செய்தார்.பின் ”இப்போது சோதித்துப்பார்க்கலாம்” என்றார். 
அப்போது மதன்லாலிட்ட கட்டளைகளை அழகாக நிறை வேற்றியது. அசந்துபோய்விட்டார். அதன் மூலமாக பேங்க் அக்கவுண்ட் வீட்டில் பீரோலாக் வெளிக்கதவு லாக டிவி பிரிட்ஜ் ஏசி எல்லாம் வாய்மொழியில் ஒருமுறை சொல்லிவிட்டால் எல்லாவற்றையும் பராமரிக்கும். வேலைகளை செய்து முடித்துவிடும். சமையல் கூடத்தெரியும். தலைவலி என்றால் தலை பிடித்துவிடும். 

சுருக்கமாகச்சொன்னால் அதுஒரு தலைவலிதராத மனைவி .சொல்பேச்சுக்கு மறுபேச்சுக்கேட்காத வேலைக்காரன். ஏமாற்றாத மனிதன்
மதன்லாலுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதைத்தன் வீட்டுக்கு வாங்கிச்சென்று மொத்தப்பொறுப்பையும் அதனிடம் ஒப்படைத்தார் 
சங்கர்.

“ ஒருவேளை அது தவறுசெய்தால் அவர்கையில் கொடுத்த சிவப்பு பட்டனை அழுத்தினால் போதும் அது செயல் இழந்துவிடும் . பிறகு சங்கரிடம் தெரிவித்தால் அவர் வந்து சரிசெய்வார்” எனக் கூறியிருந்தார்.

மித்ராவின் பணியில் மதன்லால் வாழ்க்கையை அனுபவித்தார் என்றுதான் சொல்லவேண்டும். எல்லாவற்றையும் அதுவே பார்த்துக்கொண்டது. தனக்குத்தானே சார்ஜ் ஏற்றிக் கொண்டது. 
மதன்லால் சொன்னதெல்லாம் அருமையாகச்செய்தது.

அப்போது தான் மூன்று திருடர்கள் அவர் வீட்டைக் கொள்ளை யடிக்க திட்டமிட்டனர். அதற்கு நாள் குறித்து அவர் வீட்டுக்கும் சென்று நோட்டம் பார்த்தனர். அப்போதுதான் அவர்கள் மித்ராவைப்பார்த்தனர். 

அவர்களின் வால்மீகி மிகவும் புத்திசாலி. அவனுடைய ஸ்கெச் எப்போதும் சிறப்பாக இருக்கும். திருடப்போகும் வீட்டை குறைந்தது மூன்றுநாட்கள் அவன் நோட்டமிடுவது வழக்கம். அப்படி நோட்டமிட்டபோதுதான் அவன் மித்ராவைப் பற்றித் தெரிந்து கொண்டான். மித்ரா செயல்படும் விதம் அதன் டெக்னாலஜி எல்லாம் புரிந்து கொண்டான் 

அதனால் கம்ப்யூட்டர் வைரஸ் தயாரிக்கும் ஒருவரை அனுகினான்
அவரிடம் சென்றபோது அவர் சொன்ன விசயங்கள் அவனை ஈர்த்தனஅவன் அவரிடம் சில தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டான் அதன்பின் அதில் ஆர்வம் ஏற்பட அதுசம்பந்தமான புத்தகங்களைப்படித்து தேர்ச்சியும் பெற்றான் அவனால் ஒருமாதத்தில் சாதிக்கமுடிந்தது
அதன் பின்னர் மதன்லால்வீட்டில் திருட நாள் குறித்தான்

அதற்கான சாதனங்களைத்தயார் செய்தான். அதற்காக சிக்னல் ஜாமரை ரெடி செய்தான். அத்தோடு ரோபோவின் உள்ளே தனக்கான சாப்ட்வேரை தயார் செய்தான் அதுதான் வைரஸ் அது உள்ளே சென்றால் அதன் மெமரியை அழித்துவிடும். பின்னர் தன்னுடைய புரோக்கிராமை அதில லோடுசெய்தால் ரோபோ தன்வசமாகிவிடும். அதன் பின்னர் ரோபோவே கேட்கும் பொருள்களை எடுத்துத்தரும். அவன் சொன்னதுபோல்பணத்தை பரிவர்த்தனை செய்யும். 

திட்ட மிட்டதுபோலவே அன்று மூவரும் மதன்லால் வீட்டிற்குச்சென்றனர்.
மாடிவழியாக வீட்டை அனுகி சிக்னல் ஜாமரைப்பயன்படுத்து ரோபோவை செயலிழக்கசெய்தான் வால்மீகி அதன் பின் எளிதாக வீட்டிற்குள் நுழைந்து வைரஸை ரோபோவுக்குள் அனுப்பினான். பின் எளிதாக தன்னுடைய புரோகிராமை லோடுசெய்து ரோபோவை தன் வசப்படுத்திவிட்டான் 
இப்போது அவன் சொன்னதெல்லாம் ரோபோசெய்தது. பொருள்கள் பணம் மற்றும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டிருந்தபோது மதன்லால் முழிப்புவந்து எழுந்துவிட்டார். அப்பாது ரோபோ மித்ரா பொருட்களை யெல்லாம் திருடர்களிடம் கொடுத்துக் கொண்டி ருந்தது கண்டு அதிர்ச்சியடந்தார். 

அந்த அதிர்வில் அவருக்கு நெஞ்சுவலிவந்துவிட்டது. நெஞ்சைப்பிடித்துக்கொண்டு துடித்தார்
அப்போது வால்மீகி அவரைப்பார்த்து உடனே அவரைத் தாங்கிப் பிடித்தான் மற்ற இருவரும் வா ஓடிவிடலாம் என்று சொன்னபோது வால்மீகி சொன்னான் உயிருக்குப்போராடும் இவரை காப்பாற்றியே ஆகவேண்டும் அதுதான் மனிதாபிமானம்.என்று சொல்லி அவரைப்படுக்கவைத்து முதல் உதவி செய்தான். உடனே மருத்துவமனைக்கு போன் செய்தான்கொஞ்ச நேரத்தில் அவனுடைய முதலுதவியால் அவர் கொஞ்சம்நிலைக்கு வந்து கண் திறந்தார். அப்போது அவருக்கு நிலமை புரிந்தது வால்மீகியைக் கையெடுத்துக் கும்பிட்டார் அவர் கண்கள் நிறைந்தது. சைகையால் சொன்னார் பொறு என்கூட இரு என்று சற்றுநேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு மதன்லால் அழைத்துச்செல்லப்பட்டார்

மறுநாள் வரை அவனும் மற்ற இருவரும் உடன் இருந்தனர் அவருக்கு நினைவுதிரும்பியபின் அவர் விசாரித்தார் அவர்களை. அவர்கள் மூவரும் அப்போது சொன்னபதில்கள் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. ஆம் அந்த மூவரும் பொறியியல் பட்டதாரிகள். ஒரு கம்பெனியில் வேலைசெய்து வந்த அவர்களை வேலை நீக்கம் செய்யப்பட்டதால் நொந்து வேலை தேடிக்கிடைக்காமல் வயிற்றுக்காக திருடவும் ஆரம்பித்துவிட்டனர். 

அப்போதுதான் மதன்லால் சொன்னார் “திருடுவதற்காக  இவ்வளவு தொழில்நுட்பம் அறிந்த நீங்கள் அதையே ஏன் நல்லவிதமாகப் பயன்படுத்தக்கூடாது? உங்கள் புத்திசாலித்தனத்தால் ஒரு ஆண்டிவைரஸ் தயாரிக்க ஏன் பயன்படுத்தக்கூடாது ?’’எனக்கேட்டார். 

அப்போது அவர்கள் அவர்களுக்கு வாய்ப்புக்கிடைத்தால் அதை சிறப்பாகச்செய்வதாக உறுதியளித்தார்கள் அப்போது தொடங்கப் பட்டதுதான் வால்மீகிஸ்ட் சாப்ட்வேர் சொல்லூசன்ஸ். அதன் பின்னர் அந்தக்கபெனி அவர்களின் கடின உழைப்பால் உயர்ந்தது இன்று விருதுபெரும் அளவுக்கு வளர்ந்துவிட்டது

வால்மீகி மேலும் தன்னை சாப்ட்வேரில்படித்து உயர்த்திக்கொண்டு 
உயரிய நிலையை அடைய மதன்லால் கொடுத்த வாய்ப்பும் அவரது நம்பிக்கையும் வால்மீயின் கடின உழைப்பும் நேர்மையும் காரணம் திருடனாக இருந்த வால்மீகியால் ஒரு மிகப்பெரியகாவியம் ராமாயணம் படைக்க முடியும் என்றால் இதுபோல் சாதனைகளும் சாத்தியம்தான்” என முடித்தார்
அனைவரும் வியப்போடு கைதட்டினார்கள். ஒரு திருட்டுத்தொழில் செய்தவன் கூட இந்த அளவுக்கு மாறமுடியும் என்று கண்டு மெய்சிலிர்த்தார்கள். அனைவரும் கைத்தட்டிப்பாராட்டினர். மதன்லால் பெருமையுடன் பார்த்துச்சிரித்தார்..

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE