திருவாளர் எலி - சிறுகதை

By சரவணன்

அன்னிக்கி ராத்திரி 12மணி இருக்கும். திடீருண்ணு அடுப்படில கடமுடான்னு பாத்திரங்கள் உருளும் சத்தம்.யோரோதிருடன் உள்ளாற புகுந்தமாதிரி... அடிச்சிப் பிடிச்சி எந்திரிச்சி லைட்டபோட்டுப்பாத்தா ஆளு யாரையும் காணோம்... மெல்ல குனிஞ்சி தேடுனாலும் ஒன்னும் சிக்கல

லைட்ட அமத்திட்டு வந்து படுத்து அஞ்சுநிமிசம் இருக்கும் ,திரும்ப கடமுடா.. எந்திரிச்சி நேரபோய் அடுப்படில பாத்தா திருவாளர் எலி சிரிச்சிக்கிட்டு பழிப்புகாட்டுது அத அடிக்க கம்ப எடுத்து துரத்தி மேலும் பாத்திரங்கள் உருண்டு பெருஞ்சத்தமாகி மாண்புமிகு மனைவி எழுந்து என்ன அங்க சத்தம்ன்னு குரல் குடுத்தா... எலி ந்னு நான் சொன்னது அவ காதுல என்னன்னு விழுந்துச்சுன்னு தெரியல அதெல்லாம் வீட்டுக்கு வராது நடுராத்திரில பசி எடுத்து அடுப்படில எதையோ உருட்டிப்புட்டு புலியாம் ஃப்ரிட்ஜ்ல பிரட் இருக்கு தின்னுட்டுபடுங்க... பகல்லயும் கொல்லுறானுக ராத்திரிலயும் கொல்லுரானுக இம்சை அரசன்கன்னு  கத்துனா...

நானும் லைட்ட அமத்திப்புட்டு நல்லவனா போய் படுத்தேன் கொஞ்சநேரத்துல திருவாளர் எலி வந்து என் தலைக்குமேல் உள்ள பீரோமேல ஒக்காந்து உத்துப்பாத்தது என்ன கேலிபண்ணுனமாதிரி இருந்துச்சு... நான் கையெடுத்து கும்புட்டு அய்யா திருவாளரே இன்னிக்கி ஆட்டம் போதும் நாளைக்கி பாத்துக்கிடலாம்...ப்ளீஸ்னு கெஞ்சினேன் அது என்மேல எறக்கப்பட்டு அது,,,ன்னு அஜித் மாதிரி சொல்லிட்டு பை சொல்லிட்டு கிளம்புனேன்..... 

ஆனா நான் பிரகாஸ்ராஜ் மாதிரி யோசனை பண்ணுனேன்... இந்த எலிய எப்படி ஒழிக்கிறதுன்னு கூகுள்ள தேடிப்பாத்ததுல ஆப்சன் 1) எலிக்கூண்டு ஆப்சன் 2) எலிமருந்து அதுஎன்னமோ உள்ளாற சாப்புடுமாம் வெளியே போய் செத்துப்போகுமாம்னு சொல்லிச்சி...

மறுநாள் எந்திரிச்சி யோசனை பண்ணுனதுல  கொலைசெய்தல் பாவம் அதுவும் கூட நான் பிள்ளையார் பக்தன் வேற... அவர் வாகனத்தை கொலைசெய்து அவர் கோவிச்சிக்கிட்டு நம்மல ஏதாவது பண்ணிடப்போறார்னு பயந்து எலிப்பொறி வாங்கி பிடிச்சி கொண்டுபோய் எங்கயாவது விட்டுறது கொலைப்பலி வராமன்னு முடிவெடுத்து எலிப்பொறி வாங்கபோனேன்...

கடைக்காரர் இலவச டிப்ஸ் குடுத்தார் தேங்காச்சில் வாங்கி உள்ளாற கொக்கில கோர்த்துவையிங்க அதைகடிச்சி மாட்டிக் கிடும் அப்புறம் அதை அப்படியே பக்கெட் தண்ணில முக்குனீங்கன்னா செத்துப் போயிடும் .. டிஸ்ப்போஸ் பண்ணிடலாம்னு சொன்னார்

இருந்தாலும் நம்ம கொள்கைக்கு விரோத மாச்சே...கொல்றது மொதல்ல மாட்டட்டும் அப்புறம் முடிவெடுக்கலாமுன்னு முடிவு செஞ்சி எலிப்பொறி வாங்கி சத்யராஜ் மாதிரி வில்லன் சிரிப்பு சிரிச்சிக்கிட்டு தேங்காச் சில்ல மாட்டி அடுப்படிக்குள்ள வைச்சேன்  வைச்சிட்டு ராத்திரிபூராம் பொறி மூடுற சத்தம் கேக்குமான்னு பாத்துப்பாத்து தூக்கம் போனதுதான் மிச்சம்... காலையில நாலுமணிக்கி லைட்டப்போட்டுப்பாத்தா பொறி தொறந்தே இருக்கு தேங்காச்சில்லோட ஆனா எலி சீண்டல
நொந்துபோய் இதுலஎக்ஸ்பெர்ட்டான  முனுசாமிகிட்ட கன்ஸல்டிங் ஃபீஸ் ஒரு மசால்வடை டீ வாங்கிக்குடுத்து கேட்டப்ப அவன் சொன்னான் சார் தேங்காச்சில்ல எலி அவ்வளவா விரும்பாதுசார்.... கருவாடு வாங்கி வையுங்க அப்புறம் பாருங்கன்னு ஐடியா குடுத்தான்  இலவசமா கருவாடு சூப்பர் மார்க்கெட்டில கெடைக்கும்ன்னு சொன்னான் 

இதுக்காகவே வடபழனி போரம் மால்ல போய் கருவாடு 120 ரூவாக்கி வாங்கிட்டு வந்தேன் வழக்கம்போல இல்லாள் லூசாங்க நீங்க வெள்ளிக்கெழமையும் அதுவுமா கருவாடப் போய் வாங்கிட்டு வந்துருக்கீங்க வீட்டுக்குள்ள கொண்டாராதீங்க ஆடிவெள்ளிவேற ந்னு அர்ச்சனை செய்தாள்... சரின்னு அதை அப்படியே பாரசல் பண்ணிகார் டிக்கில சேப்பா வைச்சிட்டு வந்தேன்....

மறுநாள் திட்டத்தை அமுல்படுத்துறவிதமா கார் டிக்கியத்தொறந்து கருவாட்டுப்பார்சல எடுக்கபோனா.. கருவாட்டக்காணோம்... திருமதிசொன்னா அதை எலி தூக்கிட்டுப் போயிருக்கும்ன்னு..திரும்ப சூப்பர்மார்க்கெட் போகனுமான்னு கேட்டப்ப அம்மினி ஐடியா குடுத்துச்சு நம்ம அண்ணாச்சி கடையில இருக்குங்கன்னு....

அண்ணாச்சி கடையில அது50 ரூவாதான் வாங்கிட்டு வந்து பொறிலமாட்டி அன்னிக்கி ராத்திரியும் காத்திருந்தேன்.. ஆனா எலியார் நூதன ஏ டி எம் கொள்ளை மாதிரி மாட்டிக்காமலே கருவாட கபளீகரம் செஞ்சிட்டு வடநாட்டுக்கொள்ளையர் போல் எஸ்கேப் ஆகிருந்துச்சு.....

இப்ப நம்பியார் மாதிரி முடிவெடுத்தேன் கொல்லாமை சொன்ன திருவள்ளுபர்கிட்ட மன்னிப்பும் நம்ம இஸ்ட்ட தெய்வம் பிள்ளையாகிட்ட மன்னிப்பும் வாங்கிட்டு அந்த உள்ளாற திண்ணுட்டு வெளியே போய் சாகுற மருந்த வாங்கிட்டு வந்து வைச்சேன்...

மறுநாள் காலையில  நல்ல ரிசல்ட்.. தோட்டத்துல திருவாளர் எலி மரணித்துப் போய் கிடந்தார்... பி.எஸ் வீரப்பா மாதிரி வெற்றிச்சிரிப்பு சிரித்துவிட்டு அவரை அடக்கம் பண்ணினேன் ... சாரி எலியாரே மன்னிச்சிடுங்க வேற வழியில்ல ந்னு இரங்கல் தீர்மானமும் போட்டேன்.....இப்ப வில்லன கொன்ன கதாநாயகன் போல இல்லத்தரசிய ப்பாத்து வெற்றிச்சிரிப்பும் சிரிச்சேன்.....

அடுத்தநாள் திங்கட்கிழமை ஆபீஸுக்கு கார்ல போகலாமுன்னு முடிவு செஞ்சி கார் ஸ்டார்ட் செஞ்சா கார் ஸ்டார்ட் ஆகல... என்ன என்ன மோ முயற்சிபண்ணி பாத்தேன் ம்ம்ம்ம்ம் ஒண்ணும்நடக்கல... மெக்கானிக்க்கு போன் பண்ணி வர்ச்சொன்னேன்.... லீவும் போட்டாச்சு மெக்கானிக் வந்துபாத்தும் ஒண்ணும்நடக்கல வண்டிய இன்னொரு கார்ல கட்டி இழுத்துட்டுபோனார்.... 

அன்னிக்கி சாயங்காலம் போன் பண்ணார் மெக்கானிக் சார் கார் வயரிங் எல்லாம் போச்சுசார் எலி வயரை எல்லாம் கடிச்சி காலிபண்ணிடுச்சுசார்.... எல்லாம் செக்பண்ணனும்சார்.... நு சொன்னவ்ன்ன பகீர்னு ஆயிடுச்சு.... அவர் 7800 ரூ வித் ஜி.எஸ் டி யோட பில் பண்ணினார்.....

என் இல்லால் சொன்னா நீங்க எலிய சாகடிச் சீங்கல்ல அதோட பலன் தான் இது..அனேகமா அதோட அம்மா எலியோ   இல்ல அப்பா எலியோ  உங்கமேல கோவம் கொண்டு கார்வயரை கடிச்சி பலி தீத்துக்கிடுச்சு.... அனேகமா பிள்ளையார் வேற கோவமா இருப்பார்... அவரை சாந்தம் பண்ண தெருக்கோடில இருக்குற பிள்ளையார் கோவில்ல சங்கடகரசதூர்த்தி அன்னிக்கி பொங்கல்வைக்கபணம் குடுத்து அவரச் சாமாதானப்படுத்துங்க,,,ன்னு ஐடியா குடுத்தா...

எலிக்கும் பழிவாங்கும் குணம் இருக்குமான்னு தெரியல... அப்புறமா ஞாவகம் வந்துச்சு கருவாடு வாங்கி கார் டிக்கில வைச்சது வேலில போற ஓணான புடிச்சிக்கார்க்குள்ள விட்டுட்டு குத்துது கொடையுதுன்னா என்ன பண்ணுறது......எல்லாம் நேரம்
இருந்தாலும் எலிக்கொலைக்கு சரியான பரிகாரம் இருந்தா தெரிஞ்சவங்க சொல்லலாம் சொல்றவ்ங்களுக்கு  சன்மானம் வழங்கப்படும்.......

அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE