பத்மாவதி - சிறுகதை

By சரவணன்

பாலுவோட மடியில வந்து ஒக்காந்தா அவனோட மக பத்மாவதி. அவ அப்பாக்கிட்ட கம்ப்ளெயின் பண்ணுனா. அப்பா எனக்கு ஏம்பா பத்மாவதின்னு பேருவைச்ச. மாடர்னா ஏதாவது பேருவைக்கவேண்டியதுதான. இந்தகனடாக்காரங்க வாயில அது நொழைய மாட்டிங்குது பட்டம்மாவாடின்னு கொல்லுறானுகன்னு சிணுங்குனா.

அதைகேட்டதும் பாலுவுக்கு மொதன்மொதலா வேலைக்கு வந்த சம்பவம் ஞாவகத்துக்கு வந்துச்சு
அப்ப அவ்ரு சொன்னாரு. அந்த பேரு ஒரு தெய்வத்தோட பேரு. அவங்க மட்டும் இல்லைனா இன்னிக்கி நீயும் நானும் பட்டுக்கோட்டையில படுத்துட்டு இருந்துருப்போம். ஏதாவது உள்ளூருல கெடைக்கிற வேலையப்பாத்துக்கிட்டு கெடந்துருப்போம் . இந்த கனடா நாட்டை பாத்துக்கூட இருக்கமாட்டோம்ன்னு சொன்னாரு.

சொல்றேன்னு ஆரம்பிச்சாரு. அப்ப அவரோட மகன் சொன்னான் அது ஒருவேலை அப்பாவோட காதலியோட பேரா இருக்கும்ன்னு கிண்டல் பண்ணுனான். அப்ப அவர் சொன்னாரு அவங்க கண்ணால கண்ட தெய்வம்டாஅப்ப பத்மா கேட்டா அது என்ன கதை சொல்லுங்கப்பான்னு

பாலுவுக்கு அமெரிக்காவில இருக்குற மியாமிக்கி பக்க்த்துல இருக்குற கப்பல்ல வேலைகெடச்சது. அவரொரு மரைன் குக். அப்ப அவருக்கு வயசு 23 .வேலை கெடைச்சதுல எல்லாருக்கும் ஒரே சந்தோசம். அவருக்கு மும்பைல இருந்து பிளைட் டிக்கெட் போட்டுருந்தாக. அதுக்கான விசா எல்லாம் கம்பெனி யே ஏற்பாடு பண்னிருந்துச்சு. அவரையும் சேத்து 7 பேரு அவரோ ட ஊரு பட்டுக்கோட்டையில 

இருந்து,மும்பைக்கு டிரெயின் ஏறுனாக. மும்பை வந்து அவரை வழிஅனுப்பிட்டு ரெண்டுநாளு இருந்து மும்பை சுத்திப்பாத்துட்டு ஊரு திரும்புறதா பிளான் பண்ணி டிக்கெட் போட்டுட்டு மும்பை வந்தாக.
அதுமாதிரியே அவரை ஏர்போர்ட்ல வழி அனுப்பிட்டு சுத்திப்பாத்துட்டு ஊருக்குக்கெளம்புனாக அவங்க பட்டுக்கோட்டை போறதுக்கு எப்புடியும் மூணு நாளாகும். சென்னை வந்து அப்புறம் அங்க போகனும்
பாலுவுக்கு ஒரே சந்தோசம். புதுசா விமானத்துல அமெரிக்கா போற குதூகலம்

மனசெல்லாம் ஒரே சந்தோசம்வேற குஸியா இருந்தாரு. விமானத்துல நல்லா எல்லாம் குடுத்தாக. சர்வதேச விமானப்பயணத்துல எல்லாமே கெடைக்கும்ன்றது போகும்போதுதான் தெரிஞ்சது
பாலு பாரிஸ் போய் அங்க இருந்து அமெரிக்கா வில மியாமிக்குப்பொய்ட்டாரு. மியாமி பாத்து அசந்துபோயிட்டாரு.பட்டுக்கோட்டையில இருந்து மும்மை ஒரு அதிசயம்ன்னா மியாமி பேரதிசயம். அதுக்குப்பக்த்துல இருக்குற தம்பா போர்ட்டுலதான் கப்பல் நிக்கிது. அங்க அவரோட சேந்து மொத்தம் 25 பேரு போய் ரிப்போர்ட் பண்ணுனாங்க கப்பல் ஏறுற சந்தோசத்துல பாலு இருந்தாரு. எல்லாரும் ஏறிட்டாங்க அவங்க டாக்குமெண்ட் எல்லாம் செக்பண்ணிட்டு

பாலுவை மாத்திரம் ஓரமா நிப்பாட்டிட்டாங்க .இவருக்கு படபடப்பா வந்துடுச்சு. நம்மல மாத்திரம் ஏன் நிப்பாட்டுறாங்கன்னு தெரியல. இவருக்கு அப்ப இங்க்லீசும் சரியா வராது

அப்ப அவங்க சொன்னாங்க ஒங்களோட விசாவுல பிராப்ளம் இருக்கு,. நீங்க பி. ஒன் விசாவுல வந்துருக்கீங்க, கப்பல்ல வேலைசெய்ய சி ஒன் டிங்குற விசா வேணும் மத்தவங்க எல்லாம் அந்த விசாவோடதான் வந்துருக்காங்க, உங்க விசாவுல ஒங்கல நாங்க அனுமதிக்க முடியாதுன்னு சொல்லிட்டு நீங்க உங்க நாட்டுக்குத்திரும்பிப்போகவேண்டியதுதான். ஒரே வழி ந்னு சொன்னதைக்கேட்டு அவருக்கு அழுகை அழுகையா வந்ததுச்சு

கிட்டத்தட்ட 60000 ரூ கடன் வாங்கி செலவு பண்ணி அவரு வந்துருந்தாரு. அவர் அவங்க ஊருல மாசச்சம்பளம் 5000 ரூ இந்த்க்கடனை அடைக்கவே ரெண்டுமூணு வருசமாகும் ஊருக்குத்திரும்பிப்போனா.

அப்ப ஒடஞ்சிபோய் அழுதாரு. திரும்பிப்போறதுக்குக்கூட கைல காசு இல்ல எப்புடிட்டிக்கெட் எடுத்துத்திரும்பப்போறதுன்னு தெரியல

மயக்கமா வந்துச்சு.அப்ப அவருக்கு அவரை அனுப்பிச்ச கம்பெனிய காண்டாக்ட் பண்ணி ரிட்டர்ன் டிக்கெட் ஏற்பாடு பண்ணுனாங்க அந்தக் கம்பெனி ஆளுங்க. மனசு பூராம் சோகம் கவலையோட மூணாவது நாள் மும்பைக்குத்திரும்பி வந்தாரு பாலு.இவரை வழியனுப்ப வந்தவங்க இன்னும் பட்டுக்கோட்டை போய் சேந்துருகமாட்டாங்க. அதுக்குள்ள இவரு மும்பைக்கே திரும்புனது தெரிஞ்சா நொந்துபோய்டுவாங்கன்னு அவரு நெனைச்சாரு. அதுனால வெவரத்தை அவங்க கிட்டச்சொல்லலை.

அப்பப்பாத்து மும்பையில ஒரே மழை. அவருக்குத்தெரிஞ்ச ஒரே எடம் மும்பையில வி.டி ஸ்டேசன் தான். அங்கதான் அந்த கம்பெனி இருந்துச்சு. விமான நிலையத்துல இருந்து வரும்போது ஆட்டோவில வந்துருந்தாரு. இப்ப மழையில ஆட்டோ ஓடல. ராத்திரி ஒரு மணி வேற. ஏர்போட்ல இருக்கமுடியாது. சரி வி-டி போகலாமுன்னா ஆட்டோவும் இல்ல. இந்தியும் தெரியாது. அப்ப ஒரு ஆட்டோகாரரு ஒதவ வந்தாரு. அவரு ஒரு மலையாளி அதுனால அவரு பேச்சு புரிஞ்சிச்சு. அவரு அந்தேரில இருக்குற அவரு வீட்டுக்குப்போய் சாப்புட்டுப் போகலாமுன்னு ஏத்திக்கிட்டாரு. ஆனா போறவழில ஆட்டோ 
நின்னுபோச்சு. ஒரேமழை என்னபண்ணுறதுன்னு தெரியல ஒருப்பக்கம் சோகம். இன்னொருபக்கம் இயலாமை. கைல காசும் இல்ல பெரிய லக்கேஜ் வேற மழைதண்ணி ஆறா ஓடுது. என்ன பண்ணப்போறோமுன்னு தெரியல. ஆண்டவனே என்னை ஏன் இப்புடிச்சோதிக்கிறன்னு மனசுக்குள்ள அழுதாரு.

அப்ப ஒரு போலீஸ் ஜீப் வந்துச்சு. அவங்க நிறுத்தி விசாரிச்சாங்க அவங்க ஜீப்புல ஏத்தி டாக்ஸி இருக்குற எடத்துல எறக்கிவிட்டாங்க. அங்க இருந்து வி -டிக்கு 1500 ரூவாக்கிமேல செலவு பண்ணி வந்து செந்தாரு

அதுக்கபுறமாவது நிம்மதியான்னா அதுக்கபுறம்தான் பெரிய பிரச்சனை வந்துச்சு. முமபை ரயில் நிலையத்துல ராத்திரி விலைமாதர்களின் தொல்லைன்ற விசயம்தான் அது. அப்புடு ஒரு குரூப் இவரை சூழ்ந்துக்கிட்டு கம்பெல் பண்ணுனாங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியல. அவங்க விடுறமாதிரியும் இல்ல

திரும்ப நொந்துக்கிட்டாரு. ஏன் டா கடவுளே இப்புடிப்படுத்துற நான் என்ன பாவம் பண்ணுனேன்னு தெரியலையேன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு.

அப்பப்பாத்து இன்னொரு கும்பல் வந்துச்சு அதுவும் இவரை வற்புறுத்த ஆரம்பிச்சதுனால முன்னாடி வந்தவங்களுக்கும் இவங்களுக்கும் பெரிய சண்டை அடிதடியாய்டுச்சு. இவருக்கு அந்த க்குளிருலயும் வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு. போலீஸ் வேற வந்துடுச்சு. இவருக்கு கைகாலெல்லாம் ஒதற ஆரம்பிச்சிடுச்சு. இன்னிக்கி நாம காலி இப்புடி மும்பையில வந்து மாட்டிக்கிட்டு கம்பி எண்ணப்போறமேன்னு திரும்ப அழுகவந்துடுச்சு.

அப்ப ஒரு போலீஸ் காரர் சொன்னாரு தும் அந்தர் ஜாவ்ன்னு சொல்லி வெரட்டுனாரு
அப்ப கொட்டுறமழையில லக்கேஜோட தண்ணி பெர்க்கெடுத்து ஓடுற ரோட்டுல அவரோட கம்பெனிக்கி நடக்க ஆரம்பிச்சாரு. சாப்புட்டு மூணுநாளாகுது மியாமில சாப்புட்டது. கைகாலெல்லாம் வலி. சோர்வு தூக்கமும் இல்ல. வாழ்க்கையில நரகம் ந்னா என்னன்னு அவருக்கு அப்பத்தெரிஞ்சது. அவரோட கண்ணுல இருந்து கொட்டுன கண்ணீர் மழையில கரைஞ்சது

ஒரு வழியா கம்பெனி போய் சேர விடிஞ்சிட்டது. ஆனா அவருக்கு விடியல ஆமா. கம்பெனி தொறந்து மூணுநாளாகுதாம் மழையில யாரும் வரலையாம். திரும்ப அழுகையே வந்துருச்சு நல்ல வேலையா வாச்சுமேன் ஒதவுனாரு. அவரு அந்தக்கம்பெனி மேனேஜர் போன் நம்பர்ர் குடுத்தாரு
அந்த நம்பருல ஒரு அம்மா பேசுனாங்க வெவரத்தைகேட்டுட்டு இவருக்காக ரயில்புடிச்சி வந்தாக. இவரு இருக்குற கோலத்தைபாத்து புரிஞ்சிக்கிட்டாக. ஆபீஸுக்குள்ள கூட்டிட்டுப்போய் ரிலாக்ஸ் பண்ணி ஒரு காப்பி வாங்கிக் குடுத்தாங்க ..அந்த்க்காப்பி அன்னிக்கி இருந்தமாதிரி என்னிக்கும் இருக்காது. அம்பூட்டு ருசியா அவரோட உயிரை மீட்ட பானமா இருந்துச்சு. ஒடனே கைல 3000 ரூ குடுத்து நல்ல ஓட்டல்பாத்து தங்குங்க. போய்ட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டு - சாயங்காலமா போன்பண்ணச்சொன்னாங்க.
இவருக்கு உசுறே அப்பத்தான் வந்துச்சு

போய்ட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டுப்போன் பண்ணுனாரு. அப்ப அவங்க சொன்னாங்க உங்க விசாவை சரிபண்ணிட்டேன். உங்களுக்குக்கெடைச்சிடும். இன்னும் ஒருமாசத்துல நீங்க போய் கப்பல்ல ஜாயின் பண்ணலாம். என்னோட முயற்சியால சீக்கிரமா முடிஞ்சிடுச்சு. வழக்கமா நீங்கதான் இந்தசெலவை ஏத்துக்கணும் ஆனா உங்க நெலைமையப்பாத்து கம்பெனில பேசி அவ்ங்களை ஏத்துக்கச்சொல்லீட்டேன். நீங்க கொஞ்சம் குடுத்தாப்போதும். அதுவுமில்லாம ஒங்களுக்கு இப்ப சென்னைக்கு டிக்கெட் போட்டுருக்கேன் நீங்க போயிட்டு ஒருமாசத்துல டிக்கெட் அனுப்புறம் வாங்கன்னு சொன்னாங்க.

இவர் நேர கம்பெனிக்குப்போனாரு அங்க அவங்க வெளிய கெளம்பிட்டு இருந்தாங்க. அவங்களை பாத்ததும் இவருக்கு கண்ணீரா ஊத்துச்சு. ரொம்ப நன்றிங்க சொல்ல முடியல நா தழுதழுத்துச்சு
அப்ப அவங்க சொன்னாங்க ரிலாக்ஸ் மைசன்ன்னு சொன்னாங்க. அப்ப வாச்சுமேன் சொன்னாரு. அவங்க பேரு பத்மாவதின்னு. பாலுவுக்கு திருப்பதில இருக்குற பத்மாவதி தாயாரே நிக்கிறமாதிரி இருந்துச்சு. கையெடுத்துக்கும்புட்டாரு கண்ணீர் வழிய

இப்ப குட்டி பத்மாவதி கண்ணும் கண்ணீரால நெறைஞ்சிருருந்துச்சு. அவசொன்னா பத்மாவதி அழகான பேருன்னு. ஆமா சாமியோட பேருன்னு அவளைத்தூக்கி பாலு முத்தம் கொடுத்தாரு
(பின் குறிப்பு: இது  உண்மையில் நடந்தஒருசம்பவம்)

கவிச்சிகரம். அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE