அவர் தன்னோட மூத்த அதிகாரி முன்னாடி ஒக்காந்திருந்தார். அவர் முகம் வாட்டமா இருந்துச்சு.. அவர் அரசுத்துறையில அதிகாரியா இருந்தார். நல்ல சம்பளம் இன்னும் சர்வீஸ் மூணுவருசம் இருந்தது ...
அவரோட மூத்த அதிகாரி அவரை விசாரிச்சார் என்ன விசயமாப்பாக்க வந்திருக்கீங்கன்னு இவர்சொன்னார் நான்என்னுடையவேலையை ராஜினாமா செய்கிறேன் அதுக்கான லெட்டர் தான் இதுன்னு கடிதத்தைக்குடுத்தாரு...
அவர் வாங்கிப்படிச்சிப்பாத்துட்டு இதுல பெர்சனல் ரீசன்னால ரிசைன் பண்ணுறதாப் போட்டுறீங்க... இங்க வேலை செய்யிற இடத்துல ஏதாவது பிரச்சனையா இல்ல என்னால பிரச்சனையா சொல்லுங்க..
இப்ப நீங்க நல்ல பொசிசன்ல இருக்கீங்க வருச வருமானம் 30 லட்சம் வரும்.... மூணு வருசம் சர்வீசும் இருக்கு.... எப்படியும் இன்னொரு ப்ரொமோசன் வரும் மூணு இன்கிரிமெண்ட் கிடைக்கும் மற்ற எல்லாத்தையும் சேத்து எப்புடிப்பாத்தாலும் ஒரு கோடி நீங்க ஏன் வீணா இழக்குறீங்க நல்லா யோசனை பண்ணுங்க......ன்னார்
இவர் சொன்னார் இல்ல நான் என் முடிவில தீர்மானமா இருக்கிறேன் மாற்ற மில்லைன் னாரு .
வேற ஏதாவது சுயதொழில் பண்ணப் போறீங்களா...ன்னாரு அவர்
அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னாரு இவரு
ஒரு கோடி ரூவாய விடுறது அதுவும் அரசாங்க வேலையில சுத்த பைத்தியக்காரத்தனம்னாரு
அப்ப இவர் சொன்னாரு...சார் காசுபணம் எல்லாம் ஒரு அளவுக்குத்தேவை தான் ஆனா அதைவிட முக்கியமான பல விசயங்கள் இருக்கு ...பணம் இருந்தா எல்லாம் இருக்கும்றது உண்மையில்ல அதையும் தாண்டி பல விசயங்கள் இருக்குன்னாரு
அவர் குழப்பத்தோட இவரைப்பாத்தாரு. இவருக்கு ஒரே மகள்...நல்ல படிப்பு இவர் கேரளாவைச்சேர்ந்தவர் ஆரம்பத்தில் கீழ் நிலையில் வேலயில சேந்தாலும் மேல படிச்சி படிப்படியா நல்ல நிலைக்கு வந்தவர்....
குடும்பத்துல ஒரே பொண்ணு.. அதுவும் நல்லாப் படிச்சி இவருக்கு ரொம்ப செலவு எதுவும் வைக்காம அரசாங்க மெடிக்கல் காலேஜ்ல் சீட்டு கெடைச்சி டாக்டரா இருக்கு...
அதுக்கு கல்யாணம் பண்ணனும் அதுக்கபுறம் இவருக்குன்னு பெரிசா செலவு இல்ல. கேரளாவில சொந்தமா வீடு கட்டீருக்காரு ரிட்டயர்டு ஆனா இவருக்கு நல்ல பென்சனும் வரும்.. இங்க சும்மா வந்துட்டுப் போனாப் போதும் பெருசா வேலையுமில்ல...பின் என்ன கவலை இருக்கப்போகுதுன்னு நெனச்சார்...
அதை அவர்கிட்டயே கேட்டார். இவர் கண் கலங்கிடுச்சு...சார் எல்லாமிருக்கு ஆனா கெளரவம் நு ஒண்ணு இருக்குல்ல மனுசனுக்கு அதுதான் முக்கியம்....
நாம படாதபாடு பட்டு ராத்திரிப்பகலா ஒழைக்கிறோமே அது யாருக்காக சார் நம்ம பிள்ளைகளுக்காகத்தான... ஆனா அதுக எதைச்செய்யக்கூடாதுன்னு நாம நெனைக்கிறோமோ அதைத்தான் செஞ்சிட்டு வந்து நிக்கிதுங்கன்னார்....
மேல் அதிகாரி கேட்டார் விளக்கமாச் சொல்லுங்கன்னார். அதுக்குஇவர் நான் சொன்னாலும் ஒங்களுக்குப்புரியாதுசார்...என் பொண்ணு போன படிக்கபோன இடத்துல ஒரு பையன லவ் பண்ணுச்சு.... நாங்க கேரளா கிருஸ்டியன்... அட்லீஸ் ஒரு கேரளாகாரன லவ் பண்ணிருகலாம்.... இல்ல ஒரு கிருஸ்டியன லவ் பண்ணிருக்கலாம்.... எதுவும் இல்லனார்
அவர் கேட்டார்... ஏன் அவன் ஒண்ணு மில்லா தவனா படிக்காதவனா வெட்டியான்னு... அதெல்லாம் ஒண்னுமில்ல சார் அவனும் டாக்டர்தான்... அவன் தமிழ்நாட்டைச்சேந்தவன் சார்... அவன் கிருஸ்டீனா இருந்தாக் கூட பரவாயில்ல.... அவன் எங்க ஊருல கேவலமா நினைக்கிற சாதிவேற என் சொந்தக்காரவங்க என்னக்கேவலமாப் பேசுவாங்கசார்...
நான் ஏற்கனவே வைச்சிருக்கிற சொத்து வீடு இனியும்நான் சம்பாதிக்கிற எல்லாம் அவன் தான் அனுபவிக்கப்போறான்...என் மனசு கொதிக்கிது நான் அரும்பாடு பட்டு சேத்து வைச்சதுபூராம் இவனுக்காகத்தானா ந்னு மனசு அழுகுது....
இனிமேல் நீங்க சொன்னீங்களே ஒரு கோடி அதையும் நான் கஸ்ட்டப்பட்டு சம்பாதிச்சா அனுபவிக்கப்போறது அவந்தான் எனக்கும் என் சம்சாரத்துக்கும் சுகர் வயசும் ஆகிப்போச்சு..... இனிமே நான் யாருக்காக கஸ்ட்டப்படனும்....இருக்குறதை வைச்சி மீதமிருக்கிறகாலத்தை சந்தோசம அனுபவிப்போம்.... எவனோ திங்கிறதுக்கு நான் ஏன் ஒழைக்கனும்ன்னு,,,,, சொல்லும்போது அவர் செவந்த மூஞ்சி இன்னும் செவந்து கெடந்துச்சு...கண்ணுல நீர் துளி வந்துருச்சு.....
கேட்ட மூத்த அதிகாரிக்கி ஒரு மாதிரி ஆகிப்போச்சு... எப்புடி இருந்தாலும் இவர் சொல்றமாதிரி மகளும்மருமகனும்தான் அனுபவிக்கப்போறாங்க ஏன் இவ்வளவு கோவம் விரக்த்தின்னு கேட்டார்
அப்பத்தான் அவர் சொன்னார்... சார் நான் என் சொந்தத்தில கேரளாவில டாக்டரா இருக்குற பையனுக்கு இவளைப்பேசினோம்.... இவ ஒத்துக்கலை.... நானும் சம்சாரமும் இவ கால்ல விழுந்து கெஞ்சினோம் கெளரவத்தை காப்பாத்த... ஆனா இவ என்ன சொன்னாத் தெரியுமா....
அதைச்சொல்ல நெஞ்சு நடுங்குது....ன்னு கண்ணதொடச்சிக்கிட்டார்.... நீங்க சொல்றமதிரி கல்யாணமெனக்கு பண்ணி வைச்சா.... கல்யாணத்தன்னிக்கி நீங்க என்னத்தேடவேண்டியதா இருக்கும்.... உங்களுக்கு இதுக்கு மேல சொல்லத் தேவையில்ல புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்......னா
சார் உங்க கிட்ட பெர்சனலா சொல்றேன் தயவு செய்து வேற யார்கிட்டயும்சொல்லாதீங்க இதை விட ஒரு அப்பனுக்கு மோசமான நெலமை வருமா சார்..... அதான் கோவம் எனக்கு.....ன்னார்
இவர் விரும்பின படியே ராஜினாமா ஏத்துக் கிட்டாங்க. அதுக்கு முன்னாடி இவர்மக கல்யாணம் அவள் விருப்பப்படி நடந்தது... இவர் அவங்க ஊருல போய் செட்டில் ஆகிட்டாரு ...
இவர் அந்த மூத்த அதிகாரியோட பேஸ்புக் நண்பரும் கூட... ரெண்டு வருசம் கழிச்சி இவர் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.... பேரக்கொழந்தை மக மருமகனோட சிரிச்சிக்கிட்டு....ஹேப்பி வித் மை ஃப்மிலி ன்னு
ஆமா எல்லாக்கோவமும் பேரப்பிள்ளைகளின் பிஞ்சுப்பாதங்கள் தான் மிதிச்சு சமாதானம் செஞ்சிருதுக.....ஏன்னா குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று........
அ.முத்துவிஜயன்