அமராவதி அம்மா- சிறுகதை

By சரவணன்

அங்கம்மா வீட்டுக்குப்பக்கதுலதான் அமராவதிஅம்மா வீடு அது அங்கம்மாவுக்குப்பெரியம்மாமொறை வேணும் .அவங்கவீடு அதேதெருவுல நொழஞ்சவன்ன மொதவீடா இருக்கும் 

அந்தப்பாட்டியின் வயது அவருக்கேதெரியாது
பழைய நைந்துபோன சுங்கடிச்சேலைமுன்பல்லு மட்டும்பொழச்சிக்கெடக்க கடவாய்ப் பல் காணாமல் போய் 
வருசம் பல ஆச்சு.சின்னப்புள்ளையாயிருக்கும்போது 

குறவருக்குக்காசுகொடுத்து வளர்த்தகாது
 இப்போது மூளியாய்மூக்கில் வேப்பங்குச்சி குத்தியிருக்க
கழுத்தில் பழைய பித்தளைச்சங்கிலி பளபளப்பாய்

வெறும் புடவை சுற்றப்பட்டுவெள்ளை ரவிக்கை அழகா போட்டுருக்கும்.அங்க அங்க கைத்தையலுடன்வீடு பழைய குட்டிச்சுவருமாதிரி ஓட்டு.வீடுபலஓடுகள் உடைஞ்சி ஒழுகும். ஆனால் வீடு படுசுத்தம் தரையில் தினம் 

சாணிபோட்டுமொழுகாட்டா  திருப்திவராதுவாசலில் தினம் சாணிதெளிச்சிக் கோலம் போட்டு பூசணிப்பூ வைக்கும் வீட்டுக்குள்ளயே பூசணிச்செடி இருக்கும்.அதுக்குப்பக்கத்துலமண்ணு குமிச்சிக்கெடக்கும் அதுல வந்து நாய் படுத்துக்கிடும் அதவெரட்ட படாதபாடுபடும்

மொத்தமே வீட்டில் பத்துபாத்திரம் அதில் ஐந்து மண்சட்டிகள் தான் மீதம் பளபளவெனத்தினம் விளக்கித்தங்கம்போல் மின்னும் 

குண்டாசட்டி பானை சொம்பு மூடி தட்டு.....தண்ணீர் பானையிலும் குண்டாச்சட்டியிலும்சூரியஒளியில் மின்னும் அதுக்காகவே

பாட்டிவீட்டில் தண்ணி வாங்கிக்குடிக்கும் விருந்தினர்கள் அதிகம் ஒருவேளைசமயல்தான்அதுதான் அவருக்குவிதி. ஒருநா கொழம்பு வைச்சா மூணுநாளு நாளைக்கி வைச்சி சாப்புடும். 

பெரும்பாலும் கஞ்சிதான் குடிக்கும். அதுக்கு வெஞ்சனமாத்தான் மொதநாள் வைக்கிற கொழம்பு வைச்சிக்கிடும்.  கருவாடு வாங்கி சுட்டு கஞ்சிக்கி வைச்சிக்கிடும் அத பூனைக்கிட்ட இருந்து காப்பாத்த மண்பானைக்குள்ள வைச்சி மூடி வைக்கும். செலநேரம் அத மறந்துடும் .அப்ப பூனை கருவாட்டத்தூக்கிட்டுப்போயிடும். அந்த பூனை பாட்டிக்கிட்ட வாங்குற வசவு சொல்லிமாலாது. பூனைக்கி அது புரிஞ்சிருந்தா தூக்குப்போட்டு செத்துடும். ஆராவது சாப்புடக்குடுத்தா வாங்காது நான் என்ன அம்புட்டு கேவலமாவா கெடக்கேன்ன்னு சொல்லும் ஆனா அங்கம்மா குத்தா வாங்கிக்கிடும்  நீ என்னோட மகள்லன்னு சொல்லி முத்தம் குடுக்கும்

ஆனா தெருக்கோடில இருக்குற புள்ளையார் கோவிலுக்கு தவறாம வந்து சாமிகும்புடும். சக்கரை வைச்சி பூஜை பண்ணும் அதை சாமிகும்புட்டுட்டு சின்னப்புள்ளைகளுக்குக்குடுக்கும்
அமராவதியோட புருசன்  நாடகநடிகர் அவர்போனபின்

வரும் நலிவுற்றகலைஞர்களுக்கான கருணைத்தொகையில்தான் ஜீவனம். அங்கம்மாவ வாடி மகளேன்னுபாசமாக்கூப்புடும் அதுக்கு ஒரு மக இருந்தா.ராஜாமணின்னு பாவம் அவ புருசனும் சின்னவயசில போட்டான். ஒரு கைப்பிள்ள அதுவும் பொண்ணு இது ரெண்டையும் வைச்சிக்கிட்டு படாதபாடுபடுவா . அந்த வீட்டுக்கு கதவு கெடையாது தொறந்தேதான் கெடக்கும் ஒரு மடல் மாதிரி சாத்திவைக்க தென்ன ஓலையில இருக்கும் 
இந்தவெவரம் தெரியாத திருடன் ஒருதடவ ராத்திரில வந்து வீடுபூராம் தேடிக்களைச்சுப்போக அமராவதி 

தூக்கக்கலக்கத்துல ஆரோ தண்ணிகேட்டு வந்துருக்காகன்னு நெனச்சி தண்ணி குண்டாச்சட்டில இருக்கு சொம்புபக்கத்துல இருக்கு மோந்துகுடிராசான்னு சொல்ல அவன் பயந்துபோய் ஓட அதுல மண்பானையதட்டிவிட்டு கீழவிழுந்து கால் பெசகிகத்த சனக்க எல்லாம் கம்பு கடுக்காயோட கூட தர்ம அடிவாங்குனான் திருடன் அப்ப சனங்க எல்லாம் கேலிபண்ணுனாங்க ஏண்டா போயும் போயும் அமராவதி வீடாகெடைச்சது திருடுறதுக்கு. நீதாண்டா ஏதாவது குடுத்துட்டுப்போகனும்ன்னு. அதுல ஒருத்தி சொன்னா திருடவந்தவனுக்கு தண்ணி குடிக்கக்குடுத்த செலவச்சீமாட்டி அமராவதின்னு சொல்லவும் எல்லாரும் சிரிச்சாக 

அப்ப அமராவதிக்கும் சிரிப்பு வந்துச்சு அதேநேரத்துல இப்புடிக் கேலிபண்ணுற அளவுக்கு ஆக்கிட்டுப்போயிட்ட நாடகக்கார புருசன நெனச்சி கண்ணும் கலங்குச்சு

அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE