ஞாயத்துக்கெழமை கொண்டாட்டம் - சிறுகதை

By சரவணன்

ஞாயத்துக்கெழமைகள்ல எல்லாப்புள்ளைகளுக்கும் எண்ணை தேய்ச்சிக்குளுப்பாட்டனும் மாசத்துக்கு ரெண்டுதடவையாவது இந்த உற்சவம் நடக்கும். அன்னிக்கிக்காலையிலயே ஆத்தா மகனைக்கூப்புட்டு வாளியோட போயி திருமங்கலம் சந்தையில நல்ல கெடக்கறியா இல்ல தலை இருந்தா ரெண்டு ஆட்டுக்காலு இருந்தா ரெண்டாட்டுகாலு வாங்கியாறசொல்லும்

கறி வாங்கிட்டு வந்தா கறிக்கொழம்பு தலைவாங்கியாந்தா தலைக்கறிக்கொழம்பு காலெல்லாம் மக்காங்நாளைக்கி சூப்பு இல்லாட்டி பாயா வைச்சி இடியாப்பம் புழியும். ஆத்தாமகன் கறிவாங்கத் திருமங்கலத்துக்கு சைக்கிள்ள போய்ட்டு வாரதுக்குள்ள நல்ல எண்ணைய பூண்டை போட்டு சூடாக்கி பிள்ளைகளையெல்லாம் கூப்புட்டு கால் பெருவெரல்ல இருந்து உச்சந்தலை வரைக்குக் அக்குள் காது கண்ணு தொப்புள்ன்னு ஒண்ணு விடாம எண்ணையதேச்சி ஊறவைச்சிடும் அப்புறமா சீக்காய வடிச்சகஞ்சில கலந்து கொழப்பிவைச்சி குளிப்பாட்டும் அப்ப ஆத்தாமக மாத்திரம் நானே தேச்சிகிடுறேன்பா. ஏன்னா கண்ணுல சீக்கா விழுந்தா எரியும் ஆனாலும் ஆத்தா கதறக்கதற தேய்ச்சிவிடும் அப்புறம் சுடுதண்ணியபோட்டு குளுப்பாட்டி தலைய நல்லாதொடச்சிவிடும்
ஆட்டுக்கறிக்கொழம்பு வைக்கிறதுல பலவகையிருக்கு. நாட்டுக்கொழம்பு அப்புறம் சீமைக்கொழம்புன்னு. 

நாட்டுக்கொழம்பு கறியவேகப்போட்டு மசாலைய அரைச்சி சேத்து வெங்காயம் தக்காளி பச்சமொளகா இஞ்சி பூண்டு கசகசாதேங்கா அரைச்சி சேத்து கொதிக்கவிட்டு பதம்பாத்து உப்புசேத்து அப்புறம் பட்ட சோம்பு அன்னாசிப்பூ கறிவேப்பில போட்டுத்தாளிச்சாத்தயாராகும் அதுக்கு கொழுப்புக்கறியா இருந்தா கொழம்பு ருசிக்கும். அது தண்ணியா இருக்கும் கூட்டத்துக்கு அதுதான் ஒத்துவரும். சீமைக்கொழம்பு  கொஞ்சம் வேலை அதிகம். கறியத்தனியா மஞ்சத்தூள் உப்பு போட்டு வேகைவைச்சிட்டு சின்னவெங்காயம் நல்ல எண்ணையில வதக்கிட்டு அரைச்சித்தனியா வைச்சிக்கிறனும் அப்புறம்பூண்டு இஞ்சிய தனியா அரைச்சி வைச்சிக்கணும் அப்புறம் தக்காளி ய நல்லஎண்ணையில வதக்கி அரைச்சி வைச்சிக்கணும்  கொழம்பு மசாலாத்தூள் தனியா எடுத்துவைச்சிட்டுத்தான் அங்கம்மா ஆத்தா அடுப்புல இருப்புச்சட்டியப்போடும் அதுல நல்லெண்ணைய ஊத்தி சூடாக்கி வெங்காயம் தக்காளி வதக்கி அரைச்சத திரும்ப வதக்கும் அப்புறம் அரைச்சிவைச்ச பூண்டுஇஞ்சியசேத்து வதக்க்கும்  அப்புறம் மசாலா சாமானுகளைசேத்து  நல்லா சுருளச்ச்சுருள கிண்டும்  அது பொன்னிறமா வாரவரைக்கும் அப்புறம் வேகவைச்ச கறிய அதுல சேத்து இன்னும் கொஞ்சம் எண்ணை ஊத்தி நல்லா பொன்னிறமா வாரவரைக்கும் வறுக்கும்போது எண்ணைய கக்கும் அதுதான் பதம் 

அது பதத்துக்கு வாரப்ப தெருவில போறவாரவுகளையெல்லாம் இழுக்கும் எண்ணைதேச்சுக்குளிச்சிட்டு பசில காத்துருக்குற புள்ளைக வாழைஎலையப்போட்டு அதுல ஓரமா நாட்டுக்கோழி முட்டை வைச்சி சோத்தப்போட்டு அது தலையில கறிக்கொழம்பு ஊத்தி சீமைக்கொழம்புன்னு சொல்ற சுக்காவை எடுத்து வைச்சி சாப்புடச்சொல்லும். அப்ப புள்ளைக எல்லாம் மூக்க உறிஞ்சிக்கிட்டு ஒருபுடி புடிக்கும். ருசின்னா அம்புட்டு ருசியா இருக்கும் . இதுல ஆத்தாமக சோத்த கம்மியா திண்ணுப்புட்டு கறிய விட்டு வெலாசும். அப்ப ஆத்தா திட்டும் மத்த புள்ளைகளும் சாப்புடனுமுள்ளன்னு.  கடைசில சாப்புடுற ஆத்தாளுக்கு கொழம்புதான் மிஞ்சும். அப்பயெல்லாம் ஆத்தா  சொல்லும் அடுத்தடவை கறி ரெண்டுகிலோவா வாங்கணும்டான்னு மகன்கிட்ட சொல்லும் 

மலையடிகுலதெயவம்கோயில்ல கெடாவெட்டிபூஜை போடுறப்ப உப்புக்கணடம் போட்டுவைக்கும் அங்கம்மா ஆத்தா. அது மழைக்காலங்களுக்கு. தனிகறிய துண்டு துண்டாக்கி உப்பு மஞ்சள் சேத்து சடம்புக்கயிறுல ஊசிவைச்சிக்கோர்த்து  காயவைச்சி எடுத்து வைச்சிக்கிடும். அதை வருத்து கஞ்சி குடிக்கலாம். இல்ல தட்டிப்போட்டு உப்புக்கண்டக்கொழ்பு வைக்கலாம். மழைநாளுகள்ல அத சுட்டு பிள்ளைகளுக்குத்திங்க குடுக்கும் இதுதாண்டா நமக்கு குடுப்பினைன்னு சொல்லும் போது ஆத்தா கண்ணு சிரிக்கும்.....இந்தபாக்கியம் இப்போ எங்க யாருக்குக் கெடைக்கிது அத அனுபவிச்சவுகளுக்கு ஆத்தாவ நெனச்சா கண்ணு கலங்கும்.

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE