இல்லம் - சிறுகதை

By செய்திப்பிரிவு

அவன் சம்சாரம் தீர்மானமாச்சொல்லிப்புட்டா இனியும் என்னால்பொறுக்கமுடியாது,ஒண்ணு அவர் வீட்டுல இருக்கனும் இல்ல நான் இருக்கனும். யார் வேணுமின்னு நீங்களே முடிவுபண்ணிக்கங்க....

அவனும் எல்லாரையும்போலத்தான் தாஜா பண்ணினான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க அவர் பாவம் இந்த வயசான காலத்துல எங்குட்டு போவாரு.அவருக்கு நான் ஒரே மகன் வேற யாரும்கெடையாது நாமதான் பாத்துக்கணும்.....ன்னு

அவசொன்னா ஒங்களுக்கு வேண்ணா அது தலையெழுத்தா இருக்கலாம் எனக்கு அப்புடி இதை கட்டிக்கிட்டு அழுகனுமுன்னு கட்டாயம் இல்லை....ன்னு  முடிவாச்சொன்னா..அத்தோட மட்டுமில்லாம ஏன் முதியோர் இல்லமெல்லாம் இவங்களுக்குகாகத்தானே கட்டி வைச்சி ருக்காங்க...அங்க அனுப்ப வேண்டியது .தானேன்னா.....

அங்க பணமெல்லாம் கட்டனும்மாஏற்கனவே இங்க பட்ஜெட் இடிக்குது அதுக்குவேற பணம்கட்டனும்... அந்தப்பணத்த வீட்டுல செலவு பண்ணுனா நல்லதுதானன்னான்

யாரு ஒங்கல பணம் கட்டுற இடத்துல சேக்கச் சொன்னா ஃப்ரீயா பாக்குற  இல்ல மெல்லா மிருக்குது...அங்க கொண்டு போய் சேருங்க.... அங்க இவரு வயசு ஆளுக எல்லாம் இருப்பாங்க. பேச்சுத்தொணைக்கி இங்க ஆளுஇல்ல அங்க நெறையாப்பேரு இருப்பாங்க...  பொம்பளைகளே இருக்காங்க இவரு ஆம்பளை போக வேண்டியதுதானே ன்னா ....

அது அனாதைகள் ஆளு இல்லாதவுக போற எடமாச்சேஅங்கயா எங்கப்பாவ அனுப்பச்சொல்ற... ந்னு அதிர்ந்துபோய் கேட்டான்.... அவசொன்னா அதுனாலஎன்ன அங்க நல்லாப்பாத்துக்கிறாங்களாம்...

 எனக்குத்தெரிஞ்சவங்க சொன்னாங்க போய் நானே பாத்துட்டு வந்தேன்  நல்லாத்தான் இருக்குதுன்னா...
அப்ப பேசாம நீ போய்டேன் அங்க நாங்க நிம்மதியா இருப்போம் லன்னான்.... போகலாம் தான் ..பிள்ளக இருக்குல அதுகல ஆரு பாத்துக்கிறது....ஆக ஒங்க அப்பாவ அங்க அனுப்புறதான் பிரச்சனையா இல்ல அனுப்புறது பிரச்சனையான்னு கொக்கி போட்டா....

இவன் சொன்னான் தீர்மானமாத்தான் இருக்குறீயா போய் பாத்துட்டெல்லாம் வந்திருக்க.. விசாரிச்சிருக்கன்னான்
அவசொன்னா பின்ன என்ன ஒங்க அப்பா மாதிரி ஒரு சுயநலவாதியப்பாக்க முடியாது பென்சன் வாற பணத்த அவரே வைச்சிக் கிறாரு... நம்ம சிரமப்படுபோது குடுக்கலாமுல்ல கேட்டா கடனாத்தாறேன்னு நோட்டுல எழுதிவைச்சிட்டு குடுத்துட்டு கறாறா த்திரும்பி வாங்கிக்கிறாரு....

நாம் சாப்பாடு போடுறதுக்கு ஏதாவது குடுக்கலாமுல்ல....ம்ம்ம் கை வரமாட்டீங்குது யாருக்குச்சேத்து வைக்கிறாரு இன்னமும்... கணக்குன்னா அம்புட்டுக் கணக்கு ..நாம மட்டும் இலவசமா அவருக்கு சாப்பாடு போடனுமா.... தலையெழுத்தான்னு கத்துனா...

சரி அப்பாகிட்டப்பேசுறேன்னு சொல்லிட்டு அவர்கிட்ட மெல்ல விசயத்த ஆரம்பிச்சான்.. அவர் தீர்மானமா சொல்லிட்டாரு அந்தப் பேச்சுக்கே எடமில்ல. அந்த இல்ல மெல்லாம் எனக்கு சவுகரியபடாது....நீதான் பாத்துக்கனும் இல்லாட்டி நான் கலெக்டர்கிட்ட மனு கொடுப்பேன்... உன் மேல அவங்க உன் மேல கேஸ் போடுவாங்க... பரவாயில்லயா சட்டம் தெரியுமாஉனக்கு  படவா....என்ன ஏமாத்த முடியாதுன்னு   கத்துனாரு...

இவனுக்கு என்னா பண்ணுறதுன்னு தெரியல ஒரு பக்கம் சம்சாரம் இன்னொருபக்கம் அப்பா மண்டை காஞ்சு போய்டுச்சு பேசாம நாம அங்கபோய்டலாம்ன்னா அதுக்கும் வழியில்ல....

அதுக்குள்ள சம்சாரத்துக்கும் அவருக்கும் தினம் சண்டையில அவ என்ன சொன்னான்னு தெரியல...அவர் போக ஒத்துக்கிட்டதா இவ சொன்னா...சரின்னு ஒரு காரை ஏற்பாடு பண்ணுனா... அவரும்கெளம்பிட்டாரு...

இவனுக்கு ஒண்ணும்புரியல...இவனும் போனான்...  அங்க எறங்குனவன்ன  அங்க இருந்தவங்க  சொன்னாங்க இவன் கிட்ட நீங்க ஒங்க அப்பாகூட உள்ளாற போய் ஒரு ரவுண்டு பாத்துட்டு வாங்க... நாங்க சில பார்மாலிட்டீஸ் இருக்கு  பாத்துவைக்கிறோம்ன்னாங்க 

 இவன் சம்சாரம்சொன்னா நீங்க போய் பாத்துட்டு வாங்க நான் ஏற்கனவே பாத்துட்டேன்ன்னா...அங்க இருந்தவரு இவனையும் இவங்க அப்பாவையும் உள்ளாற கூட்டிட்டுப்போனாங்க....

உள்ளாற போனா பாக்கவே பாவமா இருந்துச்சு...நெல்லை ஜெயந்தா சொன்ன மாதிரி குஞ்சுகள் மிதித்து முடமான கோழிகளா அங்க வயசானவங்க இருந்தாங்க இவங்களோட பிள்ளைகளைப்பாத்து ஆவலா கொஞ்சுனாங்க.... எங்க பேரப்பிள்ளைகளு மிப்புடித்தான் இருப்பாங்க...அவங்கலப்பாக்க பேச குடுத்துவைக்கல...ன்னு கண்ணீர் விட்டாங்க....
இவனோட பிள்ளைகளும் அவங்ககூட ஒட்டிக்கிட்டாங்க யாருப்பா இவங்கன்னு இவன் கிட்டக்கேட்டாங்க... இவன் சொன்னான் இவங்க ஆதரவில்லாத பெரியவங்கன்னு 

அப்ப அவங்க கேட்டாங்க நாமதான் ஆதரவா இருக்கோம்ல அப்புறமேன் தாத்தாவ இங்க கொண்டாந்து விடனும்ன்னானுக...

இதை எல்லாம்பாத்துக்கிட்டு இறுகின முகத்தோட இவன் அப்பா வந்துகிட்டு இருந்தாரு இவனுக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சி...

அப்ப தூரத்துல ஒரு வயசான அம்மா இவங்களையே  உத்துப்பாத்துக்கிட்டு இருந்துச்சு...கண்ணு சரியாதெரியல போல...சேர்லதான் ஒக்காந்து இருந்துச்சு...  இவங்க அதுக்குப்பக்கதுல போறப்ப நல்லா இருக்குறீயாடான்னு இவங்க அப்பாவைப் பாத்துக்கேட்டுச்சு...

இவர் மூஞ்சி ஒருமாதிரி ஆயிப்போச்சு...நீ யார் என்ன ஏன் கேக்குற ந்னாரு... அதுக்கு அந்த அம்மா சொல்லுச்சு நடிக்காதடா... பெத்த அம்மாவத்தெரியல ஒனக்கு... கொண்டாந்து விட்டதோட சரி....எட்டிக்கூடப்பாக்கல,,,ன்னுகண்ணதொடச்சிக்கிச்சு...இவன் உன் மகனா இவங்கதான் பேரப்பிள்ளைகளா ந்னுசொன்னவன்ன இவன் அதிர்ந்து போனான்...என்னப்பா இது புதுக்கதையா இருக்குன்னு கேட்டான் 

அவர் தலையதொங்கபோட்டாரு... அந்தப்பாட்டி சொல்லிச்சிஅவன் எப்படி சொல்வான்.... திருட்டுப்பய பொண்டாட்டி பேச்சை கேட்டுகொண்டாந்து விட்டதாச்சொன்னான் ஆனா பொண்டாட்டி செத்துப்போனதுக்கு அப்புறமும் எட்டிப்பாக்கல அப்புறம்தான் தெரிஞ்சது அவ நல்லவ இவனோட ஐடியாதான் இதுன்னு.....

இவனுக்கும் ஞாவகம்வந்துச்சு அப்பா அவரோட அம்மா இவன் சின்ன வயசுல காணாமப்போய்ட்டாங்கன்னு சொன்னது....

அதுக்குள்ள அவன் சம்சாரம் அங்க வந்துட்டாங்க... அவளைப்பாத்ததும் அந்தப்பாட்டி சிரிச்சாங்க....
உனக்கு முன்னாடியே இவங்களைத் தெரியுமான்னு கேட்டான்... அதுக்கு அவ சொன்னா எங்க மாமனாரோட அம்மாவை எனக்குத்தெரியாம இருக்குமா.....ன்னு சிரிச்சா  இவனோட அப்பா மூஞ்சி மாறிப்போச்சு...

அப்ப அவ சொன்னா போன மாசம் என் பிரண்டு இங்க என்னைய கூட்டிட்டு வந்தா அவ ரெகுலரா இங்க வாரவ... அப்ப நான் வந்தப்ப இங்க இருந்த ஒரு அம்மாதான் என்னப்பாத்து விசாரிச்சாங்க....அவங்க நம்ம ஏரியாவில இருந்தவங்கதான்....அவங்கதான் நம்ம பாட்டிகிட்ட என்னப்பத்திச்சொன்னாங்க எனக்கு சாக்காயிடுச்சு.....இது எப்படி எனக்குத்தெரியாமப்போச்சு....யோசிச்சேன் அதுதான் உங்க அப்பாவை இங்க அனுப்புறமாதிரி பேசினேன்...

அவர் ஒத்துக்கமாட்டார்ன்னு தெரியும் அவருக்கு அந்தவலி தெரியனும்ன்னுதான் பேசினேன்...அவர் சண்டைபோட்டாரு அப்பத்தான் அவர் அம்மாவை நான் பாத்தவிசயத்தைச்சொன்னேன்... தலையத்தொங்கப்போட்டாரு

இல்லத்துல பேசிஅவங்களை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுபோக ஏற்பாடுசெஞ்சேன்.நாம இங்க வந்ததே அவங்களைக் கூட்டிட்டுப் போறதுக் குத்தான் ...ஒங்க அப்பாவை விட்டுட்டுப்போறதுக்கில்லன்னுசொன்னவன்ன  அவன் கண்ணு கலங்கிடுச்சு....ஒன்ன தப்பா நெனச்சிட்டேன் நானு என்ன மன்னிச்சிருன்னு கைபிடிச்சி சொன்னான்...

அதே நேரத்துல இவனோட அப்பாவோட அம்மா கண்ணுல இருந்து  கண்ணீர் ஊத்துச்சு எத்தனை நாள்கனவு இங்க இருக்குறவுகளுக்கு எல்லாம்....எனக்கு நனவாயிடுச்சு...நான் அனாதையாச்சாகப்போறோம்பேரப்பிள்ளை கள்கூட இருக்காம பாக்கமன்னு நெனச்சேன் கடவுள் உன் சம்சார ரூபத்துல வந்து நனவாக்கிட்டா... தெய்வம் உன் சம்சாரம்...

இனி நான் செத்தாலும்சந்தோசம்தான் எனக்குக்கொள்ளிவைக்க ஆளிருக்கு  என் பேரப்பிள்ளைக நெய்பந்தம்பிடிச்சி சுத்திவரத்தான் என் கட்டை வேகும்....இது போதும்ன்னு தழுதழுக்க கண்ணீரோட சொல்லும்போது அங்க இருந்தவங்க எல்லார் கண்ணுகளும்கொளமாகிப்போச்சு...

எதுக்கும்கலங்காத இவனோட அப்பா கண்ணும்கலங்கித்தான் போச்சு.... தப்ப ஒணரந்து... என்ன மன்னிச்சிடும்மான்னு கண்ணீர்விட்டாரு..

அப்பவும் அந்தப்பாட்டி          சொல்லிச்சி  இப்பவும் எப்பவும் நீ நல்லாருக்கனும்ன்னு தாண்டா நான் சாமி கும்புட்டேன்  நீ அம்மா இல்லைன்னு சொன்னாலும் எனக்கு நீ எப்பவும்மகன் தாண்டான்னு......கண்ணீரோட....

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE