அன்னிக்கி அந்த அம்மா வீட்டுக்குள்ள நொழைஞ்சவன்ன பாத்தா வீடே ரணகளமா இருந்துச்சு. ரெண்டாவதுமக ஒக்காந்து அழுதுக்கிட்டு இருந்தா. மகன் இறுகிப்போய் ஒக்காந்துருந்தான் மூத்தமக ஒண்ணுமே தெரியாதமாதிரி படிச்சிட்டு இருந்தாகடைக் குட்டிப்பொண்ணு வெளையாண்டுட்டு இருந்துச்சு
ரெண்டாவது மக நொழைஞ்சவன்ன அம்மாகிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணா. அம்மா இவன் என் லேப் டாப்ப லாக் பண்ணிட்டான் ஓபன் ஆகல .தொறந்து குடுக்கச்சொல்லுமா. கேட்டா அக்காவும் இவனும் என்னையப்போட்டு அடிக்கிறாங்கன்னு. கடைக்குட்டி சொன்னாள் ஆமாம்மா எங்களைபோட்டு அடிச்சாங்கன்னு
ரெண்டாவது மக கைகாலெல்லாம் தடுப்பா இருந்துச்சு இங்கபாரும்மா தடுப்ப அதுரெண்டும் கட்டிவைச்சி அடிச்சாங்கன்னு.
ரெண்டாவது மக அரசாங்கப்பள்ளில+2 படிக்கிறதுனால அவளுக்கு அங்க லேப்டாப் குடுத்துருந்தாக. அத மத்த ரெண்டும் கேட்டா அந்தப்புள்ள குடுக்காது நான் +2 படிக்கிறேன் எனக்குத் தான் குடுத்தாகன்னு சொல்லிக் குடுக்காது ஆனா அவனுக்கு அதுல வீடியோகேம் விளையாடனும் அதுக்காகக் கேட்டு அடம் புடிப்பான். இவ தரமாட்டேன்னு அடம்புடிப்பா. அம்மா அப்பா இருக்குறப்ப இது பெருசாகாது அவங்க போனப்புறம் சண்டை பெருசாயிடும் இது வழக்கம்
அவளுக்கு மூணுமகள் ஒரு மகன் இதுல மூத்த மகளும் மகனும் ஒருபக்கம். ரெண்டாவது மகளும் கடைசியும் ஒரு பக்கம் அடிக்கடி இதுக வெளையாட்டுல சண்டை வரும் . அப்பயெல்லாம் பெரிய மகளும் மகனும் சொல்றதைத்தான் நடுமகளும் கடைசியும் கேக்கனும். இல்லாட்டினா தண்டனை கடுமையா இருக்கும். அவங்க அம்மா அப்பா வேலைக்கிப் போயிடுறதுனால பள்ளிக்கொடம் போயிட்டு வந்தவன்ன சண்டை வந்துரும். ஏன்னா இவன் கள்ளாட்டம் ஆடுவான் அதை சொன்னா ஒத்துக்க மாட்டான் பெரிய அக்காகூடசேந்து அவங்களைப்போட்டு அடிப்பான் இதை அவங்க அம்மா அப்பாகிட்ட சொல்லக்கூடாது சொன்னா அவங்க போனவன்ன அதுக்குத்தண்டனை உண்டு
இந்தவிசயம் அம்மாவுக்குத்தெரியும் அதுனால அவ நீ அவன் கேட்டாக்கொஞ்சநேரம் குடுக்கவேண்டியதுதான சின்னப்பையன் வெளையாடிட்டு குடுத்துருவான்லன்னு அவனுக்கு ஜாயிண்டு பேசுனாங்க ஏன்னா அவன் ஒருத்தந்தான் ஆம்பிளைப் பிள்ளையாம். அதுக்கு ரெண்டாவது மக திரும்ப அழுதா ஆமா நீங்க அவனுக்குத்தான் சப்போட் பண்ணுவீங்க ஏன்னா அவன் ஆம்பளைப்புள்ளன்னுன்னு அழுதா
இது அவங்க அப்பா வாரவரைக்கும்தான் அப்பா வந்தா சீன் மாறிடும் ஏன்னா அப்பாவுக்கு ரெண்டாவ்து கடைசிமகள்கள் தான் செல்லம். அதுனால ரெண்டாவது மகசொன்னா நான் அப்பாகிட்ட சொல்றேன் அவர் பாத்துக்குவாருன்னா
மகனுக்குப் பயம் வந்துடுச்சு. அப்பக்கு தெரிஞ்சா போட்டு சாத்திப்புடுவாரு. அதுனால அவன் சொன்னான் நான் லாக்பண்ணல அவளே லாக் போட்டுட்டு வேணுமுன்னு என் மேல கம்ளெயிண்ட் பண்ணுது எனக்கு எதுவும் தெரியாது நான் அப்பாவின்னு சாதிச்சான் . ஆனா அம்மாவுக்குத்தெரியும் அது பொய்யின்னு . சரி அப்பா வந்தவன்ன தீத்துடலாம்ன்னு அமைதியாட்டா. ஆனா ரெண்டாவது மக அழுக நிக்கல அவனை லாக்க தொறக்கசொல்லுன்னு அழுதுக்கிட்டு இருந்தா.
இதுக்குநடுவுல அவங்க அப்பா வந்தாரு. வந்தவன்ன தெரிஞ்சிபோச்சு வழக்கம்போல கலவரம்ன்னு. ரெண்டாவது மக அப்பாவைப்பாத்ததும் ஓன்னு அழுதுகிட்டே விசயத்தை அப்பாகிட்டச்சொன்னா. அவரு அவனை கூப்புட்டு லாக் ரிலீஸ் பண்ண சொன்னாரு. அவன் வழக்கம்போல சாதிச்சான் நான் பண்ணலன்னு. அவரு சொல்லிப்பாத்தாரு கேக்கலை அவனைப்போட்டுச்சாத்திப்புட்டாரு. அவன் அழுதுக்கிட்டே இருந்தான் ஆனா ஒத்துக்கலை. மூத்தமகளைக் கூப்புட்டுக் கேட்டாரு. அதுதான் அவன் கோஸ்ட்டியாச்சே அதுவும் சாதிச்சது கடைக்குட்டி சொல்லிச்சி ஆமா அவந்தான் பண்ணினான்னு
அதுனால அவரு அவனைக்கூப்புட்டு லாக் ரிலீஸ் பண்ணாத்தான் சாப்பாடு இல்லாட்டிக்கெடையாதுன்னு சொல்லிட்டாரு. அப்புறம் ஒண்னுமே தெரியாதமாதிரி சொன்னான் நான் வேணா டிரை பண்ணுறேன். தொறந்தாலும் தொறக்குமுன்னு சொல்லி லேப்டாப்பை வாங்கி கொஞ்சநேரத்துல தொறந்து குடுத்துட்டான்
ஆனா அப்ப ரெண்டாவது அக்காவைப்பாத்த பார்வை இரு நாளைக்கி வைச்சிக்கிறேன்றமாதிரி இருந்துச்சு உடனே அவ அப்பாகிட்ட சொன்னா அப்பா அவன் என்ன மொறைக்கிறான் நாளைக்கி நீங்க இல்லாதப்ப அடிப்பான்னா. அப்ப அப்பா அவன் கிட்ட சொன்னாரு. அதெல்லாம் செய்யக்கூடாது அவ உன் அக்காதான. அனுசரிச்சிப்போகணுமுன்னு தெரியாதா உனக்குன்னு அடவைஸ் பண்ணாரு.
இது நடந்து ஆறேழு வருசமாயிடுச்சு. பெரிய அக்காவுக்கு கலியாணமாயிடுச்சு. அப்ப இவன் அக்கா வேறவீட்டுக்குப் போகுதேன்னு கலங்குனான். அப்ப சின்ன அக்கா சொல்லிச்சி உனக்கு சப்போட்டுக்கு ஆள் கொறையுதுன்னுதான ஃபீல் பண்ணுற உணமையில இல்லைலன்னு கிண்டலடிச்சா. அவன் அடிக்கவந்தான். அதுக்கபுறம் அவன் சண்டை அதிகமாப்போடுறதில்ல. ஏன்னாசப்போட் கிடையாதே. அவனும் பெரியவனாகிட்டான் படிக்கவேண்டியது அதிகமாப்போச்சு நேரமில்ல. இப்ப ரெண்டாவது அக்காவுக்கு கலியாணமாச்சு. இவன் கலியாணத்துக்கு விழுந்து விழுந்து வேலைபாத்தான் அவளுக்கே ஆச்சரியமா இருந்துச்சு எப்பப்பாத்தாலும் சண்டை போடுற இவனா இப்புடி வேலைசெய்யிறான்னு
அவனைப் பாத்துகேட்டா சீக்கிரம் நான் வீட்டைவிட்டுக் கெளம்பனும்.அதுக்குத்தான ஆர்வமா வேலைசெய்யிறன்னு கேட்டவன்ன அவன் கண்ணு கலங்கிடுச்சு. என்ன இருந்தாலும் நீ என்னோட அக்கா உன் கூட வெளையாடுனது சண்டபோட்டது போட்டு அடிச்சது இது எல்லாம் சின்னப்புள்ளல செஞ்சது. எனக்கு அக்கான்னு நீங்கதான இருக்கீங்க இனிமே பேசக்கூடமுடியாது உன்னோட குடும்பம் பிள்ளை குட்டின்னுபோய்டுவீங்க
வீடு வெறிச்சோடிப்போயிடும் . எனக்கு அழுக அழுகையா வரும்னு சொன்னான். அவளுக்கும் கண்ணு கலங்கிடுச்சு அப்ப அவ சொன்னா என் லேப்டாப்ப நீயே எடுத்துக்க. அக்கா நியாபகமா உன்கூட இருக்கட்டும் ந்னு சொன்னா. அவனுக்குபழைய நெனப்பு வந்திடுச்சி. அக்கா அன்னிக்கி நான் லாக் பண்ணுனது தப்புத்தான் மன்னிச்சிடுன்னு சொன்னான்
அதுக்கு அவ கண்ணீர்வழியசொன்னா அதுதான் ஒன்னை எப்பவும் நெனைக்கவைக்கும் மலரும் நினைவுன்னு.. .அவனும் கண்ணத்தொடச்சிக்கிட்டான் இதப்பாத்த அம்மாவும் முந்தானையில் கண்ணத்தொடச்சிக்கிட்டா.
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்