அது - சிறுகதை

By செய்திப்பிரிவு

அது எந்த ஊருல இருந்து வந்துச்சுன்னு தெரியல வரும்போதே அது பைத்திய மாத்தான் வந்துச்சு. தலையில ஒரு அழுக்கு மூட்டை கையில ஒரு பையி அதுல என்னன்னவோ இருக்கும் ஆரையும் அதத்தொடவிடாது. எங்க போனாலும் அந்த மூட்டையோடயும் பையோடயும் தான் போகும். படுக்குறப்பக்கூட  அதவிடாது

அழுக்கும் நாத்தமுமாத்தான் இருக்கும் யாரும் பக்கத்துல போகமுடியாது அம்புட்டு நாத்தம். யார்கிட்டயாவது கைநீட்டும். குடுத்தா வாங்கிக்கும். வாங்கிட்டு ஈன்னு சிரிக்கும். எப்பையுமே வெலக்காத பல்லு  காவிக் கலருல தெரியும் 

தனியாப்போகும்போது ஏதோ பாட்டுப் பாடும் அது என்ன பாட்டுன்னு ஆருக்கும் தெரியாது...   அதுபாட்டுக்குப்போகும்  சின்னப்புள்ளைகளை கண்டா சிரிக்கும்  அதுக வெரட்டுனா கோச்சிக் காதுகடைத்தெருவிலதான் எப்பயுமிருக்கும் 

அதுக்கு முருகன்தான் டீயும் பன்னும் குடுப்பாரு. தெனம் அதுக்கபுறம் அதுபாட்டுக்குத்திரியும்
ஒருநா காலையில அது கடைத்தெருவில கத்திட்டு இருந்துச்சு மூட்டையும் பையயும் காணோம் .எதுக்குக்  கத்துது ஏன் கத்துதுன்னு ஆருக்கும் புரியல 

அன்னிக்கிப்பூராம் அது ஆம்பிளைகளைக் கண்டா கல்லெடுத்து எறிஞ்சிக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு என்னமோ நடந்துருக்குன்னு பேசிக்கிட்டாக

அதைப்போயி யாரு என்ன செஞ்சிருக்க முடியுமுன்னு பேசிக்கிட்டாக ஆனா
என்னமோ நடந்துருக்குன்னு மாத்திரம் தெரிஞ்சதுஅதுக்கப்புறம் அதோட ஒடம்புல மாத்தங்க வந்துச்சு. ஆமா வயிறு உப்ப ஆரம்பிச்சிச்சி

அது புள்ளத்தாச்சியானது தெரிஞ்சிது
இது எல்லாருக்கும் அதிர்ச்சியா இருந்துச்சு

இதைப்போயி இப்புடி ஆக்குன கேவலமானவன் எவன்ன்னு எல்லாரும் திட்டுனாக. எல்லாருக்கும் ஒருத்தன் மேல சந்தேகம் வந்துச்சு. அவன் கன்னியப்பன்

அவன் தான் சரியான குடிகாரன் கொஞ்சம் பொம்பளைபொறுக்கின்னு பேரெடுத்தவன். அவன சாடமாடயாக் கேட்டாக அவனுக்குக் கோவம் வந்துடுச்சு 

நான் கொஞ்சம் அப்புடி இப்புடி ஆளுதான் அதுக்காக இதுக்கிட்ட வைச்சிக்கிற அளவுக்கு தராதரமில்லாதவனில்லன்னான்  அப்புறம் யாராயிருக்கும்ன்னு ஒரே கொளப்பம். ஆனா நாளொரு மேனியுமா வயிறு வளந்துக்கிட்டே இருந்துச்சு

டீக்கடை முருகன் இரக்கப்பட்டு சாப்பாடு வாங்கிக்குடுத்தாரு பாவம் புள்ளத்தாச்சியா இருக்கேன்னு. அவர ஒருமாதிரி பாத்தாக அவரு சொன்னாரு பாத்தாபாத்துக்கங்கநான் புள்ளத்தாச்சியாச்சேன்னு வாங்கிக்குடுக்குறேன் நீங்களும் வாங்கிக் குடுக்கலாமே பாவமில்லயா அதுன்னாரு   இப்ப எல்லாருக்கும் கொழப்பமாப்போச்சி

அதுக்குள்ள பிரசவம் நெருங்குனமாதிரி தெரிஞ்சது. இப்ப ஊருக்குள்ள வசூல் பண்ணி  அதக்கவனிக்கிறதுன்னு முடிவெடுத்தாக ஆளாளுக்கு முடிஞ்சதைக் குடுத்தாக பொறுப்ப டீக்கடை முருகன் ஏத்துக்கிட்டாரு   அதுக்கு வேலாவேளைக்கி சாப்பாடும் கெடைச்சது . 

பிரசவம் நெருங்கிடுச்சு  இப்ப அத சரிபண்னுற வேலைய குட்டச்சிக்கிட்ட குடுத்தாக 
குட்டச்சிதான் அந்த ஊருல எல்லாருக்கும் பிரசவம் பாக்குறவ. புள்ள எப்பப்பொறக்கும்ன்னு அவசொன்னா கரெட்டா இருக்கும்அவளும் பொறுப்பெடுத்துஅவள கூட்டிட்டுப்போயி குளிப்பாட்டி சரிபண்ணுனா. அப்ப கையிலி ருக்குற மூட்டைய மட்டும் விடவே இல்ல கெட்டியாப்புடிச்சிக்கிருச்சு.....

ஒரு அம்மா வந்து பழைய பொடவ குடுத்துச்சு. பழைய சாக்கெட்டு ஒரு அம்மா குடுத்துச்சு இப்ப அது நல்லாக்குளிச்சி மொக்த்துல மஞ்சள் எல்லாம் போட்டு நல்ல பொடவகட்டி    வந்துச்சு. எல்லாரும் குட்டச்சியப் பாராட்டுனாக. 

அதப்பாக்க எல்லாருக்கும் சந்தேகம் வந்துச்சு இம்புட்டு அழகா இருக்குற இது ஏன் இப்புடியாச்சு எதுனல ஆச்சுன்னுன்னு யோசிச்சாக

அன்னிக்கிப்பிரசவ வலி வந்துடுச்சு குட்டச்சிதான்   வீட்டுக்குக் கூட்டிட்டுப்போய்  பாத்துக்குச்சு. அதுக்கு பிரசவ ஏற்பாடெல்லாம் கவனிச்சிச்சு ஒருவழியா அதுக்கு அழகான ஆண்புள்ள பொறந்துச்சு

புள்ள பொறந்தவன்ன அது ஆளே மாறிடுச்சு. எப்பபாத்தாலும் பிள்ளயக் கொஞ்சுறதும் தாலாட்டுறதும் தான் .புள்ள அழகாவேற இருந்துச்சா எல்லாரும் அந்த ஊருல இருக்குற எல்லா ஆம்பளை மூஞ்சிகளையும் ஒத்துப்பாத்தாக

"இவனா இருக்குமோ அவனா இருக்கு மோ"ன்னு. ஆனா விசயம் புடிபடல எல்லாருக்கும் இது மர்மமா இருந்துச்சு 

யாருஇதுக்குக்காரணமுன்னுதெரியல
ஒரே கொழப்பமா இருந்துச்சு அன்னிக்கிக் காலையில ஒரே பரபரப்பு ஆரோ 

அதைக்கொன்னுட்டாக புள்ள மாத்திரம் பக்கத்துல அழுதுக்கிட்டு இருந்துச்சு. பக்கத்துல மூட்டை கெடந்துச்சு...அது தலையில கல்லப்போட்டு யாரோ கொண்ணுட்டாகஇப்ப விசயம் பெருசாப்போச்சு. அத இப்புடி ஆக்குனவன் தான் விசயம் வெளிய தெரியிற மாதிரி ஆனவன்ன கொண்ணுட்டான் நு பேசிக்கிட்டாக

விசயம் போலீசுக்குப்போச்சு அவுக வந்து விசாரிச்சாக முருகன கன்னியப்பன குட்டச்சிய எல்லாரையும் விசாரிச்சாக ஆனா விசயம் ஒண்ணும் சிக்கலஅந்தக்கொழந்தைய குட்டச்சி எடுத்து வளத்தா. எல்லாரும் அப்ப அப்ப காசுகுடுத்தாக.அதுநடந்து ஒருமாசமாச்சு .
அன்னிக்கி ஒருஅம்மா வந்துச்சு அந்த ஊருக்கு அது வந்து எல்லார்கிட்டயும் கேட்டுச்சு  அந்த  பைத்தியக்காரம்மாவப்பத்தி அப்ப விசயத்தச்சொன்னாக புள்ள மட்டும் குட்டச்சிக்கிட்ட இருக்குறதாச்சொன்னாக

அதை ஓடிப்போயி தூக்குச்சு அந்தம்மா
என்னான்னுகேட்டதுக்கு அதுசொல்லிச்சி  "இது அவங்களோட மருமகளாம் இதுவும் அவளோட கலியாணமாகி இந்த ஊருக்குச்சுத்திப்பாக்க வந்தாகலாம்வந்த எடத்துல ஆக்ஸிடெண்ட்ல அவன் இறந்துட்டானாம் இவ இப்புடி யாகிட்டாளாம் இவங்களுகு விசயம் தெரியாம 

தேடிக்கிட்டுஇருந்தாகலாம் பேப்பருல கொலைசெய்திபாத்து இந்தம்மா வந்துச்சாம் 
அப்ப அந்தம்மா இது வைச்சிருந்த மூட்டையப் பிரிச்சிப்பாத்துச்சு  கொலநாத்தம் அடிச்சிச்சி... 
கஸ்ட்டப்பட்டு மூக்கைப்பொத்திக்கிட்டு அதை பிரிச்சிப்பாத்தாங்க, அதுல குப்பயோட ஒரு பர்ஸ் அதுல இது அதோட புருசன் போட்டாவும் இருந்துச்சு

அது விசயமில்ல அந்த மூட்டக்குள்ள இன்னொன் னும் இருந்துச்சு அது ஒரு ஆம்பளை யோட சட்ட. அதை எடுத்து வந்த அம்மாக்கிட்டக்கேட்டாக அது அவங்க மகனோடதில்லன்னு சொல்லிருச்சு விசயம் கேள்விப்பட்டு வந்த போலீசுஅந்தச் சட்டைய சலவைக்கார  வீட்டுல காட்டிக் கேட்டப்பத்தெரிஞ்சது  அது கன்னியப்பன் சட்டன்னு. அவனக்கூப்புட்டு ரெண்டு தட்டு தட்டுனவன்ன ஒத்துக்கிட்டான். அவன போலீசு புடிச்சிட்டுப்போச்சு

வந்த அம்மா அந்தப்பையன த்தூக்கிக்கிச்சு என் மகன் போயிட்டான் மருமகளும் இப்புடியா கிட்டா.இது எங்க மருமகபெத்தபுள்ள எங்களுக் குன்னு யாருமில்ல இவனத்தூக்கிட்டுப்போயி வளக்கக்குறோம் அப்பத்தான் எங்க மனம் சாந்தியடையும்ன்னு சொல்லிட்டுத் தூக்கிட்டுப்போச்சு......

பாத்துக்கிட்டு இருந்தவுக இப்புடியும் நடக்குமான்னு அதிசயமாப்பேசிக்கிட்டாக

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE