ஆற்றில் இறங்கிய அழகர் - சிறுகதை

By சரவணன்

இந்தக்கதை ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கொரோனா எல்லரையும் பாடாப்  படுத்திக்கிட்டு இருந்த நேரத்துல நடந்தது


எல்லாவருசத்தப்போலஅந்த வருசமும்  கோபால கிருட்டினன் என்ற கோவாலு இந்த வருசமும் அழகர் ஆத்துல எறங்குறதுக்கு எதிர்ச்சேவையில தண்ணிப்பீச்ச அழகர் கோயில்ல கொடி ஏறுனவன்ன வெரதம் வீட்டோட இருக்க ஆரம்பிச்சாரு. ஏற்கனவே உண்டியல்ல போட்டு வைச்ச காசு நொம்பி வழியிது அதைகொண்டுபோய் அழகு மலையான் உண்டியல்ல சேத்தாத்தான் நிம்மதி சேத்துட்டு அழகுமலையானே கைகால் சொகத்தை எல்லாருக்கும் குடுப்பா பழைதண்ணிய குடுப்பா எல்லாரும் நல்லாருக்கனும்” நு வேண்டிட்டு வாரது வழக்கம்

அவரோட அம்மா ஆண்டாள் இவருக்கு, அழகருக்கு ஜென்ம நேத்திக்கடனா வேண்டிக்கிட்டுத்தான் இவரு பொறந்தாராம். அதுவரைக்கும் வயத்துல புழுப்பூச்சி தங்காததால பொறக்குற மகன எதிர்ச்சேவையில வெரதமிருந்து தண்ணிப்பீச்சுர ஜென்ம நேத்திக்கடன் செய்யச்சொல்லுறேன் அழகு மலையானே ந்னு வேண்டிக்கிட்டதால பொறந்தவன் தான் இந்த கோவாலு.
அந்த கண்ணன் பெயரையே வைச்சி பொறந்ததுல இருந்து அவனோட அப்பா கூட்டிட்டுப்போயி எதிர்ச்சேவையில தண்ணி பீச்சி சாமிகும்புட்டுட்டு போட்டுவைச்ச காணிக்கைய அழகுமலையான் உண்டியல்ல சேத்துட்டு வீட்டுக்கு வந்து பெளர்ணமி வெரதம் விடுறதுதான் வாடிக்கை.

வீட்டுல துக்ககாரியம் இல்லாத எல்லா வருசத்துலயும் இது நின்னதில்ல. அங்க போயி அந்த ஆயிரக்கணக்கான சனங்க தலையப்பாத்து ஆயிரம் தலைபாத்தா அதுவரை செஞ்சபாவம் போகும்ன்னு அம்மா சொல்லுறத கேட்டு அந்த அழகுமலையான் மீது தோல்பையில நிரப்புன மஞ்சள் குங்குமம் கலந்த தண்ணீர பீச்சி அவரக்குளிர்விச்சி வணங்கி ஆத்துக்குள்ள அவரு தங்கக்குதுரையில எறங்குறதப்பாத்தா ஜென்ம புன்னியம்ன்னு நம்புறவரு கோவாலு,

இந்தவருசம் வெரதம இருக்க ஆரம்பிச்சாச்சு. சுத்தபத்தமா இருக்கனும் வருசம் பூரா கவிச்சி இல்லாம சாப்பாடு சாப்புடுற பழக்கமில்ல. இந்த நாளுகள்ள சுத்தமா தொடாம குடும்பத்தோட வெரதம் ஆனா  இந்த கொரானா சூழ்நிலையில திருவிழா நடக்குமா போகமுடியுமா ஊரடங்குவேற இருக்குது ஒரே கொழப்பமா இருந்துச்சு.

அழகுமலையானே இதென்ன சோதன. எந்த வருசமும் இல்லாம இந்த வருசம் என்ன நடக்கப்போகுதுன்னு தெரியலையேன்னு மனசு கலங்கிக்கெடந்துச்சு

இதுக்கு நடுவில அம்மா மீனாட்சி கலியாணமே சிம்பிளா கோயிலுக்குள்ள நடந்து முடிஞ்சிருச்சு எல்லாரும் வீட்டுல இருந்தபடியே தாயக்கும்புட்டு தாலி மாத்திக்கிட்டாக.

ஆனா அழகர் வைபோகம் அப்படியில்லயே எல்லாமே ஆத்துக்குள்ள நடக்குறதாச்சே மொட்டபோடனும் தண்ணிபீச்சனும் காணிக்க செலுத்தனும் அழகுமலையானே என்ன செய்யக்காத்துருக்கன்னு மனசு அடிச்சிக்கிச்சு.

ஆத்தாவேற சொல்லிச்சி அதுக்கு வயசு 85 ஆச்சு அடுத்த திருவிழாவுல அழகன பாப்பனோ பாக்கமாட்டனோன்னு கண்ணு கலங்கி அழகமலையானேன்னு பொலம்பிக்கிட்டு இருந்துச்சு

அழகர் ஆத்துல எறங்குறது இந்த வருசம் இல்லைன்னு அறிவிச்சிட்டாங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியல அப்ப ஆத்தாதான் சொல்லிச்சி

“ரொம்ப வருசங்களுக்கு முன்னாடி தேனூர்லதான் சாமி ஆத்துல எறங்கிட்டு இருந்துச்சு திருமலைநாயக்கர்தான் அதை மதுரைக்கு கொண்டுபோனாரு. அதே வைகை ஆறுஇங்குனக்குள்ளயும் ஓடுது . நாம அங்கபோயி அழகன நெனச்சிக்கிட்டு செய்யிறதச்செஞ்சிடுவோம் காணிக்கைய வைச்சிருந்து அடுத்தவருசம் செலுத்திடலாமுன்னு”
சொல்லிச்சி ஆத்தா

கோவாலு சொன்னாரு” அந்தக் காணிக்கைய வேலவெட்டிக்கிப்போகமா சனங்க சோத்துக்கு கஸ்ட்டப்படுறாங்க அத அன்னதானமாப் பண்ணிடலாம்ன்னு’
சொன்னாரு.

ஆத்தா ஒத்துக்கிச்சு அதுமாதிரியே அன்னதானம் ஏற்பாடும் பண்ணியாச்சு. எதிர்ச்சேவை அன்னிக்கி சாமிக்கி பூஜையப்போட்டுட்டு அன்னதானம் முடிச்சிட்டு வழக்கம்போல தண்ணிப்பீச்சுற உடையபோட்டுகுடுமபத்தோட எல்லாரும் வைகை ஆத்துக்கு கோவிந்தா கோவிந்தான்னு கெளம்புனாக

ஆத்துக்குள்ள ஒருசனம் ஈ காக்கா இல்ல கண்ணுல நீர்வழிய அழகு மலையானே இதுவும் உன் வெளையாட்டான்னு கும்புட்டுக்கிட்டு கோவிந்தா கோவிந்தான்னு குரலெப்பிக்கிட்டே குடும்பத்தோட கோவாலு போனாரு

கெழக்க நிலா தெரிய ஆரம்பிச்சது அழகன ஆத்துல காணாம கண்ணீர்மல்க தண்ணியப்பீச்சிக்கிட்டே போனாக
அப்ப அந்தக்கரையில இருந்து நாலஞ்சி சின்னப்புள்ளக கூட்டமா டண்டன் டண்டன்னு வாயில மேல கொட்டிட்டு பொம்ம மாதிரி களிமண்ணுல குதிரமேல அழகர் செலசெஞ்சி தூக்கிக்கிட்டு ஆத்துக்குள்ள எறங்குனானுக.

அவனுகளுக்கு அது வெளையாட்டு. அதுல ஒருத்தன் பாலித்தின் பைல தண்ணிய ரொப்பி சாமிமேல பீச்சிக்கிட்டு வந்தான் ”கோவிந்தா கோவிந்தா”ன்னு

ஆத்துக்குள்ள வாய்க்கால் மாதிரி ஓடுறதண்ணிக்கி கொண்டாந்து அந்த பொம்ம அழகர் சாமிய இறக்கிவைச்சிட்டு ”டண் டண் டண்” ந்னு வாயிலயே மேளம் கொட்டி கைத்தட்டுனாக
அதப்பாத்த கோவாலுக்கு ஆனந்தம் தாங்கல.

“கோவிந்தா கோவிந்தா”ன்னு கண்ணுல நீர்வழிய கத்திக்கிட்டே ஓடுனாரு
அந்த எடத்துக்குகு. தான் வைச்சிருந்த தண்ணிய அந்த அழகர்மேல பீச்சிட்டு நெடுஞ்சாங்கெடையா விழுந்து கும்புட்டாரு. ”அழகனே கோவிந்தா வந்துட்டயா....இந்த பக்தனைதேடி தரிசனம் குடுக்க சின்னப்புள்ளைகளோட சின்னப்புள்ளையா வந்துட்டியா பகவானேன்”

னு அந்த சின்னப்பசங்க கால்ல விழுந்து கும்புட்டாரு
அவரோட ஆத்தாவும் தட்டுத்தடுமாறி வந்து இந்த காட்சியப்பாத்துட்டு விழுந்து கும்புட்டுச்சு ”அழகு மலையானே கோபாலான்”னு

அந்தச்சின்னபயலுகளுக்கு ஒண்ணும் புரியல. தெகச்சிப்போய் நின்னானுக ஆனா கோவாலுக்கும் அவரோட ஆத்தாவுக்கும் மனசு நெறஞ்சுபோய் கண்ணீர் தாரதாரயா ஊத்த கோவிந்தா கோவிந்தான்னு சொல்லிக்கிட்டே இருந்தாக
அப்ப அந்த பொம்மை வடிவிலான அழகர் புன்சிரிப்பு சிரிச்சமாதிரி இருந்துச்சு

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE