தோழர் - சிறுகதை

By செய்திப்பிரிவு

அன்னிக்கி ஆஸ்பத்திரில அவரைப்பாத்தேன். நல்லா தளர்ந்து போய் இருந்தாரு. அவர் அவர் சம்சாரம் பொண்ணு மூணுபேரும் வந்திருந்தாங்க.. மாஸ்க் போட்டிருந்ததால அடையாளம் தெரியல.. சந்தேகம் வந்ததுனால ”நீங்க பழைய யூனியன் தலைவர் இன்னார் தான”ன்னு கேட்டேன்... அவர் அடையாளம் கண்டுக்கிட்டு ”என்னாப்பா நல்லா இருக்கி யா”ன்னு கேட்டார்...
“ இருக்கிறேன் நீங்க”ன்னு கேட்டேன்.

“.நான் நல்லாத்தேன் இருக்கேன் மகளுக்குக்காக ஆஸ்பத்திரி வந்தேன்”னு சொன்னார்....
அவர் போனவருசம் ஏப்ரல்மாசம் ரிட்டயர்டு ஆனவரு. கிட்டத்தட்ட 38 வருசம் சர்வீஸ். அவர் வேலையில சேந்ததுல இருந்து தீவிர தொழிற் சங்கவேலைகள்ல ஆரவமா இருந்தாரு . சாதரண செக்சன் நிர்வாகக்குழு உறுப்பினரா இருந்து படிப்படியா தலைவர் ஆனவர், பெரும்பாலும் நிர்வாகத்துக்கூட மத்தவங் களுக்காக சண்டைபோட்டு தான் பாதிப்பு அடைஞ்சவரு.

அவருக்கு அதுனால பல இழப்புகள்ப்ரமோசன் லேட்டாச்சு. இவரோட வேலைக்கி சேந்த பலர் இவரைவிட ரெண்டுமூணு கிரேடு மேல போய்ட்டாங்க. செலர் ஆபீசராயிட்டாங்க அடிக்கடி யூனியன் வேலைக்காக லீவு போட்டு வருமானமும் கம்மியாத்தான் வரும்... ஆனா அதைப்பத்தியெல்லாம் அவர் கவலைப் படமாட்டார்...

அவருக்கு லட்சியம் சேவை செய்யிறது.. அத செஞ்சிக்கிட்டே இருப்பாரு.. எவ்வளவு செஞ்சாலும் வேலை ஆகனும்ன்னா தலைவரேன்னு அவர்கிட்ட வந்து நிப்பாங்க அது நடக்கலைன்னா அவர என்னா அவர் கிழிச்சாருன்னு திட்டுவாங்க முதுகுக்கு பின்னாடி..அது அவர் காதுலவிழுகும் ஆனாலும் அவர் தன் பணியநிறுத்துனதுமில்ல தன்ன மாத்திக்கிட்டதுமில்ல... அவரே சொல்வாரு
“இது ஒருநன்றி எதிர் பாக்காத வேலை .. தேங்க்லெஸ் ஜாப் ... இதுல நல்ல பேரெல்லாம் எடுக்கமுடியாது...கடமையை செய் பலன் எதிர்பாராதே... திட்டும் வாங்கிக் கன்ற தொண்டு இது”     ன்னு சொல்வாறு...

பொதுவா ரிட்டயர்டு ஆகிறவங்களுக்கு எல்லாம் யூனியன் சார்புல விழாஎடுத்து
”இவர் நல்லவர் வல்லவர்”ன்னு பேசி வழி அனுப்புறது வழக்கம்.. இவரே பலருக்கு முன்னாடி நின்னு செஞ்சிருக்காரு...அவர் யூனியனுக்கு எதிரியா போட்டுக்குடுக்குறவங்களா இருந்தாலும் .

“அது அவர் குணம். கடமை செய்யிறது என் குணம்..பசுவின் குணம் பால் குடுக்குறது அதை நரிக்கிட்ட எதிர்பாக்கமுடியாது”ன்னு நு சொல்வாரு.
ஒருதடவை ஒருத்தரப்பழிவாங்க வேணுமின்னு அவர்மேல ஒரு குற்றம் சொமத்துனாங்க. அவர் சொல்லாம லீவுபோட்டார்னு. இம்புட்டுக்கும் அவர் சொல்லிட்டுத்தான் போயிருந்தாரு. அவரோட ஆபீஸர்க்கு இவர பிடிக்காது காரணம் ஜாதி.. அவருக்கு அவரோட ஆளுகளுக்கு ஓவர் டைம் குடுப்பாரு மத்தவங்களுக்குத் தரமாட்டாரு. கேட்டா

“அது என் இஸ்டம்”ன்னு சொல்வாரு. லீவுல போனவர் அதுக்காக அவர்கூட சண்டபோட்டவர். அதை மனசுல வைச்சி அவர் மேல சொல்லாம லீவு போட்டார்னு சொல்லி அவர் சம்பளத்தைக் கட் பண்ண ஏற்பாடு செஞ்சாரு அந்த ஆபீசரு.
அத இவர்கிட்ட சொன்னார் அவர். இவர் நேரபோய் அவர்கிட்ட பேசுனார். அவர் அதை கண்டுக்கல. ”என் இஸ்டம் நீ ஒண்ணும் பண்ணமுடியாது”ன்னு சொல்லிட்டாரு..

மறுநாள் முக்கியமான வேலை அன்னிக்கி இவர் எல்லாரையும் கூப்புட்டு ஒருமணிநேரம் லேட்டா வரச்சொல்லிட்டாரு.. அதுனால வேலை லேட்டாச்சு. அந்த ஆபீசருக்கு வேலைய சீக்கிரமா முடிக்கச் சொல்லி பிரசர். ஆனா எல்லாரும் ஒருமணிநேரம் லேட்டா வந்ததால முடியல... பேச்சுவார்த்தைக்கு அவருக்கு மேல் அதிகாரிக்கிட்ட போய் சரி பண்ணுனாரு
அதோட இல்லாம சம்பளம் அவருக்குக்கட் பண்ணுனதைப் பிரச்சனை யாக்கி மேல வரைக்கொண்டுபோய் மேனேஜர்கிட்ட பேசி வாங்கிக் குடுத்துட்டாரு

அதுல இவர் மேல அவருக்கு படுகோவம்... அது னால இவரோட பிரமோசன்ல அவர் கை வைச்சிட்டாரு ஆனாஇவர் அதைப்பத்திக் கவலைப்படல

ஆனா இவர் ரிட்டயர்டு ஆன நேரம்சரியில்லாத நேரம். கொரோனா பரவல் இருந்த 2020 ஏப்ரல்ல ரிட்டயர்டு ஆனார். அது லாக்டவுன் நேரம் அதுனால

“விழா எதுவும் வேணாம்.. சமூகப் பொறுப்பு வேணும் ஒரு யூனியன் தலைவருக் கு”ன்னு சொல்லி எதையும்அவரே  அனுமதிக்கல ரெண்டுபேர் கொண்டுபோய் வீட்டுல விட்டுட்டு வந்தாங்க..எந்த பாராட்டும் இல்ல விழாவும் இல்ல... அவர் சொன்னார்
“எனக்கு ரிட்டயர் மெண்ட்லவிழா எடுப்பாங்க பாராட்டு வாங்கன்னு நான் தொழிற்சங்க சேவை செய்யல”ன்னு...

அதுவுமில்லாம நிர்வாகம் அவரை பழி தீத்துக்க அவர் செட்டில் மெண்டுல ஆட்டம் காமிச்சிச்சி அதுல ஏகப்பட்ட சிக்கல. அவருக்கு அப்புறம் வந்த யூனியன் தலைவர் இவரோட நேரடியான எதிரி நிர்வாகத்துக்கு ஆதரவான ஆள் அதுனால அவர் அதைக் கண்டுக்கல..
அவர் செட்டிமெண்ட் பணம் வைச்சித்தான் பொண்ணுக்கு கலியாணம் பையனுக்கு வீடுன்னு பிளான் பண்ணி ருந்தாரு
இதுக்கு நடுவில அவரை நான் பாத்த அடுத்த மாசம்அவர்ஆஸ்பத்திரில அனுமதிக்கப் பட்டார். அவர் ஒடம்புல ஏகப் பட்ட பிராபளம்.. அடுத்தவரைக் கஸ்ட்டப் படுத்தனும்னே எதையும் சொல்லாம உள்ளுக்குள்ளயே வைச்சி பிரச்சனை பெருசாப்போச்சு கிட்னி லீவர் எல்லாம் பாதிச்சிடுச்சு...அவரை காப்பாத்த முடியல... உசிர் போய்டுச்சு...

பாவம் அவர் சம்சாரம் கலங்கிப்போய்ட்டாங்க யாரும் உதவிக்கு வரல... கொரானா காலம் வேற எதுக்கும் ஆள் கிடைக்கல.. அவர் கூட இருந்த ஒரு அஞ்சுபேர்தான் வந்தாங்க.. அவர் கூட வேலை செஞ்சவங்க அவர் யாருக்காக நிர்வாகத்தோட சண்டை போட்டாரோ அவங்க யாரும் எட்டிக்கூடபாக்கல... அவர் கூட இருந்தவங்க வாட்சாப்பில அவரோர மரணச்செய்தி போட்டாங்க... அது வந்து RIP ந்னுமூணு எழுத்தப்போட்டதோட தங்களோட கடமை முடிஞ்சிடுச்சுன்னு இருந்துட்டாங்க..

அவரை அடக்கம் பண்ணுன மறுநாள் அங்க போயிருந்த அந்த அஞ்சு பேர்கிட்ட போன் பண்ணி விசாரிச்சாங்க
“எப்புடி இப்படி ஆச்சு”ன்னு... ஆனா அவர் சம்சாரம் சொல்லிஅழுதாங்க..

“ ஏய்யா யாருக்காக கஸ்ட்டப்படியோ யாருக்காக குடும்பத்தை பாக்காம ஒழைச்சியோ ஒருத்தரும் திரும்பிப்பாக்கலயே அய்யா”.... நு அழுதப்ப அவர் கூட இருந்த அந்த அஞ்சுபேரும் கலங்கிட்டாங்க ..

“இன்றய காலகட்டதுல மனுசங்களோட சுயநலம் அளவுக்கு மீறி வளந்துடுச்சு.......என்னத்த சொல்ல”ன்னு கண்ணீர்வடிச்சாங்க அவங்க...

அவங்ககிட்ட அந்த அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல எந்த வார்த்தையும் கெடைக்கல... கண்ணீர் துளிகள் தான் காணிக்கையாக்க முடிஞ்சது.

அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE