அந்த அம்மா தேடிவந்து
“ஏண்டி பொறுப்பத்தவளே ஒம் மக ஊருமேயிது ஊருக்கே தெரியிது ஒனக்குத் தெரியுமா தெரியாதா என்னா
பிள்ளயப்பெத்து வைச்சிருக்க ஏடாகுடமா ஆகுறதுக்குள்ள கூப்புட்டு விசாரி அடக்கிவை இல்ல அவ ஓடுகாலியாப்போய்டுவா சாக்கிறதை என்னமோ சொல்லுறதைச்சொல்லிப் புட்டேன்
அதுக்கப்புறம் ஒன் பாடு ஒம்மக பாடு” நு சொல்லிட்டுப்போச்சு
ஏற்கனவே அரசல் புரசலா காதுல விழுந்தி ருந்தாலும் இனிமே சும்மா இருந்தா இந்த அம்மாவே ஊருபூராம் தமுக்கடிச்சிப் புடுவா
, ஏற்கனவே இவளுக்குப்பேரு கிடுகட்டி கதைய பரப்புறதுல இவளை மிஞ்ச ஊரில ஆளு கெடையாது அதுனால மககாரி வந்தவன்ன விசாரிச்சே ஆகனும்னு நெனைச்சிக்கிட்டா
அன்னிக்கிச் சாயங்காலம் அவ வர லேட்டுமா யிடுச்சு. எப்பையும் 6 மணிக்கு வாரவ அன்னிக்கி ஏழு மணிக்கு மேலதான் வந்தா வந்தவன்ன அம்மாகாரி அவகிட்ட
“ ஏண்டி மனசுல என்னதான் நெனச்சிக்கிட்டு இருக்க தெனம் லேட்டா வார ஏன்னு கேட்டா வேலை அதிகம் அதான் லேட்டாயிடுச்சுன்னு சொல்ற ஊருக்குள்ள பலமாதிரி அரசல் புரசலா ஒன்னப்பத்திப் பேசுறாக எல்லாம் என் காதுல வந்து விழுகுறப்ப காதுல ஈயத்தக்காச்சி ஊத்துனமாதிரி இருக்கு உங்கப்பன் போனதில இருந்து நீதான் குடும்பத்தை ஒழைச்சிக் காப்பாத்துற ஒன்ன ஊண்டிக்கேக்கமுடியாது ஒனக்கு எது நல்லதுன்னு படுதோ அதைச்செய் நாளைக்கி
அப்பனில்லாததுனால அலங்கோல மாச்சு குடும்பம்னு பேரு வந்திறக்கூடாது அம்புட்டுத்தேன் சொல்லிப்புட்டேன் ஒரு ஆத்தா இதுக்குமேல பாலிசா சொல்ல முடியாது” நு கண்ணத் தொடைச்சிக் கிட்டே சொன்னா
” ஊரு ஆயிரம் சொல்லும் உனக்கு ஒன் மகமேல நம்பிக்கை இல்லையா நான் உன் மக அவளோட அப்பா வளத்த மக அவரு பேருக்கு கெடுதல் வரமாதிரி நடக்கமாட்டா அம்புட்டுத்தான் சொல்வேன்”
”ஏன்டி ஒலவாய மூடலாம் ஊரு வாய மூட முடியுமா ஊருல அவுகபாட்டுக்குப் பேசிப் புட்டுப் போய்டுவாக பேரு கெட்டுப் போச்சுன்னா நளைக்கி ஒன்னய கட்டிக்கிற வாரவுக அதைப் பத்திக்கேட்டா என்னாத்தச் சொலூறது வாழப்போற புள்ள நீ “
” அடுத்தவன் சொல்றதை நம்பி சந்தேகப் படுறவன்கிட்ட
எல்லாம் வாழ முடியாதும்மா, தன் பொண்டாட்டி மேல அவனுக்கே நம்பிக்கை இருக்கனும் பொண்ணு கெட்டுப்போகனும்னா அது ஈசி ஆனா அவ தனக்குன்னு ஒரு ஒழுக்கம் கொள்கை யோட தான் இருப்பா, அதை யாராலும் மாத்த முடியாது மனசுதான் முக்கியம் அது சுத்தமா இருந்தா ஆருக்கும் பயப்படத் தேவையில்ல அவபாட்டுக்குப்போய்ட்டே இருக்கலாம் தன் பாதையில”
“ இப்புடித்தேன் நான் கேட்டா பெருசா எதை எதையோ சொல்லி வாய அடச்சிப்புடுற ஒனக்கே அறிவிருந்தாச் சரிதான் நான் என்னத்தைச் சொல்ல அந்தத்தகுதி உன் அப்பன் போன அன்னிக்கே போய்டுச்சு ம்ம்ம்ம்”
”சரி பேச்செல்லாம் அப்புறமிருக்கட்டும் சோத்தப் போடுத்தா வயிறுகிள்ளுது”நு சொல்லிட்டுக்
கையக்கழுவிட்டு ஒக்காந்தா மக
இவளோட அப்பா திடீருனு செத்துபோய் 10 வருசமாச்சு அப்ப இவளுக்கு 16 வயசு. திக்கு தெசை தெரியாம முழிச்சிக்கிட்டு நின்னப்ப இவதான் அந்த வயசிலயே வேலைக்கிப் போறேன்னு கெளம்புனா அவ படிச்சிருந்த 12 க்கு ஒரு வேலையப்பாத்து
குடும்பத்துக்குக் கஞ்சி ஊத்துனா, அத்தோட இல்லாம வேலை பாத்துக்கிட்டே படிச்சி பட்டம் வாங்கி அத்தோட நல்ல வேலைக்கி மாறிப்போனா தன்னோட தம்பியப்படிக்க வைச்சா
ஊரே பாராட்டுச்சு இப்புடி ஒரு பொண்ணான்னு , ஆம்பளை இல்லாத வீட்டுல சம்பாரிச்சி தானும் ஒசந்துக்கிட்டு
குடும்பத்தையும் காப்பாத்துனா. பாக்குறவுக அப்பயெல்லாம் சொன்னாக ”அவ ஒனக்கு மக இல்ல மகன்னு”. அதைக்கேக்கும் போது பெருமையா இருந்துச்சு. ஆனா இப்ப ஊரு
சொல்லுறதைக்கேக்கும் போது ஒரு பக்கம் அடிவயிறு கலங்குது இன்னொரு பக்கம் நம்ம மக அப்புடியெல்லாம் இருக்கமாட்டான்னு உள் மனசு சொல்லிச்சி.
மறுநாள் தன்னோட அன்புக்குரியவனச் சந்திக்கும்போது இது பத்திப்பேசுனா மக.
“ தினம் ரெண்டு பேரு எங்க வீட்டுல வந்து பொறணி என்னப்பத்திப் பேசிட்டு போறாங்க அம்மா கேக்குறத்துக்கு பதில் சொல்லுமுன்ன போதும் போதுமுன்னு ஆயிடுது என்னா பண்ணுறதுன்னு”
கவலையாச்சொன்னா அவ
அதுக்கு அவன் சொன்னான்
”கொஞ்சம் பொறு வார 15ம் தேதி என் தங்கச்சிக் குக் கல்யாணம் முடிஞ்சிரும்.அப்புறம் நானே வந்து ஒங்க வீட்டுல பேசுறேன் ”
”அதுவும் சரிதான் நாம ரெண்டுபேரும் ஒரே சாதியில்ல. நாம மொதல்ல கல்யாணம் பண்ணினா அது உன் தங்கச்சி
கல்யாணத்தைப் பாதிக்கும் அது மொதல்ல முடியட்டும் அப்புறம் நம்ம விசயத்தைப் பேசலாம் அதுவரை அம்மாவச்சமாளிக்கனும்”
”இவ்வளவு நாள் காத்திருந்த நீ இன்னும் கொஞ்ச நாள் தானே காத்திருக்கலாம் நானும் கடமையை முடிச்சிருவேன்”
“ நானும் காத்திருக்கிறேன் உனக்குத் தங்கச்சி வாழ்க்கை பத்திய அக்கறை இருக்கு நீ என்னையும் பாத்துக்குவன்ற நம்ம்பிக்கை எனக்கு இருக்கு எங்க வீட்டுல தம்பிதான் அவனுக்கு அது மாதிரிப் பிரச்சனை இல்லை அதுனால காத்திருக்கலாம்”
” நீ கல்யாணத்துக்கு அப்புறம் கூட உன் வருமா னத்தை உன் வீட்டுக்கே குடுக்கலாம் என் வருமானம் போதும் நாம குடும்பம் நடத்த ரெண்டுபேரும் சேந்து உன் தம்பியப்படிக்க வைக்கலாம்” நு சொன்னதும் இவளுக்கு கண் கலங்கிச்சு
அடுத்த 15 நாளில அவனோட தங்கச்சி கலியாணம் இவளும் அவனுடன் சேர்ந்து கல்யாண வேலை செய்தால் கேட்டவர்களுக்கு நண்பன் என்று சமாதானம் சொன்னா
கல்யாணம் முடிஞ்ச மறுநாள் அவள் வீட்டுக்குப்போனவுடன் அவ அம்மா உம்முன்னு ஒக்காந்திருந்தா. அவ கையில ஒரு கவரும் இருந்துச்சு. என்னான்னு மக அம்மாவப்பாத்தா
அதுக்கு அம்மா
“ என்னத்தச்சொல்ல கத்திரிக்கா முத்திக் கடத் தெருவுக்கு வந்தாச்சு இதைப்பாரு இன்னம் என்ன சமாதானம் சொல்லப்போற” நா
இவள் அந்தக்கவரை வாங்கி பிரித்து அதிலுல்ல போட்டோக்களைப்பாத்தா அது அவனின் தங்கச்சி கல்யாணப்போட்டோக்கள் அதில ரெண்டுபேரும் சேந்திருக்கும் போட்டோக்கள் இருந்துச்சு யாரோகடமை(கவ்வை) யைச் செஞ்சிருந்தாங்க
இப்ப மக சொன்னா
“கொஞ்சம் இரும்மா”னு சொல்லிட்டு அவனுக்குப் போன் செஞ்சா வரச்சொல்லி
அவன் வந்ததும் அம்மாகிட்ட சொன்னா
“ அம்மா இவர்தான் உங்க மருமகனா வரப் போறவரு இவரோட ஒதவியாலதான் நான் படிச்சேன் நம்ம குடும்பத்துக்கும் ஒதவி செஞ்சேன் எங்களைச்சேத்து வையிங்க கலியாணத்துக்கு அப்புறமாவும் நம்ம குடும்பத்துக்கு தொணையா இருப்பாரு
இவரு ”
அதைக்கேட்டத்தும் அம்மா சொன்னா
“ நீ வளந்த புள்ள உன் சம்பந்தப்பட்ட முடிவைச் சரியாத்தான் எடுத்திருப்ப நான் ஒன்னய நம்புறேன் அதைவிட்டா எனக்கு வேற வழியில்ல இந்தக்குடும்பத்துக்கு நீ பட்ட கஸ்ட்டம்
எனக்குத்தெரியும் நீ நல்லாரு அது போதும்” நு கண் கலங்கினாள்
அப்ப அவன் சொன்னான் உண்மையிலேயே உங்ககிட்ட வந்து எங்களைப் பத்திப் பேசுனவங்கதான் எங்களை மேலும்
நெருக்கமாக்குனாங்க அவங்க இல்லைன்னா இந்த கல்யாணம் இவ்வளவு சீக்கிரமா லேசா நடந்திருக்காது அவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும் ” நு சொன்னான்
"
அப்ப அவளோட அம்மா சொன்னா
பொறுப்பான பிள்ளைக எப்பையும் யோசிச்சித்தான்
முடிவெடுப்பாக அது பெரும்பாலும் சரியாதேன் இருக்கும் ஒரு வேலை அது தப்பாப்போயிருச்சின்னா அதவிட்டு எப்புடி வெளிய வரணும் நு அவங்களுக்குத் தெரியும் வெளியவந்தும் நின்னுருவாக அதுதான் அவங்களோட பலம் தைரியம் நீ நிப்ப” நா
அதைக்கேட்டுட்டு கண்கலங்க
“உன்னப்போல அம்மா கெடைக்க நான் எவ்வளவு புண்ணியம் செஞ்சிருக்கனும்” நு சொல்லிட்டு அம்மாவை அணைச்சி முத்தம் கொடுத்தா
அதைப்பாத்து பெருமூச்சு விட்டான் அவளோட வருங்காலக்கணவன் எல்லாம் நல்ல படியா முடிஞ்ச சந்தோசத்துல
"கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து."
குறள் 1144
இன்பத்துப்பால்
நன்றி: அ.முத்துவிஜயன்