வழக்கமான அந்த வெள்ளனா விடியிறபொழுதுல எப்பையும் வாரமாதிரி பொதிகை எக்ஸ்பிரஸ் மதுர சங்சனுல மூணாவது பிளாட்பாரத்துல வந்து நின்னது. மதுரையில எறங்க வேண்டிய கருப்பாயி பாட்டி பைய எடுத்துக்கிட்டு பிளாட்பாரத்துல எறங்குனா... சனங்க எல்லாம் எறங்கிப்போயிடுச்சு.. அப்புறமா இஞ்ஜின் மாத்தி அது செங்கோட்டைபோகும்.
ஜங்சனுக்கு வெளிய வர பாலத்துல ஏறி வெளிய வரனும். அதிகாலை நேரம் ஆளுக நடமாட்டம் கம்மியா இருந்துச்சு. ஒத்தையில போகக் கொஞ்சம் பயம் இருந்தாலும் நம்ம ஊரு ஆரு என்னா பண்ணிப்புடுவா கூப்புட்டு போக வாறேன்னு சொன்ன மயனக்காணோம்.
சரின்னு பாலத்துல ஏறி நடக்க ஆரம்பிச்சா
ஒருத்தன் வேகமா பின்னாடி யிருந்து வந்து காதுல கையவைச்சி போட்டுருந்த சவுடிய அக்குறதுக்காக பிடிச்சான். கருப்பாயி எட்டி அவன் சட்டைய கொத்தாபிடிச்சிக்கிட்டு” திருடன் திருடன்”ன்னு கத்துனா..... அவன் அவளை கீழதள்ளி விடமுயற்ச்சி பண்ணு னான் ஆனா அவ பிடி இறுகிருந்ததுனால அவனும் சேந்து கீழ விழுந்தான்..... அவன் எந்திரிக்க முயற்ச்சி பண்ணுனப்ப அவன் கால்ல ஒரு கம்புனால அடிவிழுந்தச்சு....
அங்க ஒருத்தன் பிச்சக்காரன் மாதிரி நின்னுக் கிட்டு இருந்தான் அவன் திருடனோட கால்ல கம்பால பலமா அடிச்சான் அவன் எந்திரிக்க முடியல.... அப்ப அந்தஆள்” ஆயீ நீங்க போங்க நான் இவனப் பாத்துக்கிறேன்”னு சொன்னான்....
”யாருப்பா நீ”ந்னு கருப்பாயி கேட்டப்ப
” நான் நரிபுடுக்கி மகன்.... நீங்க மொதல்ல போங்க ஒங்களுக்கு ஒண்ணுமில்லை” ந்னான்
அதுக்குள்ள கூட்டம் கூடி ரயில்வே போலீஸ் வந்து அவன அள்ளிக்கிட்டுப் போயிருச்சு,
அப்ப கருப்பாயிக்கு நரிபுடிக்கி ஞாபகம் வந்துச்சு.
நரிபுடிக்கி அந்த ஊருல சுடுகாடு பாக்குறவரு.. அவர்தான் பொணத்தை பக்கத்துல நின்னு எரிச்சு சாம்பலாக்குறவர்.
பொணம் விழுந்துருச்சுன்னா அப்புறம் அவர் சொல்றபடிதான் வெறகு எருவாட்டி வைக்கல் மண்ணெண்ணெய் எல்லாம் வாங்கனும் அன்னிக்கி அவர் அதிகாரம் தூள் பறக்கும்
பொறுப்பா நின்னு செஞ்சுகுடுப்பாரு . இம்புட்டுக்கும் ஊர்காரவுக அங்க வந்துதான் அவருக்கு குடுக்கும்போதுதான் அத்தனை கஞ்சத்தனும் வரும்...
அவர் வாய்க்கரிசி போடுங்க ந்னு கூவுறப்ப ஒத்த ரூவாக்கி மேல கை நீளாது வாய் முழுசும் அரிசி ரொம்புனாலும் காசு தேறாது...ஆனா என்ன சின்ன ஊரு. எப்பவாதுதான சாவு வரும். மத்தநாளைக்கி கூலி வேலைக்கிப்போவாரு நரிபுடுக்கி.. குடுக்குறகாசுக்கு மேல வெற கொடைப் பாரு.
பசிக்குதுன்னா நேர கருப்பாயி வீட்டுக்கு வந்து ”கஞ்சி ஊத்துங்க ஆயி”ன்னு குடிச்சிட்டு
”அப்புறம் என்ன வேலைவேண்ணாலும் செய்யிறேன்”னு...நிப்பாரு வெறகு வெட்டுறது மண்ணு அள்ளுறதுன்னு செய்வாறு.... அவரு பொண்டாட்டி ஒரு சோம்பேறி. இவரு எம்புட்டு ஒழைப்பாரோ அதுக்கு நேர் மார். வைச்ச பொருளை ஒருத்தர் எடுத்துக்குடுக்கனும்...
இவர்போய்தான் கஞ்சி ஊத்தனும் அம்புட்டு சோம்பேறி. அவரோட மக்னுக்குச் சரியா கண்ணுதெரியாது
அவருக்கு நரி புடிக்கின்னு எப்புடி பேர்வந்துச் சுன்னா ஒருதடவ வயக்காட்டுல இருக்குற கெணத்துல தண்ணி கீழகெடக்கையில நரி உள்ளாற விழுந்து ஊளையிட்டுக்கிட்டே இருந்துச்சு... ஊரே கூடி வேடிக்கை பாத்துச்சு..... அப்ப இவருதான் சாக்க மேலபோட்டு புடிச்சி தூக்கியாந்து வெளியவிட்டாரு அதுல இருந்து அவர நரிபுடுக்கின்னு கூப்புட ஆரம்பிச்சிட்டாக...
அவர் பொழப்பு கேவலமாத்தான் போய்கிட்டு இருந்துச்சு. ஒழுங்கான வருமான மில்ல. ரொம்பக்கஸ்ட்டப்பட்டாரு. அவருக்கு ஒருமகன் . பாவம் அவனுக்கு கண்ணு சரியாத்தெரியாது. அவனுக்கும் சேத்துதான் இவரு சம்பாதிக்க வேண்டியதாப்போச்சு...மூணுபேத்துக்கும் சேத்து சம்பாதிச்சிட்டு இருந்தாரு நரிபுடுக்கி. பெரும்பாலும் பட்டினிதான் அவர் வீட்டுல....
ஒருதடவ இவ பொம்பளைதான என்னத்தப் பண்ணிப்புடுவான்னு கருப்பாயியோட வயக்காட்டுல இருந்த தண்ணிய கீழ்புறம் இருந்த வயக்காட்டுக்காரன்... வரப்ப வெட்டி விட்டு தண்ணியதொறந்து புட்டான். கேக்கப்போன கருப்பாயிய அடிக்கவே வந்துட்டான்.
அப்ப அந்தப்பக்கமா வந்த நரிபுடுக்கி ”ஆரப்பாத்து பேசுற எங்க ஆத்தாடா அது..”..ன்னு அவன் மேல பாஞ்சு அவன கீழதள்ளி பின்னிப்புட்டான்....
அப்புறம் அவங்க ஆளுக” பேச்சு பேச்சாருக்க அதென்ன கைவைக்கிற பழக்கம்”னுன்னு அவன கட்டி இழுத்துட்டுப்போய் பஞ்சாயத்துல நிப்பாட்டிட்டாக. அது பெரிய பஞ்சாயத்தாயி கருப்பாயி போய் சாட்சி சொல்லி அவனக்காப்பாத்துச்சு...
இதுக்கு நடுவில மயணத்தை சுத்தி வீடுக வந்ததுனால அங்க எரிக்க எதிர்ப்பு வந்துருச்சு... அதுனால எல்லாத்தையும் தத்தனேரிக்கி அனுப்பிச்சிட்டாக எங்க பொணம் விழுந்தாலும் வண்டி வைச்சித் தத்தனேரி மாநகராட்சி சுடு காட்டுக்கு கொண்டு போக வேண்டியதாயிடுச்சு....
அங்க மாநகராட்சி போட்ட ஆளுக அந்தவேலை பாத்தாக. நரிபுடுக்கியோட பொழப்பு போயிடுச்சு.....ரொம்ப கஞ்சிக்கி செரமப்பட்டாரு..... கொஞ்சநாளுல ஏழ்மையில செத்தும்போனாரு.......
இப்ப கருப்பாயி கேட்டுச்சு ”அவர் மகனாப்பா நீ”ன்னு .
“ஆமாதாயி. ஊருக்குள்ள பொழப்பு போச்சு கண்ணும் தெரியல. வேலை செய்ய முடியல அதான் இங்க சங்சன்ல கைநீட்டி பொழப்பு ஓடுது. ஆளுக எறக்கப்பட்டு குடுக்குற காசுல வயிறு ரொம்புது. பல நேரம் பட்டிணிதான்”னு சொல்றப்ப அவன் கண்ணு கலங்கிடுச்சு....
”எங்க அப்பாவுக்கு நீங்க எவ்வளவு தடவ கஞ்சிய ஊத்திருப்பீங்க. இப்ப எல்லாம் ஆருமில்ல . அதுமாதிரி. ஏன்னா வெவசாயம் படுத்துப்போச்சு. ஊருக்குள்ள ஆளுக இல்ல அதான் இங்க வந்துட்டேன் ”தாயின்னு சொன்னான்.....
அப்ப அவன் காலில கட்டுப்போட்டிருந்தான் அதைப்பாத்துட்டு கருப்பாயி
“என்னப்பா காலில கட்டு?” நு விசாரிக்க அவன் சொன்னான்
“தெருநாய்கதொந்தரவு தாயி கடிச்சி சதையப் பிச்சிருச்சி பெரியாஸ்பத்திரில போய்க் கட்டும் ஊசியும் போட்டுட்டு வந்தேன் புண் இன்னும் ஆறல என்ன பண்ணுறது அதுக தொல்ல தாங்கல செலநேரம் வீட்டு நாய்களையும் “ நு பாவமா சொன்னான்
கருப்பாயிக்கு இவனப்போல பலபேரு வெவ சாயம் நின்னுபோனதால நகரங்கள்ல தெருவில பாத்ததும் இங்க கெளரவமா இருந்த மனுசங்க அங்க தெருவில கையேந்துரதையும் கைக்குக் கெடச்ச வேலைசெஞ்சு பிளாட்பாரத்துல கெடக் குறதையும் பாத்துருக்கா அதை நெனைக்கும் போது அல்லையில புடிச்சி வலிச்சது அவளுக்கு.
சோறுபோட்ட சாமிக எல்லாம் தெருவில கெடக்குறதைப்பாக்க நெஞ்சு வலிச்சிச்சி . இவனோட அப்பா நரிபுடுக்கி அவளோட புருசன் எறந்தப்ப தரையில விழுந்து ”அன்னபூரணிய இந்தகோலத்துல பாக்கனுமா”ன்னு தரையில விழுந்து பொறண்டு அழுதது ஞாவகம் வர கண்ணத்தொடச்சிக்கிட்டு சுருக்குப்பையில இருந்து 50 ரூவாய எடுத்து அவன் கிட்டக்குட்த்துட்டு சங்சன விட்டு வெளிய வந்தா.......
அவபோறதெசையப்பாத்து கையெடுத்துக் கும்புட்டான் நரிபுடிக்கி மகன்.....