பாலகுமாரன் எழுத்துக்கள் மனதை உண்மையின்பால் கட்டி போட்டு விடும். இவரது இந்த நாவலுக்கு வாசகர்களின் கடிதங்களே அணிந்துரை போல் அமைகின்றன அது சிறப்பு.
இந்த பாகம் கிட்டத்தட்ட சோழ தேசத்தின் அரசியலை பேசுகிறது மற்ற நான்கு பாகங்களும் அதை பேசினாலும் இந்த ஐந்தும் பாகத்தை ஒப்பிடும்போது அரசியல் நெடி குறைவு தான் ஆனால் இந்த பாகத்தில் அரசியல் நெடி சற்றே அதிகம் என்று நினைக்கிறேன்.
ஆயுத கிடங்கு எவ்வளவு சீக்கிரமாக சுத்தம் செய்யப்படுகிறது அதே நேரத்தில் அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
போர் குறித்து மிக நுட்பமாக விவாதித்து திட்டமிட்டு செய்கிறார் ராஜராஜன். சோழ தேசம் தான் எத்தனை பரபரப்பாக இருக்கிறது எவ்வளவு உற்சாகத்துடன் போருக்கு தயாராகிறது.
அதிலும் தான் எத்தனை நேர்த்தி இதை யார் செய்யவேண்டும்? எதை எதை யார் செய்யவேண்டும்? என்று எத்தனை விரிவான திட்டமிடல். உண்மையில் சோழ தேசத்தின் நிர்வாகத்திறன் வியக்க வைக்கிறது.
மக்களும் கூட எவ்வளவு நேர்த்தியாக ஒத்துழைக்கிறார்கள் இதுவெல்லாம் சோழ தேசத்தின் சிறப்பு. நவகண்டம் என்னால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு வித சதி தான் ஆனால் தன் சோழ தேசத்துக்காக தன் உயிரையும் பலிகொடுக்க ஒருவர் முன் வருவாரெனில அவனின் நாட்டு பற்றை என்னவென்று சொல்வது. என்ன கம்பீரம் சோழதேசத்து ஆண்களுக்கு என்ன ஒரு கள்ளகபடமற்ற பெருங்காதல்.
போர் என்று வந்தபிறகு எதையும் இழக்க துணியும் இராஜராஜனின் மனதை என்ன சொல்ல அது ஒரு அசாத்தியமானது அதே நேரத்தில் அபத்தமானதும் கூட சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்க வைத்து விடும் சாதாரண மனிதனின் மனம் போல் அல்லாமல் எதையுமே சற்று நிதானித்து நிறுத்தி செய்ய வைக்கின்ற மனதை பெற்றவறாகவே மாமன்னர் ராஜராஜன் திகழ்ந்தாலும் எனக்கென்னவோ வைணவதாசன் விஷயத்தில் கொஞ்சம் பொறுமை காத்து உத்தரவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
வைணவதாசன் பட்ட கஷ்டங்களை எல்லளவும் அவன் பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை ஆனால் வைணவனான அவனுக்கு இறப்பு தன்னை கனவிலேயே காட்டி கொடுத்தது அதை அறியாமல் செய்தது தான் பெருந்தவறு.
ஒரு முறை பத்திரிகையாளர் சிலர் நீங்கள் ஏன் சார் திரைத்துறையில் பாடல் எழுத கூடாது? என்று அப்துல் ரகுமானிடம் கேட்க அவர் சிலை செதுக்க தான் சிற்பி வேண்டுமே தவிர அம்மி கொத்த அம்மி கொத்த தெரிந்தவனே போதும் சிற்பி எதற்கு என்று
அப்துல் ரகுமான் வினவியதாக ஒரு பேட்டியில் இப்படி சொன்னதாக நினைவு.
இது தான் வைணவதாசன் விஷயத்திலும் உண்மை நல்ல புத்திக்கூர்மை, மன, உடல் வலிமை உள்ள ஒருவரை இப்படி ஒன்னுமில்லாத விஷயத்துக்காக அனுப்பி இருக்க கூடாது என்பது என் கருத்து.
வெற்றி களைப்பில் வருபவர்களால் சிற்பிகள் பட போகும் கஷ்டங்களை யாவை? என்பதை கேள்விக்குறியோடு விட்டு விடுகிறார் பாலகுமாரன்.
- தினேஷ் கண்ணா