வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியங்கள். ரியோ ஓகாவோ.
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்.
முதல் பதிப்பு 2014 விலை ரூபாய் 150 மொத்த பக்கங்கள் 160.
இது ஒரு சுய முன்னேற்ற புத்தகம் .
வாழ்க்கையின் இலக்கு வெற்றி .நாம் வெற்றி அடைவது தான் இலக்கு. மற்றவர்கள் வெற்றியை தடுப்பதும் இல.
அந்த வகையில் இந்த புத்தகம் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.
நம்புங்கள், இந்தப் புத்தகம் உங்கள் எதிர்கால நம்பிக்கைகளை நிஜமாக்கும்!
இது போன்ற ஒளிதரும் வேறொரு நூல் இல்லை. வேறு எந்தப் புத்தகமும் தோல்வி, விரக்தி, தன்னிரக்கம், மற்றும் தாழ்வு மனப்பான்மை இவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அளவு தைரியம், நம்பிக்கை, உற்சாகம் இவற்றைக் கொடுத்ததில்லை.
இந்தப் புத்தகத்தின் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்குவீர்கள். சோகக் கடலில் மூழ்கிய நேரத்தில் இந்தப் புத்தகம் உங்களுக்கு கலங்கரை விளக்கத்தை நோக்கிச் செல்லும் மாலுமி போல் உதவி செய்யும். இந்தப் புத்தகத்தின் அற்புதத்தில் நம்பிக்கை வையுங்கள். சிறிது சிறிதாக ஒவ்வொரு நாளும் இந்த நூலைப் படித்து உங்கள் வாழ்க்கை வளம் பெற உரம் பெறுங்கள்.
ஆசிரியர் குறிப்பு :
ரியோ ஒகாவா ஒரு ஆன்மீகத் தலைவர். தொலை நோக்குடையவர், ஹேப்பி சயின்ஸ் என்பதைத் தோற்றுவித்தவர். உண்மை மற்றும் மகிழ்ச்சிக்கான வழிகள் ஆகியவற்றிற்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்.
ஜப்பானில் 1956ல் ஒகாவா பிறந்தார். டோக்கியோவில் சட்டப் படிப்பும் நியூ யார்க்கில் சர்வதேசபொருளியலும் படித்தார். 1986ல் நியூயார்க்கில் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஜப்பானிய வர்த்தக நிறுவனத்திலிருந்து விலகி ஹேப்பி சயின்ஸ் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
ஐஆர்எச் பிரஸ் கோ லிட். என்ற நிறுவனத்தை உருவாக்கினார். 1987ல் அதன் பிறகு ஓகாவா 1400 நூல்களுக்கு அதிகமாக எழுதியுள்ளார். மிக அதிக அளவில் விற்பனையாகும் நூல்களில் சில - தி லாஸ் ஆஃப் தி சன், தி கோல்டன் லாஸ், தி லாஸ் ஆஃப் எட்டர்னிடி.
இந்த புத்தகம் பல அத்தியாயங்களில் சிறுசிறு கணிப்புகள் இட்டு பொருத்தமாக எழுதப்பட்டிருக்கிறது வெற்றியை நோக்கி செல்வதற்கான பணிகளை நமது கண் முன்னே படர விட்டு.
அத்தியாயம் ஒன்று: நம் வெற்றியின் தேடல் :
1.கவர்ச்சியான வாழ்க்கை
2. மகிழ்ச்சியான மனிதன்
3.கருணை
4.'எல்லையில்லாமை' யை உணருதல்
5.எது வெற்றி?
அத்தியாயம் இரண்டு: வெற்றிக்கான நிபந்தனைகள் :
1.ஆன்மாவின் ஆனந்தம்
2.கெளரவம்
3. தன்னம்பிக்கை
4. லட்சியப் பாதை
5. துணிவே துணை.
அத்தியாயம் மூன்று; வெற்றி வாழ்க்கையின் ரகசியங்கள் :
1.மகிழ்ச்சி காட்டுங்கள்
2. புன்னகையின் பலம்
3. வார்த்தைகளின் வலிமை
4. தலைகீழ் சிந்தனை
5. மாறுபட்ட சிந்தனை
அத்தியாயம் நான்கு;
வேலை செய்யும் இடத்தில் வெற்றி:
1. தலைவருக்கு மரியாதை
2. கீழ் அதிகாரிகளை நேசியுங்கள்
3.வேலையின் விலைமதிப்பு
4.உங்களின் தனித்தன்மை
5. புதுப் புனைதிறன்
6. வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம்
7. ஆன்மீக ஆராதனை
8. ஆன்மீகப் பாரம்பரியம்
அத்தியாயம் ஐந்து.
பொருளாதார வளத்திற்கான வழி:
1, எது பொருளாதாரச் செயல்திறன்?
2. மதிப்பு என்பது என்ன?
3.உண்மை விலையும், உடோபியன் (கற்பனை)விலையும்.
4.எது பொருளாதாரச் செழுமை?
5. செழுமை மேலும் வளமை
6. நிஜமான செழுமை
அத்தியாயம் ஆறு:
முன்னேற்றும் சிந்தனைகள்:
1.புதுக்கருத்துக்கள் சார்ந்த சிந்தனை
2. சிந்தனைகள் செயல்பட
3. ஆக்க பூர்வ ஆசைகளின் அற்புத சக்தி
4. முன்னேற்றும் சிந்தனை
5. புதிய ஆக்கப்பூர்வமான கண்ணோட்டம்
6. முடிவற்ற முன்னேற்றம்
அத்தியாயம் ஏழு:
சுய உணர்தல்:
1.சுயஉணர்தல் என்றால் என்ன?
2. சுய உணர்தலுக்கான வழிகள்
3. சுய உணர்தலை பாதிக்கும் காரணிகள்
4.சுய உணர்தலின் அபாயங்கள்
5.சுய உணர்தலில் முன்னேற்றம்
6. சுய உணர்தலின் உச்சம்
அத்தியாயம் எட்டு:
வெற்றியின் புதிய தத்துவம் :
1.வெற்றி என்னும் தேற்றத்தின்
புதிய முன்னேற்றங்கள்.
2. மனிதாபிமானத்தின் மேன்மை
3. நிர்வாகத் தரம்
4. நிர்வாகியாகச் சில நிபந்தனைகள்
5. அன்பைப் பெற்று அன்பைக் கொடுங்கள்
6. அன்பின் வடிவம்.
சுயஉணர்தல் என்றால் என்ன?
சமீப காலமாக சமீப காலங்களில் ஆர்வமாக விவாதிக்கப்பட்டு வரும் சொல் 'சுய உணர்தல்' (Self realization) .இந்த 'சுய உணர்தல்' என்ற எண்ணத்தைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.
சுய உணர்தலில் மூன்று பகுதிகள் உள்ளன.
முதலாவது அது மனிதன் மகிழ்ச்சி பெற ஒரு வழி; இரண்டாவது அது ஒரு கற்பனை உலகத்தை உருவாக்க வல்லது; மூன்றாவது 'சுய உணர்தல்' இந்த அகண்ட பிரபஞ்சத்தின் ஒரு முக்கியமான பரிணாமம்.
ஒருவரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வழி சுய உணர்தல் என்ற உணர்வுதான் இதற்கு ஆரம்பம். சுய உணர்தல் துக்கத்தைக் கொண்டு வரும் எனில் நாம் அதை நாடப் போவதில்லை. நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இதற்கு முன்னோடி. இருந்தாலும், இத்தகைய எண்ணத்தோடு ஆரம்பித்தவர்கள் வழிதவறிப் போனதும் உண்டு. அங்குதான் அந்த இரண்டாவது அம்சம் தேவைப்படுகிறது ஒரு தனிமனிதனின் சுய உணர்தல் ஒரு புதிய லட்சிய சமூகத்தை உருவாக்கும் பணிக்கு பங்களிப்பதாக இருக்க வேண்டும். அந்த தகுதி இல்லையெனில் அந்த உணர்வால் பயனில்லை. உங்களது தனிப்பட்ட மகிழ்ச்சி, உங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கு எந்த வகையிலாவது பயனுள்ளதாக இருக்க வேண்டும். நீங்கள் சமுதாயத்தின் லட்சியங்களுக்கும்,
அதன் மொத்தமான முன்னேற்றத்திற்கும் ஓர் அங்கமாக இருக்க வேண்டும்.
உங்கள் சுகங்களைத் துறந்து சமூகத்திற்காகவும், அதன் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுங்கள் .ஆனால் சிந்தித்துப் பார்த்தால், ஆன்மாவின் ஆனந்தம் அதில் தோன்றாது. மனிதர்கள், தங்களையும், தங்கள் குணங்களையும் அறிந்து உணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம். அந்த அனுபவமற்ற வாழ்க்கை வீணே. ஒருவர் தன்னுடைய மகிழ்ச்சிக்காகத் தன் குணங்களை மாற்றிக் கொள்வது நல்லதே. அதே சமயம் பிறரது முன்னேற்றத்திற்கும் நாம் சுமையாக இருந்து விடலாகாது. ஆகவே ஒருவரின் சுய உணர்தல் சமூகத்தை மேம்படுத்தும்.
மூன்றாவது நாம் உலகின் உருவாதலுக்கு உதவுகிறோம். அதில் நாம் நம் பூமியை ஒரு சிறு கோளமாகவும், அதில் வாழும் மனிதர்களான நாம் செய்ய வேண்டியது என்ன என்றும் சிந்திப்பது அவசியம். எந்த மாதிரியான கலாச்சாரத்தை நாம் உருவாக்கப் போகிறோம்? நம்முடைய நீண்ட காலத் தொலைநோக்கு இலக்குகள் என்ன? அவற்றை நாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம்?
இதைத்தான் நாம் உலகின் பொது விருப்பம் அல்லது ஆண்டவனின் ஆணை என்று சொல்கிறோம். நம்முடைய கருத்துக்களும், இலக்குகளும் இவற்றுடன் இணைய வேண்டும். இதை நம்முடைய சுய உணர்தலின் ஒரு நீட்டிப்பாகக் கருதலாமே? உங்கள் சொந்த மகிழ்ச்சியில் தொடங்கி, அதை சமூகத்தின் சந்தோஷமாக்கி அதையும் தாண்டி என்ன செய்யலாம் என்ற சிந்தியுங்கள். அது நிச்சயமாக உலகமயமான அல்லது பிரபஞ்சத்தின் ஆனந்தமாகத்தானிருக்கும்.
சுய உணர்தலுக்கான வழிகள்
சுய உணர்தலுக்குப் பல வழிகள் மூன்றாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
முதல் வழி ...
உங்கள் உழைப்பையும், பலத்தையும் வைத்தே உங்கள் இலக்குகளை எட்டுவது என்பது. இந்த வழியைப் பின்பற்றுபவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக தங்களின் அறிவுசார்ந்த முயற்சி களாலும், செயல்களாலும் சாதிப்பர். தேர்வுக்கு வீட்டில் இருந்தபடியே நன்றாகப் படிப்பவர்களும், கடும் உழைப்பையும் பயன்படுத்துவோர் இந்த வகையினர். இது உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் உங்களால் முடிந்த சிறப்பான காரியங்களைச் செய்வது.
இரண்டாவது .
எந்தவொரு செயலையும் திறமையுடன் படித்து, முறையான வகையில் செய்வதை அறிந்து கொள்வது; தேர்வையே எடுத்துக் கொள்வோம். சரியான படிக்கும் முறைகளைப் பின் பற்றுவதோடு, தேவையான ஆசான் அல்லது தொலைத் தொடர்பு மூலம் பயில முயல்வது இந்த வகை. அலுவலில் உங்களுக்குக் கணினி உபயோகம் பழக்கமில்லை யென்றால், அது பற்றி நன்கு தெரிந்த ஒருவரிடம் கேட்டுப் பயிற்சி பெறலாம்.
இரண்டாவது முறை சுய உணர்தல் பகுத்தறிவு சார்ந்த சிந்தனை மற்றும் முன்னேற்றமடைந்த முறைகள் மூலம். வியாபாரத் துறையில் சிறியதாக இருக்கும் வரை ஒருவராகவே சமாளிக்க முடியும். தொழில் பெருகப் பெருக மற்றவர்களின் உதவி தேவைப்படும். இன்னும் வளர்ச்சி பெறவும், பெற்றாலும் தேர்ச்சி பெற்ற மனிதர்களிடம் கருத்துகளைப் பெற்று செயல்பட்டால்தான் சிறு தொழில் ஒரு பெரிய நிறுவனமாகும்.
மூன்றாவது
சுய உணர்தல் உங்களுக்கு உதவக் கூடிய சரியான செய்வது. உங்களைப் போன்ற ஒரே மனிதர்களைத் தேர்வு செய்வது. மாதிரியான குணங்களையும், லட்சியங்களையும் உள்ளவர்களை உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இவ்வாறு பலருடன் சேர்ந்து உழைக்கும் போது வேலை சுலபமாகும்.
உங்கள் தொழிலுக்கோ, நிறுவனத்திற்கோ அதிகம் பரிச்சயமில்லாத வேலைகளில் ஈடுபடும் போது வேறொரு நிறுவனத்தில் இதற்கான தனித்திறன் உள்ளவர்கள் இருந்தால் அவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடன் வேலை செய்வோர் அதிகமாகும் போது, உங்கள் நிறுவனத்தின் ஆற்றலும் அதிகமாகிறது.
சுய உணர்தலை பாதிக்கும் காரணிகள்
நடைமுறையில் நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளைத் தொடச் சில காரணிகள் தேவை. முதல் தேவை, மனத்திடம்; அது இல்லாமல் உங்களால் எதையும் சாதிக்க முடியாது. இதையே தூண்டுதல், ஊக்கம், உற்சாகம், மனோபலம் என்றும் கூறுவார்கள்.
இரண்டாவது உங்கள் கொள்கை. உங்களுக்கு உங்கள் இலக்கைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். உற்சாகம், மற்றும் ஊக்கத்திற்குப் பின் நோக்கம் அவசியம். அதை உங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.
மூன்றாவதாக இவைகளை நீங்கள் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள் என்பது. அதற்கு நீங்கள் இதற்கு முன்னால் படித்த பகுதிகளின் உள்ளடக்கம் உதவும். அதாவது உங்கள் சுய உணர்தலின் மூலம் நீங்கள் அறிந்து, புரிந்து உணர்ந்து கொண்ட சக்தியைக் கொண்டு திறமைகளைப் பயன்படுத்தி உங்கள் இலக்கை அடையுங்கள்.
இதைத் தாண்டி, உங்களுக்கென்று ஓர் எதிர்காலத் திட்டம் இருக்க வேண்டும். உங்கள் இலக்கை அடைந்த பின் என்ன செய்யப் போகிறீர்கள்? அதுவும் தெரிந்தால் உங்கள் முன்னேற்றம் சிறந்த முறையில் அமையும்.
பெரும்பாலான மனிதர்களின் ஆசை மிகச் சிறியதாகவே இருக்கின்றது. சிறிய வீட்டிலிருந்து சற்றுப் பெரிய வீட்டிற்கு அல்லது வியாபாரத்தில் கொஞ்சம் அதிக லாபம் என்ற வகையில் தான் அவர்களின் சுய உணர்தல் வேலை செய்கிறது.
வெற்றியின் விதிகள் மெல்ல மெல்ல புரிகின்ற பொழுது
வெற்றிக் கனி நெற்றியில் காய்க்கும்.