144 கவிதைகள் - ரா. பார்த்திபன்

By News Room

'கவிதைகள்' என்ற தலைப்பில் நான் படித்தது '144 கவிதைகள்'- எழுத்தாளர் , நடிகர் என பல பரிமாணங்கள் கொண்ட திரு. ரா. பார்த்திபன் அவர்கள் எழுதியது. 

     மார்ச் 2020 ல் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட சமயத்தில் வந்த கவிதை தொகுப்பு அதனால் தான் தலைப்பும் 144.

    பார்த்திபன் அவர்கள் அவருக்கே உரிய குண்டக்க மண்டக்க பாணியில் கவிதை எழுதி உள்ளார். அனைத்தும் ஊரடங்கு , கொரோனா, 😷 mask என்பதைப் பற்றிய கவிதைகள் தான்.

   ஓவியங்களே கவிதை சொல்கிறது. 144 -னு தலைப்பு கொடுத்துட்டு 44 கவிதைக்கு அப்பறம் வைக்கிறாரு ஒரு ட்விஸ்ட்,

  ....அவள்

பி.கு.
 நல்ல 420 வேலையா இருக்கே இது!
144 கவிதைனு சொல்லிட்டு
44-க்கு அப்பறம் 'அவள்' னு போட்டு 100 ஐ அபேஸ் பண்ணிட்டா என்ன அர்த்தம்?

     'அவள்' நூறு கவிதைக்கு சமம் என்றே அர்த்தம்! 

இது அந்த புத்தகத்தில் இருந்து ஒரு மாதிரி தான். இப்போது தெரிந்து இருக்கும் இந்த கவிதைகள் அனைத்தும் எப்படி இருக்கும் என்று. ஜாலியான கவிதைகள். பார்த்திபன் அவர்கள் வாய்ஸ் ஐ கற்பனை செய்து அவர் சொல்வது போலவே படித்தால் இன்னும் சிறப்பு.  

.
மேலும்