ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்
தமிழில் : அ. மங்கை
பக்கங்கள் : 424
மொத்தம் இருபது கட்டுரைகள், இருபது கட்டுரைகளும் மனித குலம் தோன்றியது முதல் இவ்வுலகம் எப்படி மாற்றமடைந்து மனிதனோடு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததை கதை வடிவில் பதிவு செய்கிறது,
மொழிபெயர்ப்பு நூலாக இருந்தாலும், மொழிபெயர்ப்பு நூல் போல் தெரியவில்லை இந்நூலை வாசிக்கும் போது.இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்னரே வெளிவந்தாலும், இந்நூலில் கருத்துக்கள் இன்றும் பொருந்துவதாக உள்ளன. இந்நூலாசிரியருக்கு முப்பது மொழிகளுக்கு மேல் தெரியும்.இந்நூலாசிரியர் பயணம் செய்யும் போது தான் அதிகமான மொழிகளை கற்றுள்ளார்.
தென்னிந்திய பகுதியில் பயணம் மேற்கொண்டு தென்னிந்திய மொழிகளையும் கற்றுக் கொண்டு பல நூல்களை எழுதப்பட்ட மொழிகளில் வாசித்துள்ளார். அதிகமான நாட்கள் இந்நூலாசிரியர் நாடோடி வாழ்க்கை முறையை வாழ்ந்து உள்ளார். இந்நூலில் வரும் நாடோடி வாழ்க்கையை பற்றிய வரும் ஒரு சில நிகழ்வுகள் இந்நூலாசிரியரின் பிம்பமாக இருக்கலாம் என என் மனதில் எண்ணம் தோன்றுகிறது.
இந்தியாவில் இருந்த மூட பழக்க வழக்கங்களை கதை வடிவில் வித்தியாசமான முறையில் இந்நூலாசிரியர் எழுதியுள்ளது வியக்க வைக்கிறது.
இந்நூல் வெளிவந்து கிட்டத்தட்ட 80- ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைந்து உள்ளது.
மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் இந்நூல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு படைப்பு அதிகமான விமர்சனங்களை பெறுகிறதோ, அந்த அளவுக்கு அந்த படைப்பு மிகப் பெரிய வெற்றியை அடையும். அந்த வகையில் இந்த நூல் மிகப்பெரிய தடையை கடந்து வந்துள்ளது. ஒரு நூல் எண்பது ஆண்டுகள் கடந்து அனைவராலும் உலகெங்கும் கொண்டாடபடுகிறது என்றால் அது சாதாரணவை கிடையாது.