செல்வி - சிறுகதை

By செய்திப்பிரிவு

செல்வியும் குமுதாவும் ஒன்னுக்குள்ள ஒன்னு
வெளயாட்டு பள்ளிகொடம்போறது ஒக்காந்து
கதைபேசுறது எல்லாம் ஒன்னாத்தான்

குமுதாகொஞ்சம் வசதி செல்வி அப்புடி இல்ல
அவங்க அப்பாவுக்குசரியான வருமானமில்ல
ஊரைச்சுத்திக்கடன் ரொம்பகஸ்டம்தான்
அதெல்லாம் அவங்க ரெண்டுபேரையும் பிரிக்கமுடியல

செல்வி நல்ல அழகாருப்பா குமுதா சுமாரு தான் பாண்டி பல்லாங்குழி கண்ணாமுச்சி வெளையாட்டுல எப்பவுமே செல்விதான் ஜெயிப்பா படிப்புலயும் கெட்டி
குமுதாவுக்கு அவகூட இருந்தாலே சந்தோசம்

கலியாணம் பண்ணுற வயசு வந்தாச்சு ஆனாலும்சின்னபுள்ளைங்க மாதிரிதான் திரிவாளுகஇதுக்கு நடுவுல செல்விய ஒருத்தன் காதலிச்சான்அவபின்னாடியே சுத்துனான் குமுதாவோடசொந்தம்தான்
செல்வி அவனை கண்டுக்கவே இல்ல அவந்தான் சுத்திசுத்தி வந்தான் நல்லவன் தான் என்னா பண்ணுறது செல்விக்கு அவ அப்பா மாப்பிள்ள பாக்குறமாதிரி இல்ல
பாத்தா கல்யாணம் பண்ணனும் காசுவேணும்

அதுநால கண்டுக்காம இருந்தாரு
திடீருண்ணு ஒருநாளு அவுக ஆளுகல்ல இருந்து பொண்ணுகேட்டு வந்தாக செல்விக்கி சந்தோசம்ஆனா வந்தவுக ரெண்டாந்தாரமா கேட்டு வந்தாகமொதப்பொண்டாட்டி செத்துபோய்ட்டாளாம்
மூணு பிள்ளங்க வேற நாப்பது வயசுதான் ஆகுதாம் ஆனா இருசெலவும் போட்டுக் கலியாணத்தை நடத்திகிறாகலாம் கட்டுனசேலையோட வந்தாப்போதும்னு வந்தாக..ஆளுமேல ஆளுவிட்டாக
செல்வியோட அப்பாவுக்குரொம்பசந்தோசம்

இதுமாதிரி சம்பந்தம் கிடைக்கிறது கஸ்டம்ன் னாரு. ஏன்னா அவரு வசதிக்கு அவரு யோசிச்சாரு. பெரிய எடமாப்பாத்தா அவுக எதிர் பாக்குறமாதிரி செய்மொறை செய்யனும் நகை நட்டுப்போடனும் அதுக்கெல்லாம் அவர்கிட்ட வசதியில்ல.
ஆனா வந்த சம்பந்தத்த செல்விக்கி கொஞ்சம் கூடப்பிடிக்கல. ரெண்டாந்தாரம் அதுவும் 15 வயசு வித்தியாசம் அதுனால அழுக அழுகயா வந்துச்சு. அவளோட அப்பாகிட்ட பேசிப் பாத்தா அவரு பிடிவாதம் பிடிச்சாரு . அவரும் பாவமா சொன்னாரு ஏம்மா வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்... கையில ஒன்னு மில்லமா இன்னம் ரெண்டு தங்கச்சிவேற இருக்கு.. ஒனக்கும் வயசாகிட்டே போகுது காலாகாலத்துல நல்லது நடக்க வேணா மான்னாரு

அப்பத்தான் குமுதாவப்பாக்க வந்தாசெல்வி ஓன்னு அழுதா. இதுக்குப் பேசாம மருந்தக் குடிச்சிச்செத்துப்போவேன்னா
குமுதா சொன்னா அது முட்டாள்தனம் ஒரு ரெண்டுநாள் பொறு ஒரு வழி சொல் றேன்னு சொல்லிட்டு அவள விரும்புன அந்தச் சொந்தக்காரப்பையன் கிட்டப்பேசினா

உண்மையிலே நீ செல்வியக் காதலிக்கி றயான்னுகேட்டா அவனும் ஆமான்னான் கலியாணம் பண்ணிக்குவியான்னா
ரெண்டு நாளு டயம் குடு சொல்றேன்னான்

ரெண்டுநாளு கழிச்சி வந்தான் நான் ரெடி கட்டின பொடவையோட வரச்சொல்லு நான் கலியாணம் பண்ணிக்கிறேன் என்னோட அம்மாகிட்ட சம்மதம் வாங்கிட்டேன் ஆனா மொறப்படி பொண்ணு கேட்டுக்கலியாணம் பண்ணமுடியாது சாதிப்பிரச்சனை வரும்

எனக்கு நல்ல வருமானம் இருக்கு. அவளக்கலியாணம் பண்ணுறதோட அவளோட தங்கச்சிகளையும் நல்ல எடமாப் பாத்து கட்டிக்குடுப்பேன் , என்னால முடியும்
பக்கத்து ஊர்ல எங்க அண்ணன் இருக்கு கலியாணம் பண்ணிட்டு அங்கபோய் இருந்துட்டு நிதானமா இங்கவரலாம் நான் எல்லாம் பேசிட்டேன்னான்

குமுதா செல்விகிட்ட விசயத்தைச்சொன்னா
ரெண்டு பேரும் சந்திச்சாக செல்வின்னா எனக்கு உசுறுன்னான். அவமேல எழுதிவைச்சிருக்கிற கவிதைகளைக் காமிச்சான்செல்விக்கும் நம்பிக்க வந்துச்சு சரின்னா

செல்வியோட அப்பாகிட்ட குமுதா பேசினா
வெட்டிப் போட்டாலும் போடுவேன் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்னாரு
ஆனா செல்வியோட அம்மா சாயங்காலம் வந்து குமுதாவப் பாத்தாங்க அந்த ஆளுநால ஒரு பிரயோனமுமில்ல பேசாம அந்ததம்பிய கூட்டிட்டுப்போய் கலியாணம் பண்ணிக்கச் சொல்லுன்னா

கூடவந்த செல்வி அம்மாவக்கட்டிப்புடிச்சு அழுதாஅம்மா சொன்னா அந்த நரகத்துல போயி நீவாழுறதுக்கு எங்கயாயவதுபோயி நல்லாரு
இவரு ரெண்டுநாளைக்கிக்கத்துவாரு அத நான் பாத்துகிறேன். அப்புறம் சரியாயிடு வாருன்னாங்க அன்னிக்கி ராத்திரி
கெளம்புறதா ஏற்பாடு பையன்கிட்ட சொல்லியாச்சு

கோயில்ல காத்திருந்தான் பையன் அம்மா அப்பா பிரண்டுகளோட . செல்வி அம்மாவோட வந்தா அம்மாவக்கட்டிப்புடிச்சிஅழுதா அம்மா அம்மாவும் அழுதா

அப்ப திடீருண்ணு சைக்கிள்ள அவ அப்பா வந்தாருபையோட எல்லாரும் தெகச்சி நின்னாக அவரு பைக்குள்ள இருந்து ஒருபொட்டலத்த எடுத்தாரு என்னால முடிஞ்சது இதுதான்னு குடுத்தாரு
நல்லபடியா கலியாணம் செஞ்சு வைக்கத் துப்பில்லை வெட்டிப்பயலாப்போயிட்டேன்னு கண்ணீர்விட்டுக்கிட்டே சொன்னாரு செல்வி அப்பான்னுகண்ணீர்விட்டா

போமா போய் எங்கயாவது நல்லாரு இந்த ஊருல என்னத்திட்டுவானுக சாதி கெட்ட பயன்னு பரவாயில்ல நீ நல்லாருந்தாப் போதும்ன்னாருகண்ணீரோட

எல்லாரும் கண்ணத்தொடச்சாக செல்வி திரும்பிப்பாத்துக்கிட்டேபோனா அவனோட
கண்ணீர் மறைக்க வழியனுப்புனா குமுதாவும்

செல்வியோட அம்மாவும் அப்பாவும் கண்ணீரத்தொடைச்சிகிட்டாக..

அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE