வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

By Senthil

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14-ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15-ம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால், 16-ம் தேதியும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார். 

இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

.
மேலும்