ஏற்காட்டில் 45-ஆவது மலர்க்கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

By Senthil

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 45 ஆவது கோடை விழா மலர்க்கண்காட்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை துவக்கி வைத்தனர் .மே 25-ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதனையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் 5லட்சம்  வண்ண மலர்களை கொண்டு  மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி, மகளிருக்கான இலவச பேருந்து, மேட்டூர் அணை, வள்ளுவர் கோட்டம், மாட்டு வண்டி, குழந்தைகளை கவரும் வகையில் சின்சான் உருவம், மஞ்சப் பை உள்ளிட்ட வடிவங்கள் சுமார் 5 லட்சம் மரங்களை கொண்டு அமைக்கப்பட்டிருக்குது.. காய்கறி கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் வண்ண காய்கறிகள் அலங்கரிக்கப்பட்ட வண்ண மயில்கள், காட்டு எருமை, விமானம், கப்பல், வீணை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளின் கண்காட்சியும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம்பெற்று இருக்குது.ஏற்காட்டில் தற்போது குளுகுளு வென நிலவும் சீதோஷ்ண நிலை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உள்ளது. இதனால் ஏற்காட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்

.
மேலும்