ஒரே நாடு... ஒரே ரேசன் கார்டு... என்பவர்கள் ஒரே குளம்... ஒரே சுடுகாடு என கொண்டு வாருங்கள் - சீமான் பேச்சு

By Senthil

தமிழ்நாட்டில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்தித்தார்.
 
இந்தத் தேர்தலுக்கு என மாநிலத்திற்கு எவ்வளவு நீதி ஒதுக்குகிறீர்கள். தமிழக பாராளுமன்ற தேர்தலுக்கு, கர்நாடாக சட்டசபை தேர்தலுக்கு எவ்வளவு நிதி ஓதுக்கிறீர்களோ அதே நிதியைத்தான் ஒதுக்க போறீங்க. அப்படி இருக்க ஒரே தேர்தல் நடத்தினால் தேர்தல் செலவு குறைந்திடுமா? எப்படி குறையும்?

ஒரே நாடு வருது... ஒரே மதம் வருது... ஒரே மொழி வருது...  ஒரே ரேசன் கார்டு... இதெல்லாம் வருதுல... ஒரே குளம் எல்லோரும் குளிக்கலாம், ஒரே சுடுகாடு எல்லோரையும் புதைக்கலாம்... கொண்டு வாருங்கள்... அன்றைக்கு சொல்லுங்கள் தேசப்பற்றைப் பற்றி. நான் என் தேசம் பற்றி கொண்டாடுகிறேன். முடியுமா? என்றார்.

மேலும், பண மதிப்பிழப்பு, தனியார் மயம் உள்ளிட்ட தவிர வேறு எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும். ஹிஜாப் விவகாரத்தில் சாதி மத பிரச்சினையை உருவாக்கி இழிவான அரசியல் செய்வதாகவும் மேலும் குற்றம்சாட்டி பேசினார்.

.
மேலும்