பெண்கள் குழந்தைகளுடன் சிரமமின்றி பயணிக்க 'பேபி பெர்த்' வசதி- ரயில்வே அறிமுகம்

By Senthil

ரயில்களில் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இனி எளிதாக பயணம் செய்யும் வகையில், ரெயில்களில் குழந்தைகளுக்கு படுக்கை வசதியை ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது.

ரயில் பயணங்களை பயணிகளுக்கு வசதியாக மாற்றும் வகையில், வடக்கு ரயில்வே குழந்தைகளுக்கான படுக்கை வசதியை (பேபி பெர்த்) சேதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 இந்த வசதி அன்னையர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரயில்வேயின் டெல்லி பிரிவில் பெண்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 9-ம் தேதி முதல் லக்னோ மெயிலில் அறிமுகமாகியுள்ளது.

இந்த பேபி பெர்த்துகள் மடிக்கக்கூடியவை ஆகவும் மற்றும் குழந்தைகள் விழாமல் இருக்க ஒரு ஸ்டாப்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இது கைக்குழந்தைகளுக்கான கூடுதல் சிறிய படுக்கையாக செயல்படுகிறது. இது ரயில்களில் கீழ் பெர்த்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சியில், இதற்கான முன்பதிவு செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

.
மேலும்