தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண்

By Senthil

தமிழகத்தில் பிளஸ்-2 எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வு வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு வெற்றிகரமாக பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. 

இந்தத் தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 887 பேர், மாணவிகள் 4 லட்சத்து 68 ஆயிரத்து 587 பேர் ஆவார்கள். இந்த தேர்வை 8,37,311 மாணவர்கள் எழுத உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது.,
பொதுத்தேர்வின் தேர்வறையில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை. எனவே மாணவர்கள் எவ்வித பதற்றமும் அடையாமல் தேர்வை எழுதலாம் என்று அவர் கூறியுள்ளார்.

.
மேலும்