பெண்களுக்கு பல்நோக்கு விழிப்புணர்வு

By News Room

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு, பல்நோக்கு விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட்டு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்கள் கடந்த 06.12.2021 அன்று சென்னை பெருநகர காவல்துறைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டு, கடந்த 06.12.2021 முதல் சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்கள், குடிசை பகுதிகள் மற்றம் பல்வேறு இடங்களில் மேற்படி விழிப்புணர்வு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு, குற்றதடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, W-9 வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (16.12.2021) வில்லிவாக்கம், சிட்கோ நகரில் உள்ள அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில், மேற்படி பல்நோக்கு வாகனத்தை கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட்டு காண்பித்து பள்ளி மாணவிகள் மற்றும் அங்குள்ள பெண்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், Good Touch & Bad Touch போன்றவற்றை செய்கைகள் மூலம் எடுத்துரைத்தும், தவறான எண்ணங்களில் யாராவது தொட்டால் பெற்றோர்களிடம் ஆசிரியர்களிடமும் கூற வேண்டியும், சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், சமூக வலைதளங்களை எப்படி பாதுகாப்பாக கையாளுவது குறித்தும், குழந்தைகள் உதவி மைய எண் 1098, பெண்கள் உதவி மைய எண் 1091 மற்றும் காவலன் SOS செயலிகள் பற்றியும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. 

#chennaipolice 
#greaterchennaipolice 
#chennaicitypolice
#shankarjiwalips

.
மேலும்