மதுரையின் தங்கம் திரையரங்கம் ஒர் பார்வை

By News Room

ஆசியாவிலேயே மிகப்பெரியதாக விளங்கிய 'தங்கம்' திரையரங்கம் 1952ல் கட்டப்பட்டது. 

ஒரு காட்சிக்கு 2,563 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். 

இந்தத் திரையரங்கில் 25 நாள்கள் படம் ஓடினாலே 100 நாள்கள் ஓடியதுபோல என்று கணக்கிடுவார்கள். 

1952ல் திரையரங்கின் முதல் படமாக சிவாஜியின் முதல்படம் 'பராசக்தி'  திரையிடப்பட்டது. அப்போது தியேட்டர் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. அரைகுறை கட்டிடத்தின் மண்தரையில் அமரக்கூடிய வகையில், சுற்றிலும் திரைகட்டி அக்.17ல் தீபாவளி தினத்தில் பராசக்தி திரையிடப்பட்டது. 

மொத்தம் 112 நாட்கள் பராசக்தி ஹவுஸ்புல்லாக ஓடியது. அரங்கின் 
2563 இருக்கைகளில் எங்கிருந்தும்  மறைக்காமல் திரையில் படம் பார்க்கலாம்.  

இத்தியேட்டரின் 25ம் ஆண்டுவிழாவில் ஜெய்சங்கரின் 'துணிவே துணை' படம் திரையிடப்பட்டபோது, ஒரே டிக்கெட்டில் மேலும் இரு  படங்கள் காண்பிக்கப்பட்டன. 

ஆங்கிலத்தில் ஜாஸ், ஓமன், எக்சார்சிஸ்ட், இந்தியில் யாதோன் கி பாரத் இங்கு ரிலீசானது. புருஸ்லீயின் 'ரிட்டன் ஆப் தி டிராகன்'  ஒரு நாளைக்கு 7 காட்சிகளாக திரையிடப்பட்டன. 

தியேட்டர் பெயர் தங்கம் என்பதைக் காட்ட கூடுதல் விலை டிக்கெட்டை கோல்டன் ஃபாயில் பேப்பரில் வழங்கினர்.  

கடைசியாக தங்கம் கண்ட நூறு நாள் படம் 'தூறல் நின்னு போச்சு.' 1995ல் நாகார்ஜுனா நடித்த ஈஸ்வர் டப்பிங் படத்துடன் தன் சினிமா வாழ்க்கையை  இத்தியேட்டர் முடித்துக் கொண்டது. 

ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கே கால மாற்றத்தில் தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. 

தங்கம் தியேட்டரில் ஒரு ஹவுஸ் ஃபுல் காட்சி முடிந்து வெளியே வரும் கூட்டம் இருபது நிமிடங்களுக்கு மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மேல மாரட் வீதி, டவுன் ஹால் ரோடு வரை அலைஅலையாய் செல்லும். 

மதுரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அலைமோதி நின்றால், அது தங்கம் தியேட்டரில் படம் முடிந்துள்ளது என்று அர்த்தம்..!

.
மேலும்