ஈரோடு - திருச்சி தினசரி பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்

By Senthil

திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு கிளம்பும் ரெயில் 12 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ரயில் இரவு 8.45 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடைந்தது. 

இதேபோல் திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு கிளம்பும் ரெயில் 11.10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்து அடைந்தது. இதேபோல் மாலை 4.35 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பும் ரயில் 8.25 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்தடையும். இவ்வறாக நாள் ஒன்றுக்கு 2 முறை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வந்தனர். 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலால் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரயிலை பயன்படுத்தி வந்த பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். 

இதனால், ஈரோடு - திருச்சி, திருச்சி-ஈரோட்டிற்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நேற்று முதல் இயக்கப்படும் என அறிவித்தது. இதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.10 மணிக்கு ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் புறப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர்.

.
மேலும்