புத்தக கண்காட்சி - விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் செய்தியாளர் சந்திப்பு

By Senthil

சென்னை புத்தக கண்காட்சி தொடர்பாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பபாசி செயலாளர் முருகன் செய்தியாளர்களிடம்  சொன்னது: ஜனவரியில் 1000 அரங்குகள் வரை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800 அரங்குகளில், 500 பதிப்பகங்கள் மூலம் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

அதே போல், கடந்த ஆண்டு போலவே கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, காலை 11 மணி முதல் 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று கூறிய அவர்கள், தமிழர்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், தொல்லியல் துறை சார்பில் 5 ஆயிரம் சதுர அடியில் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் அளிக்கப்பட உள்ளதாகவும், குழந்தைகளுக்கு படிப்பு, எழுத்து சம்பந்தமாக அரங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சிறந்த எழுத்தாளர்கள் 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க நாளில் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

.
மேலும்