தலைமை செயலகம் போல் பா.ஜ.க. மாநாட்டு முகப்பு தோற்றம்

By Senthil

தமிழக பா.ஜனதா சார்பில் கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி என்ற பெயரில் மாவட்ட மாநாடு 
நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேரூரையாற்றுகிறார். 

இம்மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மாநாட்டு திடலின் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடைகள் அமைக்கும் பணி, மாநாட்டின் முகப்பு தோற்றம், சேர்கள், மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. 

இம்மாநாட்டின் முகப்பு தோற்றம் சென்னை தலைமை செயலகத்தை போன்று அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே சென்னை கோட்டை வடிவத்தில் முகப்பு தோற்றத்தை அமைத்துள்ளதாக பா.ஜ.கவினர் கூறுகின்றனர். 

.
மேலும்