தமிழக பாஜக கூட்டத்தில் அதிரடிகாட்டிய அண்ணாமாலை

By Senthil

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில்,  தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உடன், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.அப்போது, சில மாவட்ட தலைவர்கள் பேசுகையில், 'தி.மு.க., வின் வெற்றிக்கு அதிகார பலம், பண பலம் காரணம்' என்றனர்.

அதற்கு அண்ணாமலை, 'வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், சென்னை மாநகராட்சியின் 134வது வார்டில் நம் வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். அதற்கு, அவரின் கடுமையான உழைப்பே காரணம்' என்றார்.

மேலும்,  பா.ஜ.,வுக்கு அனைத்து தரப்பினரும் ஓட்டளிக்க தயாராக உள்ளனர். அதற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்த நிர்வாகிகளும் தயாராக வேண்டும்.வேட்பாளர்கள்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத மாவட்ட தலைவர்கள், தங்கள் பதவியில் இருந்து தாங்களே விலகி கொள்வது நல்லது.

கட்சி பணியில் சரிவர செயல்படாத பகுதி நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே மாற்றி கொள்ளலாம்; உள்ளூர் பிரச்னைகள் தொடர்பாக, தாங்களே போராட்டங்களை அறிவிக்கலாம் என, அண்ணாமலை பேசினார். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

.
மேலும்