3-வது குழந்தை பெற்றுக்கொள்வதை அரசு ஆதரிக்க கூடாது - கார்த்தி சிதம்பரம்

By செய்திப்பிரிவு

பெண்களுக்கு பேறுகால விடுப்பு வழங்குவதை வரவேற்கிறேன். அதேபோல ஆண்களுக்கும் பெட்டர்னிட்டி விடுமுறை வழங்க வேண்டும். ஆனால் 3 வது குழந்தை, அரசாங்கம் கொள்கை ரீதியாக ஊக்குவிக்க கூடாது. குழந்தை பிறந்தால் கல்வி, சுகாதாரம், கொடுக்க வேண்டும்.

குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் அதற்கான வசதிகள் தேவை. ஆகையால் மக்கள் தொகை எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்பதற்காக 3 வது குழந்தையை அரசு ஆதரிக்கிறதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.

திருச்சியில் தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த சிவகங்கை எம் பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "3- வது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அரசு ஆதரிக்க கூடாது. நம்ம ஊரில் நல்ல ஆரோக்கியமான மக்கள் தொகை, நல்ல படித்த மக்கள் தொகை தான் தேவை.

எண்ணிக்கையை உயர்த்துவதற்காக 3 குழந்தை என்பதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை.
பெண்களுக்கு பேறுகால விடுப்பு வழங்குவதை வரவேற்கிறேன். அதேபோல ஆண்களுக்கும் பெட்டர்னிட்டி விடுமுறை வழங்க வேண்டும். ஆனால் 3 வது குழந்தை , அரசாங்கம் கொள்கை ரீதியாக ஊக்குவிக்க கூடாது. குழந்தை பிறந்தால் கல்வி, சுகாதாரம், கொடுக்க வேண்டும்.

குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் அதற்க்கான வசதிகள் தேவை. ஆகையால் மக்கள் தொகை எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்பதற்காக 3 வது குழந்தையை அரசு ஆதரிக்கிறதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்துக்கொண்டதை பற்றி திமுக முரசொலி நாளிதழில் வந்த செய்தி குறித்து கேட்டபோது..... நான் முரசொலி நாளிதழை படிப்பது இல்லை என தெரிவித்தார்.

கரப்பான் பூச்சி ஜனதா தளம் போராட்டத்தில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ள கூடாது என, யார் அறிவிப்பு வெளியிட்டது என தெரியவில்லை. அதனை திரும்ப பெற்று விட்டார்கள். அதனை வரவேற்கிறேன். எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்குவது தொடர்பான கேள்விக்கு...? இன்னும் எம்பி மட்டும் தான் கேட்கவில்லை என்றார்.

தமிழகத்தை பொறுத்தவரை, பெண் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விடுப்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்கிற நிலை இருந்தது. எனினும் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே (3 மாதங்கள்) மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த விதிமுறைகளை திருத்தி அமைக்குமாறு, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரசவத்துக்கு பிந்தைய உடல்நலப் பிரச்சனைகளை சமாளிப்பதற்கும், குழந்தையை பேணுவதற்கும் இந்த 3 மாதக்கால விடுப்பு போதுமானதாக இல்லை என்றார்கள்.

இந்நிலையில்,நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் அமைச்சர் சரத்குமார் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் பெண் அரசு ஊழியர்களும் இனி ஓராண்டு (365 நாட்கள்) மகப்பேறு விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தார். முன்னதாக மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் பிரசவ வலியும், பராமரிப்பு தேவையும் ஒன்றுதான் என்பதால், மகப்பேறு விடுப்பில் பாரபட்சம் காட்டக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE