தக்கர் கொள்ளையர்கள்

By News Room

இந்தியாவையே கிடு கிடுக்க வைத்த ஒரு கொள்ளை கூட்டம்..

புத்தகத்தை படிக்கும்போது எனக்கு பெரும் கேள்விகள் எழுந்தன.. இந்திய வரலாற்றில் இவர்கள் மறைக்கப்பட்டார்களா. சொந்த நாட்டில் இப்படி ஒரு கூட்டம் இருந்தது இப்போது எத்தனை பேருக்கு தெரிந்துள்ளது... ஏன் இந்திய சாலை கொள்ளையர்கள் எனப்படுவோர் பற்றி பெரிதாக எதையும் பார்க்க முடியவில்லை.

பொதுவாக குற்ற பரம்பரை என்பவை போர் நெறி தவறாத வீர பரம்பரை என்றும் ஆங்கிலேயருக்கு அடி பணியாத காரணத்தால் அந்த சமூகம் குற்ற பரம்பரையாக அறிவிக்கப்பட்டது என்றும் ஒரு வாதம் உண்டு... இந்த புத்தகம் அதை பொய் என எடுத்து கூறிவிடும் என நினைக்கிறேன்..

நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட கொடூரமான ஒரு கொள்ளை கூட்டம் இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளது... பல வகை கொள்ளை கூட்டங்கள் இருந்துள்ளன. அவற்றில் முக்கியமானவர்கள் தக்கர்கள்...

வழிப்போக்கர் களோடு நண்பர்கள் போல பேசி செல்லும் இவர்கள் சமயம் கிடைக்கும்போது வழிப்போக்கர் கூட்டத்தையே கொன்று அவர்களை புத்துவிடுவர்.. அந்த கூட்டத்தில் உள்ள சிறுவர்கள், நாய்கள் கூட அதில் மிஞ்ச முடியாது. விவரம் தெரியாத குழந்தைகள் இருந்தால் அவர்களை வளர்க்க எடுத்துக்கொள்வர்...

ஒரு தக்கி குழு வேட்டைக்கு கிளம்பினால் ஒரு வேட்டையில் குறைந்தது 100 பேரையாவது கொன்று விடுவார்கள்... ஒவ்வொரு தக்கியும் 100 கணக்கில் கொலை செய்திருப்பான்...

இப்படி ஒரு கூட்டத்தை அடக்க வந்த ஸ்லிமனுக்கு ஒரு புத்தகம் மூலமாகதான் தக்கிகள் பற்றி தெரிய வந்தது... புத்தகங்கள் எவ்வளவு அற்புதமானவை... இந்தியாவில் ஆயிர கணக்கில் தக்கிகளை ஸ்லிமன் அடக்க காரணமாக இருந்தது ஒரு புத்தகம்... அதே போல ராய் மாக்ஸம் உப்பு வேலியை கண்டறிய காரணமாக இருந்தது ஸ்லிமன் எழுதிய ஒரு புத்தகம். 

.
மேலும்