கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து

By News Room

பேயதேவர் என்கிற மனிதனின் குடும்ப பிணைப்பு, உழைப்பு என்று நிறைய விஷயங்களை பேசுகிற இதிகாசம். சில சமயம் உணர்ச்சிகளை வடிக்க சரியான வார்த்தை கிடைக்காது. இப்பொழுதுதான் படித்து முடித்தேன். எனக்கு கிடைத்த அனுபவத்தை இங்கு விளக்கத் தெரியாமல், வைகை அணைக்கு அடியில் அரணாக இருக்கும் பாறையின் கணத்தை என் மனம் உணர்கிறது. பேயத்தேவர் மண் மீது கொண்ட பாசத்தை ஊர் மக்களுக்கு பிடி மண்ணை (நெல்லை அள்ளிக் கொடுப்பது போல்) கொடுக்கும் நேரத்தில் உணர முடியும். அவருக்கு முருகாயிடம் ஏற்பட்ட காதல் அனுபவித்தால் தான் புரியும். மிகவும் பரவசமானது. கனமான இதிகாசத்தில் மனதை வருடுகிற மயிலிறகு முருகாயி மீது கொண்ட காதல். சாதி பேதத்தை தூக்கியெறிந்தது. சின்னு மொக்கராசு மீது கொண்ட மாமன் பாசம் விபூதி பூசம் பொழுது அருமை. மகள்களும் மகனும் தேவையான பொழுது எல்லாம் அப்பாவிடம் வந்து நிற்கும் எல்லா சமயத்திலும் பேயத்தேவர் விட்டுக் கொடுக்கவே இல்லை, கடைசியாய் வாங்கிய நஷ்ட ஈடு வரைக்கும். புருஷனை விட்டுக் கொடுக்காத அழகம்மா. வண்டி நாயக்கர் பேயத்தேவர் இடையே இருந்த நட்பு என்று நீண்டு கொண்டே போகிறது நீண்ட ஆயுள் கொண்ட இதிகாசம். 

பாறையாக கனத்துக் கிடக்கும் நெஞ்சை தாண்டி பேயத்தேவரும் மொக்கராசுவும் வெட்டிய கிணற்றிலிருந்து பொத்துக் கொண்டு வரும் தண்ணீர் போல காத்திருக்கிறது கண்ணீர். மொக்கராசு தன் தாய் தகப்பன் என யாவற்றையும் பேயதேவர் உருவத்தில் பார்த்தான். 

அவனின் ஒட்டு மொத்த தைரியமும் அவர் தான். மகள்கள் விரட்டியடித்த நேரத்திலும் , தன் மகள்களாக நினைத்து அவர்களை பேயத்தேவரிடம் விட்டுக் கொடுக்காத முருகாயி. இன்னும் பேசிக் கொண்டே இருக்கலாம் காலத்தால் குறுகி போகாத பல்லாயிரம் ஆண்டுகள் ஆள போகும் கள்ளிக்காட்டு இதிகாசத்தை .

.
மேலும்