வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்! ஆசிரியர் -தபூசங்கர்

By News Room

நூல் -வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்!
ஆசிரியர் -தபூசங்கர்
கிண்டில் பதிப்பு.

உங்கள் அன்பை அவர்களுக்கு நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களையல்ல.

- கலீல் ஜிப்ரான்.

நான் எதைக் கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்!

இந்த ஒரு கவிதைக்காகத்தான் படித்தேன் மற்றபடி இப்புத்தகம் என்னை ஈர்க்கவில்லை.

அழகான பொருட்களெல்லாம் உன் னை நினைவுபடுத்துகின்றன உன் னை நினைவுபடுத்துகிற எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன!

எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும் என் னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும் வைத்திருக்கிறாய்"

வெளிச்சம் என்பது உன்னிடமிருந்துதான் வீசிக்கொண்டிருக்கிறதா என்கிற சந்தேகத்தை உன் னை இருட்டில் நிற்க வைத்து தீர்த்துக்கொள்ளவேண்டும் ஆனால் உன் னை அருகில் வைத்துக்கொண்டு இருட்டை நான் எங்கு தேடுவேன்!

ஒரு விடுமுறைநாளில்
நான் குளித்து முடித்து சேலை மாற்றுகையில் வந்து
வம்பு செய்து ‘நான் கட்டிவிடுகிறேன்’ என்றாய் உன்னிடமா தப்ப முடியும் ‘ம்ம்’என்றேன்
‘கற்றுக்கொடு என்றாய்
இவ்வளவு ஆர்வமாகவும் இவ்வளவு மெதுவாகவும் நீ கற்றுக் கொண்டது இதுவாகத்தான் இருக்கும்!

கூந்தலில் பூவாசனை வீசும் தெரியும் இந்தப் பூவிலோ உன் கூந்தல் வாசனையல்லவா வீசுகிறது!

நான் நகர்ந்தால் ‘என் பக்கத்திலேயே இரு என்று என் கையைப் பிடித்து இழுக்கவும் செய்யும் உன் வெட்கம் ஆனாலும் விதவிதமாய் வெட்கப்படுகிறாய் நீ!

நீ முத்தமிட்ட கையை வைத்துக்கொண்டு
ரொம்பவும் அவஸ்தைப்படுகிறேன் எதையும் தொட மறுக்கிறது
அது சின்னக் குழந்தை தன் கைக்குள் பத்திரமாய் வைத்துக்கொள்கிற மிட்டாய் மாதிரி
என் னையும் வைத்துக்கொள் என்கிறது அந்தக் கை!

ஐந்து மணிக்கு வருவதாய்
நீ சொன்னதிலிருந்து
ஐந்து மணிக்காகக் காத்திருந்தேன் ஐந்து மணி வந்ததும்
உனக்காகக் காத்திருந்தேன்
நான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேனா
காத்திருக்க ஆரம்பித்திருக்கிறேனா!

தொடுகிற பூக்களையெல்லாம் என்னால் தொட முடிந்ததே இல் லை நீ தொட்டது எப்படி எனக்குத் தெரியும் என்கிறாயா உன் விரல்களைத்தான் பூக்கள் அப்படியே வைத்திருக்கின்றனவே!

.
மேலும்