நம் நாட்டின் மிகப்பெரிய ராணுவ வீரர் பற்றி தெரியுமா

By News Room

நம் நாட்டின் மிகப்பெரிய ராணுவ வீரர்   சாம் மானெக்‌ஷா..

நாடு சந்தித்த 5 முக்கிய போர்களை சத்தமில்லாத பிரளயத்துடன் நிகழ்த்தி, நம்மை காப்பாற்றியவர்..! 
1962-ல் சீனப்போர் நடந்போது, "கூப்பிடுங்கள் மானெக்‌ஷாவை" என்றார் நேரு..!

ஜப்பானுடன் நடந்த போரில் இவரை 7 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டனர்.. உடம்பில் குண்டுகள் பாய்ந்தும்கூட, அவர் கையில் இருந்த துப்பாக்கி மட்டும் சீறி கொண்டே இருந்தது.. படுபிஸியாக சண்டை போட்டு கொண்டிருந்தார்.
இதை பார்த்த பிரிட்டிஷ் இந்திய ராணுவத் தளபதி,  மிரண்டே போய்விட்டார்.. உடனே தன்னுடைய மிலிட்டரி பதக்கத்தை கழற்றி, அந்த போர்முனையிலேயே மானெக்‌ஷா கழுத்தில் அணிவித்தார். 

துணிச்சலுக்கு பெயர் போன இந்திராவே ஒருவரை பார்த்து வியக்கிறார் என்றால் அது மானெக்‌ஷாவை பார்த்து தான்.. இந்திராவை எப்போதுமே  "ஸ்வீட்டி" என்று ஒருவர் தைரியமாக கூப்பிடுகிறார் என்றால் அது மானெக்ஷாதான்..!
இப்படித்தான், 1971-ல் பாகிஸ்தான் நம்மிடம் வாலாட்டி கொண்டிருந்தது.. உடனே மானெக்‌ஷாவுக்கு போன் அடித்த இந்திரா, "ஜெனரல், ஆர் யூ ரெடி?" என்று கேட்க, "நான் எப்பவோ ரெடி மேடம்" என்று மானெக்‌ஷா சொல்ல, பாகிஸ்தான் கதையை ஒரே வாரத்தில் முடித்தார் மானெக்‌ஷா..!

காஷ்மீரை காப்பாற்றி, வெறும் 13 நாளில் வங்கதேசம் என்ற புதிய நாட்டையே உருவாக்கியவர்தான் மானக்‌ஷா... ஃபீல்டு மார்ஷல்' அந்தஸ்து பெற்றவர்கள் 2 பேர் மட்டும்தான்... ஒருவர் சாம் மானக்‌ஷா... இன்னொருவர் ஜெனரல் கரியப்பா.
மானெக்‌ஷா என்ற தைரியத்தின் ஒளிக்கீற்றில் எத்தனையோ வீர சாதனைகள் அன்று நிகழ்ந்தேறியது... "நம் தேசத்தை காக்க மானக்‌ஷா இருக்கிறாரே, நமக்கென்ன கவலை?" என்று நாட்டு மக்களுக்கு பெருத்த நம்பிக்கை வலுத்து கிடந்தது. 

ரிடையர் ஆன பிறகு, உலகின் எங்கு வேண்டுமானாலும் சென்று இவர் இறுதி காலத்தை  கழித்திருக்கலாம்.. ஆனால் நம் குன்னூரில் வந்து தங்கினார்... குன்னூரின் குளுகுளுவும், மக்களின் பாசமும் அவரை கட்டிப்போட்டுவிட்டது. 
மனைவியுடன் சேர்ந்து ஏழைகளுக்காகவே இலவச ஆஸ்பத்திரி கட்டினார்.. மானக்‌ஷாவின் மகள்கள் ஷாப்பிங் சென்றால், "அப்பா எப்படி இருக்கிறார்..ம்மா" என்று குன்னூர் மக்கள் அன்போடு விசாரிப்பார்கள். 
2008-ல் திடீரென மானெக்‌ஷாவுக்கு மாரடைப்பு வந்துவிட்டது.. டாக்டர்கள் அவரை உயிரை காப்பாற்ற போராடி கொண்டிருந்தபோது, "ஏன் இவ்ளோ டென்ஷன், நான் நல்லாதான் இருக்கிறேன்" என்று டாக்டர்களுக்கே நம்பிக்கை தந்து,  உயிரையும் விட்டார் மானக்‌ஷா.

இறுதி அஞ்சலிக்கு நீலகிரியே தயாரானது.. இவர் பார்சி இனத்தை சேர்ந்தவர்.. அதனால் இவர்களுக்கென்று தனியாக ஊட்டியில் கல்லறை உள்ளது.. தேசிய கொடி போர்த்தி ராணுவ வாகனத்தில்,  உடல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மாவீரனை ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து,  இந்திய தாய் கர்வம் கொள்கிறாள்.. இம் மலைப்பிரதேசத்தின் நிசப்தத்தில், அவரது ஆன்மா நித்திரை கொண்டுள்ளது..!
அடர்த்தி மிகுந்த வரலாற்றை, அதிர பதிப்பித்து சென்ற ஜெனரல் மானக்‌ஷா-வுக்கு என்னுடைய வீர வணக்கம்!

.
மேலும்