அப்பாவை பற்றிய கவிதை

By News Room

1) நீயெல்லாம் எங்கடா 

உருப்படப் போறன்னு திட்டிட்டு...

எப்பதான் என் புள்ளப உருப்படுவானோன்னு ஏங்கறவருதான்..

**அப்பா**

2) பெரும்பாலும்

அப்பா நமக்காக வாங்கிவரும் ஒவ்வொரு பொருளும், 

அவர் காலத்தில் அவருக்கு அது கிடைக்கப் பெறாதவையாகவே

இருந்திருக்கும்.!!*அப்பா*

3) மழுங்கிப்போன அப்பாவின் கண்ணாடியை அணிந்த போது, பூதாகரமாய்த் தெரிந்தது  எங்களுக்காக அவர் தொலைத்த வாழ்க்கை.!

அப்பா

4) தான் கோமாளி வேஷமிட்டு தன்  மகனை(ளை) ஹீரோ/ ஹீரோயின் ஆக்கும் தந்தை நாம் பெற்ற வரம்.அப்பா

5) கடைசி வரை புரிந்துகொள்ள

முடியாத; புரிந்து கொள்ளும் போது படிக்க கிடைக்காத புத்தகம் - அப்பா

6) சாப்டியாப்பா என்பது அம்மாவின்  பாசமென்றால்...

சாபிட்டானான்னு கேளு என்பது அப்பாவின் பாசம்..

7. வலிக்காத மாதிரி அடிச்சிட்டு தூங்க வைக்கிறது, அம்மா; 

வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது, அப்பா..

8. மகனையோ மகளையோ

அடித்துவிட்டால்

அவர்கள் தூங்கிய பின் அவர்கள்அருகில் அமர்ந்து அழுகும் போது தந்தையிடம் காணலாம் ஆயிரம் தாயின் பாசத்தை

9) ஒரு சொல்லில் கவிதை என்றால்

அது அம்மா.

ஒரு சொல்லில் சரித்திரம் என்றால் அது அப்பா...

10) படிப்பை முடித்து நடு ரோட்டில் அலையும் போது தகப்பனின் வேர்வையை உணர்கிறான் ஆண்..அப்பா

11) ஐந்து வயதில் ஹீரோவாகி இருவது வயதில் வில்லனாகி ஐம்பது வயதில் தெய்வமாகிறார் .அப்பா

12) தனக்கென எந்த ஆசையும் இல்லாமல், என் ஆசைகளை தத்தெடுத்துக்கொண்ட என் தந்தையைவிடவா ஒரு பெரிய செல்வத்தை அட்சய திரிதியை தந்துவிடப்போகிறது.

அப்பாவின் நினைவுகள் பின் தான் தெரியும் புரியும்.

.
மேலும்