புத்தகம் ஆடுகளம்

By News Room

புத்தகம் ஆடுகளம் 
அரசியல் அழகியல் ஆன்மீகம்
தினேஷ் அகிரா
வாசகசாலை பதிப்பகம் 

முகநூலில் தொடர்ச்சியாக தினேஷ் அகிராவின் கிரிக்கெட் குறித்த பதிவுகளை வாசிப்பது வழக்கம்.

 ஆழ்ந்த சொற்களைக் கொண்டு தொழில்நுட்ப நேர்த்தியுடன் அவர் விளக்கிடும் பாணி கிரிக்கெட்டை நேசிக்கும் வாசிப்பு பழக்கம் உடைய நபர்களுக்கு பெரிதும் மகிழ்வு அளிக்கவல்லது.

 டான் பிராட்மேன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை ஒவ்வொருவரின் ஆளுமையையும் அவர் விவரிக்கும் நேர்த்தியின் அழகியல் அவருக்கே உரியது.

 பொதுவாக இலக்கிய ஈடுபாடு உடைய நபர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் குறித்து ஈர்ப்பு அற்றவர்களாகவே இருப்பார்கள் என்றே நினைத்திருந்தேன்.

 2010களின் துவக்க ஆண்டுகளில் ஆர்.அபிலாஷின் கிரிக்கெட் குறித்த கட்டுரைகளை உயிர்மை இதழ்களில் வாசித்தபோது பெரிதும் வியந்தேன்.

 அபிலாஷிற்குப் பின் கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் தினேஷ் அகிராவின் பங்களிப்பு தொடர்ச்சியாக மெருகேறிக் கொண்டே வருகிறது.

 கிரிக்கெட் விளையாட்டு மீதான அதீத ஆர்வம் அதுகுறித்த உட்கூறுகளை நுட்பமாக அறிந்து தெளிய ஒருவருக்கு உதவலாம். வரலாற்று குறிப்புகளை இணையத்தின் உதவியுடன் பெற்றும் விடலாம்.

 எனினும் சமகால வீரர்களின் ஆட்ட நுணுக்கங்களை துல்லியமாக அலசுவதுடன், அவரவர் உளவியல் சார்ந்தும் தினேஷ் வரையறுத்துவிடும் அனுமானங்கள் பெரும் வியப்பளிப்பவை.

 ஒரு கட்டுரையில் சச்சினுக்கு மாற்றாக பாகிஸ்தான் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர் போன்றோரை முன்னிலைப்படுத்தியதாக குறிப்பிடுகிறார்.

 பாகிஸ்தான் முன்னிலைப்படுத்தியது மேற்கண்ட மூவரையும் அல்ல. இன்சமாம் உல் ஹக் தான் அந்த நபர். அக்ரமும், யூனிஸும் சச்சினுக்கு முந்தைய தலைமுறையினர்.

 அக்தர் அறிமுகமானதே தொண்ணூறுகளின் இறுதியில்தான். 1992 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 32 பந்துகளில் 67 ரன்கள் குவித்து தனிநபராக இன்சமாம் வீழ்த்தினார்.

 இன்சமாமை வியந்து போற்றிய அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான், 'சச்சினைத்தான் எல்லோரும் புகழ்கிறார்கள், இன்சமாமை ஒருவரும் கண்டு கொள்ள மறுக்கிறார்கள்' என்று புலம்பியது அப்போதைய இந்தியா டுடே கட்டுரையில் வெளியாகியுள்ளது.

 அக்கட்டுரையில் சச்சின் - இன்சமாம் விரிவான ஒப்பீடே வெளியானது.

.
மேலும்