பொன்னம்மாவும் பூரணம் ஆத்தாவும் (சிறுகதை)

By சரவணன்

பொன்னம்மாவும் பூரணம் ஆத்தாவும் மருதக்குள்ள டவுனுக்குப் போய்பலசரக்கு வாங்கியாரதா சொல்லிக்கிளம்பினாங்க. இவுக ஊரு விளாச்சேரி அந்த ஊருக்கு டவுன் பஸ்9A ஒருமணிக்கு ஒருதடவ வந்து போகும் அதுல ஏறி நெல்லுப்பேட்டையில எறங்கி நடந்து போனா

கீழமாசிவீதி வந்துரும். அங்க மொத்த வெலைக்கடைக இருக்கும் வெல கொறவா இருக்கும் அதுல தேர் முட்டிக்குப் பக்கத்துல உள்ள சந்துக்குள்ள தான் செண்பகமண்ணாச்சி கடை இருக்கு. அதுலதான் அந்த ஊர்க்காரவுக எல்லாம் பலசரக்கு வாங்குறது. இவுகளும் அங்கதான்

பலசரக்குவாங்குறது வழக்கம் 
காலையில9மணி பஸுக்குகிளம்பினா
கடையிலபோய் சரக்கைச்சொன்னா
அண்ணாச்சி சிட்டயில எழுதிக்கிடுவாரு.
ரெண்டுமணிநேரம் கழிச்சு வரச்சொல்லுவாரு
சாக்குமூட்டையில பனஓலைப்பொட்டில

போட்டுவச்சிருவாரு அப்படியேபோய் .அம்சவள்ளி  ஓட்டல்ல
மணக்க மணக்க வெள்ளாட்டுபிரியாணி சீரகச்சம்பாவுல வாசமா இருக்கும் அதை  வாங்கி சாப்புட்டுபுட்டு
சிந்தாமணிடாக்கீஸ்ல சிவாஜிபடம் மத்தியாண ஆட்டம்

பாத்துட்டுவந்தா நேரம்   சரியா இருக்கும். அண்ணாச்சிக்கிட்டச் 
சொன்னா கடைப்பயலுக பஸ்டாப்புக்கு
கொண்டுவந்து பஸ்ஸேத்திவிடுவாக
காசுஎப்பவுமே கொஞ்சம் கடன் சொல்லுறதுதான்
அண்ணாச்சி சரி அடுத்ததடவ வாரப்போ கொடுங்க

இல்ல ஆருட்டயாவது குடுத்து வுடுங்கம்பாரு. அது மாதிரிதான் அன்னிக்கும் போனாக 9Aபஸ் ஏறி. கண்டக்டர் என்னா ஆத்தா டவுனுக்கு பலசரக்கு வாங்கப்போறீகளா ஏதும் வீட்டுல விசேசமா நு விசாரிச்சார். அதெல்லாம் ஒன்னுமில்ல. கருதறுத்து வித்துக் காசு வந்துச்சு. உப்பு புளி மொளகா பருப்பு வாங்கிப்போட்டா வருசத்துக்கு ஆகும்  அதான் போறோம். நு சொல்லிச்சு பூரணம். அவர் டிக்கெட்டக்கிழிச்சிக் குடுத்துட்டு வாங்குன 

நோட்டுக்குச் சில்லறை இல்லன்னு சொல்ல இப்புடி நீங்க சொல்லுவீங்கன்னு தெரியும் நு சொல்லி பூரணம் சுருக்குப்பையில இருந்து. 10 பைசா 5/பைசா சில்லரைய எடுத்துக்கொடுத்துச்சு. ஆத்தா நல்லாருக்கனும் நு சொல்லிச் சந்தோசமா வாங்கி தோல் பையில போட்டுக்கிட்டாரு கண்டக்டர். நெல் பேட்டையில எறங்கி கடைக்கிப்போய் சிட்ட போட்டுட்டு பிரியாணி சாப்புட்டுட்டு அப்புடியே சிந்தாமணி தேட்டர்ல  சிவாசிக்கணேசன் படம் பாகப்பிரிவினை பாத்து அழுது முந்தானை நனைஞ்சு எம் . ஆர் .ராதாவ எடுபட்ட பயல்னு திட்டிட்டு கடைக்கு வந்து  பலசரக்கு மூட்டய எடுத்துக்குட்டு திரும்பினாக ரெண்டு பேரும்.

அன்னிக்கிப்பாத்து கடையில இருந்து கிளம்பின
பின்னாடிதான் யாவகம் வந்துச்சு புள்ளைகளுக்கு
எதுவும் வாங்காதது கைல பஸுக்குத்தான் 
காசுஇருக்குன்னு கலங்கினா பொன்னம்மா
பூரணத்திடமும் காசில்லை அப்பத்தான்சொன்னா
ஏதாவது அடகுவைச்சிரலாமான்னுகேட்டப்ப
எவ்வளவு வேணும் அம்பது ரூவா இருந்தா சரியாருக்கும்
ஒண்ணும் பிரச்சனையில்லை சந்தணக்கடை சாயுபுகிட்ட

வாங்கிகிடலாம் கொடுப்பாரு பக்கத்திலதான். நு சொன்னா பூரணம் ஆத்தா.ஏன்னா அங்கதான்  மலையடிக்கோயில்ல பூசை போட்டி சந்தனம் சூடம் பத்தி எல்லாம் அந்த ஊர்க்காரவுக வாங்குறது. அங்கபோய் சாயிபுக்கிட்ட பூரணம் ஆத்தா வெவரம் சொல்லிப் பணம் கேட்டா.

சாயிபு சொன்னாரு அதுக்கென்ன வாங்கிட்டுப்போங்க
கூடப்பொறந்த அக்காமாதிரி நீங்க 

அடுத்த தடவ வாரப்பக்குடுங்க இல்ல ஆர் கிட்டயாச்சும் குடுத்தனுப்புங்க இல்லாட்டினாலும் பரவால்லனு
வேன்னா இந்த வலையல வைச்சிக்கிடுறீகளா என்றாள் பொன்னாத்தா

அக்காவ நம்பமாட்டேனா அதெல்லாம் வேணாம்
அக்கா கை வெறுங்கையாகக்குடாது வாங்கிட்டுப்போங்க என்றார். அதைச்சொல்லிக் காசு குடுக்கும் போது கண்ணு கலங்கிடுச்சு . எதுக்கெடுத்தாலும்  பணம் பொறட்ட வளையலக்கேக்குற புருசம் மூஞ்சி வந்துபோனது பொன்னாத்தாவுக்கு.

காராச்சேவு அதிரசம் முறுக்கு  ஆதிகாலத்து நாகப்பட்டினம் ஒரிஜினல் அல்வா கடையில வாங்கிட்டுப்போய்
பிள்ளைங்க கிட்டக் குடுத்தாக ரெண்டுபேரும் .அதுக ருசிச்சித்  திங்கிறப்போ வந்தசந்தோசத்தில்
சாயிபு முகம் வந்துபோனது கண்களில் துளிர்த்தது கண்ணீர் அப்ப அவர் சொன்ன அக்கா கை வெறுங்கையா இருக்கக்கூடாதுன்ற வார்த்தை இப்பவும் கலங்க வைச்சிருச்சு பூரணம் ஆத்தாவ.

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE