ராமச்சந்திரன் பால்கனில துண்டக் கட்டிக் கிட்டோ இல்ல கைலி கட்டிக்கிட்டோ வெளிய வானத்த வெறிச்சிப்பாத்தபடி நிக்கிறார்ன்னா உள்ளாற அவர் சம்சாரம் லச்சுமி அம்மா அவருக்கு அர்ச்சனை பன்னுறாங்கன்னு அர்த்தம். வீட்டுக்குள்ள அந்த அம்மா வோட சத்தம் பலமாகக்கேக்கும் அவர் வெளிய நின்னு வானத்த பறைவகளை வேடிக்க பாப்பார் அந்த அர்ச்சனை தெனம் கேக்குறதுதான்
அவர் ரிட்டயர்டு ஆனவரு. அவர் சம்சாரத்தப்பொறுத்தவரை அவர் ஒன்னுக்கும் பயன்படாத ஜென்மம். அவரை வைச்சி எப்புடி அம்புட்டுநாள் வேலைவாங்குனாங்களோன்னு அலுத்துக்குவாங்க. அந்தம்மா பக்கத்துல இருக்குற கிண்டர்காரடன் பள்ளிக்கூடத்துல வேலை. ஹெட்மாஸ்டர். காலையில 7மணில இருந்து 12 மணிவரைதான் பள்ளிக்கூடம். மத்தியானம் ஃப்ரீதான்
நம்ம ராமச்சந்திரனுக்கு தினம் அஞ்சு கடமைகள். முதலாவது காலையில ஆறுமணிக்கி எந்திரிச்சி போய் பாலும் கீரையும் வாங்கிட்டு வரணும். வாங்கிட்டு வந்து மேல இருந்து ஒரு பை கட்டித்தொங்கும் அதுல போட்டுட்டு மேடத்துக்கு போன் பண்ணி சொல்லனும். அதுல செலநாள் போன இல்லாட்டினா பர்ஸ மறந்துருவாரு. அன்னிக்கி அதன் பேரில் அவருக்கு அர்ச்சனை நடக்கும்.
அப்புறம் மேல வந்து மேடம் குடுக்குற காப்பிய குடிக்கனும். அதுல கால்வாசி சர்க்கரை தான் இருக்கும். ஆனா அய்யா பால்கனில ரகசியமா வைச்சிருக்குற சர்க்கரைய கலந்து குடிப்பாரு ஆனா மேடம் கிளாஸ்கழுவும்போது கீழ படிஞ்சிருக்கும் சக்கரைய வைச்சிக்கண்டு புடிச்சிடுமுன்னு தானே கழுவுவாறு. அதை கண்டுபிடிச்ச்சி அதுக்குத் தனியா அர்ச்சனை நடக்கும்
அடுத்தவேலை மேடத்தை ஸ்கூட்டரில் கூப்புட்டுப்போய் பள்ளிக்குடத்துல விடனும். அதுல பல மிஸ்டேக் நடக்கும். செலநேரம் வண்டி ஸ்டார்ட் ஆகாது. செலநேரம் போகும்போது பாதிவழில வண்டி நின்னுடும் அப்ப கடுமையான அர்ச்சனை கிடைக்கும். ஆனா அது அப்ப கிடைக்காது. பள்ளிக்கூடம் முடிஞ்சி மேடம் வந்தவன்ன அய்யா பால்கனில நின்னு அந்த அர்ச்சனைய சோகமா வாங்கிக்கிருவார்.
அடுத்து மேடம் பள்ளிக்கொடத்துக்கு போனப்பரம் டிபன் சமைச்சி வைச்சிருக்கும் அத முழுசா சாப்புடனும். ( எப்படி இருந்தாலும்) இல்லாட்டினா காசு என்ன கம்மங் கொள்ளை யிலயா காய்ச்சித்தொங்குது எல்லாம் வெட்டியா கொள்ளையில போகுது ஒனக்கெல்லாம் அறிவே இல்லங்குற அர்ச்சனை கேக்கனும் அதுனால இவரு முடிஞ்சவரைக்கும் சாப்புட்டுட்டு மீதிய தூர எறிஞ்சிட்டு தடத்த அழிச்சிருவாரு.
அப்புறம் மத்தியானத்துக்கு சமைச்சி வைக்கனும். அதுல ஏதாவது கோளாறுன்னா மேடம் சாப்புடும்போது அர்ச்சனை கிடைக்கும் செலநேரம் அவர் தலைவழியாக சாம்பார் அபிசேகம் நடக்கும். அப்ப எல்லாம் பால்கனிக்கி அவர் தப்பிக்க முடியாது... பாத்ரூம்தான் போகனும்.
மேடத்தப்பொறுத்தலவில கடைசி பெஞ்ச் உருப்படாத ஸ்டூடண்ட் அவர். அதனால வீட்டில் அடிக்கடி அர்ச்சனை பெஞ்ச் மேல ஏறி நிக்கிற மற்றும் முட்டி போடும் தண்டனை உண்டு.
இவங்களுக்கு ஒரு மகனுமிருந்தான். அவன் வெளியூர்ல இருந்தான் . அவன் வந்துட்டா மேடம் வாய் வலிக்கும் ஏன்னா ரெண்டுபேருக்கும் அர்ச்சனை செய்யனுமே மகன் அப்பாமாதிரியேதான். அதுனால ரெண்டுபேரும் பால்கனி வந்துருவாங்க உள்ள சேத்து அர்ச்சனை நடக்குறதால.
இவர் பக்கத்து ஊருல ஒரு வீடு கட்டி அத வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டுல குடியிருந்தவனுக்கு இவரைப்பத்தி தெரிஞ்சிருச்சு போல. ஒழுங்கா வாடகை குடுக்கமாட்டான்.ஆறுமாசம் ஒருவருசம்னு வாடகை பாக்கி பந்தம். தினம் மேடம் வேலைக்கிப் போனவன்ன அவனுக்கு போன்பண்ணி இவர் ”வாடகை குடுக்க றதுன்னா இரு இல்ல வீட்ட காலி பண்ணுன்னு ”அவனுக்குப்பண்ணுவாரு அவன் கூல போன தூரவைச்சிட்டு பாத்துட்டு இருப்பான் பதில் சொல்லமாட்டான் கடைசில கோர்ட் மாதிரி அய்யா கொஞ்சம் டைம் குடுங்கன்னு வாய்தா வாங்குவான். ஆனா காசை குடுக்கமாட்டான்.
மேடம் வந்து அதை விசாரிப்பாங்க. கேட்டுட்டு ஒங்களுக்கு அவன் பயப்பட மாட்டான் இருங்க நான் பேசுறேன்னு பேசுவாங்க. அவன் அப்ப பெளவியமா சொல்லுங்க மேடமிதோ நாளைக்கி குடுத்துறுவேன் நம்புங்க மேடம் சத்தியமா குடுத்துடுறுவேன் மேடம்பான். ஆனா ரிசல்ட் அதேதான் ஒன்னும் வராது.
அன்னிக்கி நான் நேரபோய் பேசி வாங்கிட்டு வாறேன்னு அய்யா கெளம்புனாரு. ஆனா அவர் போய் கொஞ்சநேரத்துல அவன் போன் பண்ணுனான். அய்யா வந்த எடத்துல மயங்கி விழுந்துட்டாரு.கவர்மெண்ட் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிருக்கேன்மேடம் ஒடனே வாங்கன்னு போன் பண்ணினான்,
மேடம் மகனுக்குத்தகவல் சொல்லி வரச் சொல்லிட்டு ஆட்டோவில கெளம்பிப் போச்சு. அங்க ஐ. சி.யு வில அய்யா மயக்க நெலையில இருந்தாரு மூஞ்சில எல்லம் டூயூப் மாட்டி ருந்துச்சு. அதைப்பாத்ததும் மேடம் கலங்கிட்டாங்க அங்க இருந்த டாக்டரை பாத்துகேட்டாங்க அதுக்கு அவங்க சொன்னாங்க நல்லவேளை டயத்துல கொண்டாந்ததுனால உசிறுக்கு ஆபத்தில்ல ஆனா சுகர் அதிகமாஇருக்கு அதுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுறோம். பிரச்சரும் அதிகம் . சரியாகிடும் ஆனாமூணு அல்லது நாலு நாள் அட்மிசன்ல இருக்கனுமுன்னு சொல்லீட்டாங்க.
மேடம் பள்ளிக்கொடத்துக்கு லீவு போட்டுட்டு அங்கயே கெடந்துச்சு. சாப்புடத்தோணல. மகன் வந்துபார்த்தான். அவனைப்பாத்ததும் மேடம் அழுக ஆரம்பிச்சிடுச்சு, அவனும் டாக்டர்தான் அதுனால அவன் உள்ளாற போய் பாத்துட்டு ச்சொன்னான். ஒண்ணும் உசிறுக்கு ஆபத்தில்ல. ஆனா அட்மிசன்ல இருக்கனு மாம்னு சொன்னான்.
ஆனா மேடம் ரொம்பப்பயந்தாங்க . இதுனால் வரை இப்புடி ஐ.சி,யூ வரை போனதில்ல. ஒரு வேளை அவர் தன்னத்தனியா விட்டுடு வாறோன்னு நெனச்சப்ப கண்ணு கலங்கி வழிஞ்சி ச்சி. அப்ப அங்க வந்த நர்சம்மா சொல்லிச்சி.. நீங்க வேணுமானா வீட்டுக்குப் போய்ட்டு நாளைக்கி வாங்க. பயம் வேண்டாம் நாங்க பாத்துக்கிறோம்ன்னாங்க
மேடம் அரை மனசா வீட்டுக்கு வந்தாங்க. கையும் ஓடல காலும் ஓடல. சாப்புட மனசு வரல. ராத்திரிபூராம் தூக்கமும்வரல காலையில எந்திரிச்சி குளிச்சிட்டு பேருக்கு எதையோ முழுங்கிட்டு பக்கத்துல இருந்த கோயில்ல போய் சாமி கும்புட்டாங்க. அங்க அர்ச்சனைத் தட்ட வாங்கி குடுக்கும் போது யார்பேருக்குன்னு கேட்டாங்க. அவர் பேருக்கே பண்ணுங்கன்னு சொல்லிட்டு கண்ணு மூடி வேண்டிக்கிட்டு இருந்தப்ப அவருக்குத் தெரியும் இவங்கள அதுனால ராமச்சந்திரன் நாமதேசியன்னு ஆரம்பிச்சி அர்ச்சனை பண்ணுனாரு. அவர்
தட்ட வாங்கிட்டு ஆஸ்பத்திரில போய் பாத்தப்ப அவர் கண்ணு முழிச்சி எழுந்து ஒக்காந்துருந்தாரு.
அதைப்பாத்ததும் மேடத்துக்கு ஆனந்த கண்ணீர் வழிஞ்ச்சி.. அப்ப இந்தாங்க உங்க பேருக்கு அர்ச்சனை பண்ணுனேன் இந்தாங்க பிரசாதம் நு கொடுத்தா. அப்ப இங்க ஏதும் அர்ச்சனை உண்டா சொல்லும்மா. ஆனா இங்க பால்கணி இல்ல நான் தப்பிக்க முடியாதுன்னு சொல்லவும் மேடம் கண்ணு கலங்கிடுச்சு.....
இனிமே அர்ச்சனை பண்ணமாட்டேன்னு சொன்னாங்க. அப்ப அவர் சொன்னார் பரவாயில்ல உன் அர்ச்சனைய நிறுத்திடாத அதுதான் நீ என் கூட பேசுற மொழி அத நிறுத்தினா உனக்கும் எனக்குமான பேச்சுவார்த்தை நின்னுபோனமாதிரி ஆயிடும் நான் பேசுறதே உன்கூட மட்டும்தான் அதுவுமில்லன்னா வாழ்க்கை வெறுமை யாகிடும்ன்னார் கண்கலங்கி அதக்கேட்டதும் மேடம் கண்ணத்தொடச்சிக்கிட்டாங்க. அப்ப அவர் கண்ண மூடி வேண்டிக்கிட்டார். மேடம் அவர் சாப்பிட்டத கழுவிவைக்க எடுத்துட்டுப்போனாங்க.
அப்ப நர்சம்மா கேட்டாங்க நீங்க என்ன வேண்டிக்கிட்டீங்கன்னு அவர்கிட்ட . அப்ப வர் சொன்னார் அடுத்த ஜென்மம் நு ஒன்னு இருந்தா இவங்களே மனைவியா வாய்க்கனும்னு வேண்டினேன்னு சொன்னார். அவ்வளவு அன்பா அவங்கமேலன்னு கேட்டாங்க அதுக்கு உள்ளாற வந்துக்கிட்டு இருந்த மேடம் சொன்னாங்க தெரியாத தேவதையக்காட்டிலும் தெரிஞ்ச பிசாசே மேல் நு ஒரு பழமொழி இருக்கு கேட்ட தில்லை யான்னு... அப்ப அவர் சிரிச்சிக்கிட்டே சொன்னாரு எப்புடி தாக்குறாங்க பாரும்மா தெரிஞ்ச பிசாசே(MALE)மேல்னு சொல்ல
அப்ப மேடம் சொன்னாங்க இப்புடி எதையா வது சொல்லிட்டு அப்புறம் பால்கனில நின்னு அர்ச்சனை வாங்குறதே பொழப்பாப் போச்சு,,,, ஒங்களைத்திருத்தவே முடியாதுன்னு
அப்ப அவர் சொன்னாரு ஆரம்பிச்சாச்சி அர்ச்சனைன்னு..
அ.முத்துவிஜயன்