பன்னிரண்டு மணிநேரப் பயணம்
இன்று நான்கு மணியாகச் சுருங்கியது,
அப்படியும் மனிதன் சொல்கிறான் —
“நேரமில்லை!”
பன்னிரண்டு பேர் வாழ்ந்த குடும்பம்
இன்று இருவராகக் குறைந்தது,
அப்படியும் மனிதன் சொல்கிறான் —
“நேரமில்லை!”
இரண்டு வாரம் எடுத்த கடிதம்
இன்று இரண்டு வினாடியில் சென்று விடுகிறது,
அப்படியும் மனிதன் சொல்கிறான் —
“நேரமில்லை!”
வேற்று நாட்டு முகத்தைக் காண ஆண்டுகள் காத்திருந்தவன்,
இன்று ஒரு திரையில் முகம் பார்க்கிறான்,
அப்படியும் மனிதன் சொல்கிறான் —
“நேரமில்லை!”
வீட்டில் இருந்து மேல்தளத்துக்கு முட்டி வலியுடன்முணங்கி சென்றதோர் காலம்
இன்று ஒரு லிஃப்ட் பெட்டி பொத்தான் அழுத்தத்தில் போகிறேன் மேலே…
அப்படியும் மனிதன் சொல்கிறான் —
“நேரமில்லை!”
வங்கிக் கவுண்ட்டர் களில் வரிசையில் வாடி நின்ற மனிதன்,
இன்று கைபேசியில் காசு அனுப்புகிறான்,
அப்படியும் மனிதன் சொல்கிறான் —
“நேரமில்லை!”
மருத்துவப் பரிசோதனைகள்
முன்பு மணிக் கணக்கில் பக்கம் பக்கமாய் பார்த்து சொல்ல மருத்துவர் வேண்டும்..
இன்று சில நொடிகள் போதும், அலை செய்தி யில் அபாய கட்டங்களை சுட்டி அறிவுரை தந்து விடும்..
அப்படியும் மனிதன் சொல்கிறான் —
“நேரமில்லை!”