வேலைக்காகக் கல்பாக்கம் சென்றபின் பெற்றோர் மற்றும் நண்பர்களைப் பார்க்க மதுரை அடிக்கடி வருவேன். அப்படி வரும்போது ஒருநாள்
“ஐயா பிச்சை சோறு கஞ்சி எதுனாச்சும் இருந்தா போடுங்க பசி உசிறு போகுது” நு யாரோ வீட்டுக்கு வெளியே கேக்குறசத்தமும்
“ போடா ஒன்னும் இல்ல அடுத்த வீட்டப்பாரு” நு அம்மா வெரட்டுர சத்தமும் கேட்டுச்சு
தற்செயலா பல் வெளக்கிட்டு எச்சிய வெளிய துப்ப வந்தநான் அங்க நின்னவனைப் பாத்து திக்குன்னு இருந்துச்சு
கையில ஒரு மண்சட்டி இடுப்புல கிழிஞ்ச டவுசர் மேல சட்டை எதுவும் போடாம ஒடம்பெல்லாம் அடி வாங்குன தழும்போட நின்னுக்கிட்டு இருந்தான் அவன்
” டே நீ காளிதாஸ் தான” நு நான் கேக்க அவன் அவசரமா சொன்னான் இல்ல நான் காளிதாஸ் இல்ல அவன் செத்துப்போய்ட்டான் நான் வேற ஆளு” நு சொல்லிக்கிட்டே நகர்ந்தான்
ஆனா எனக்கு நல்லாத்தெரிஞ்சது அவன் காளிதாஸ் தான்னு
ஏன்னா அவனோட அம்மைத் தழும்பு விழுந்த மொகம் ஆறடி ஒசரம் ஓங்கு தாங்கான ஒடம்பு எனக்கு மறக்கவே மறக்காது. இப்ப மெலிஞ்சு எலும்பும் தோலுமா இருந்தான்.
மதுரை ஞான ஒளிவு புரத்தில் ஸ்கூலில் நான் 10 வது வகுப்பு பாஸ் ஆகி 11 வது வகுப்பு போனப்ப அவன் ஏற்கனவே அங்க இருந்தான் . எப்பையும் கடைசி பெஞ்சிலதான் ஒக்காருவான்.
எனக்கு முன் சிலவருடங்களிலே அங்கேதான் இருந்தான்
கடைசிபெஞ்சில் சன்னோலோரமூலைதான் இருக்கை மகாகவியின் பெயர் வைத்த அவனுக்கு
கல்விக்கடவுள் அவன் விசயத்தில்மட்டும் கருணையே காட்டவில்லை ஐந்துவருடமாஅதேவகுப்புத்தான். அவனும் பிடிவாதமாயிருந்தான்பள்ளி விதிமுறைகளின் படி அரைக்கால் டவுசர் அவனுக்குப் பொருந்தாது
நல்லவேளை ஆண்கள் மட்டுமேபடிக்கும் பள்ளி .வீட்டிலிருந்து வேட்டிகட்டிவந்து பள்ளிக்குள் வரும்போது
அவிழ்த்துவிட்டு டவுசரோடு உள்ளே வருவான்
விடைத்தாள் வழங்கும் நாள் என்றால் அவனைப் பொருத்தவரையில் அடிவாங்கும் நாள் என அர்த்தம் பெயரைக்கூப்பிட்டவுடன்அடி வாங்கக் கையை நீட்டிய படியே வெளியேவருவான். அடி வாங்கினாலும் சிரிப்பான்
அமைதியாகத்தான் அமர்ந்திருப்பான் சிலஆசிரியர்களின் நகைச் சுவை உணர்வுவெளிப்பாட்டுக்கு அவன் எப்போதுமே பாடுபொருள்தான் . அவனைக்கேலி செய்வதில் நகைச்சுவை இருப்பதாகக் ஒரு குரூரமான கற்பனை செய்து கொண்ட சில ஆசிரியர்கள் மேல் கோவம் வரும் எனக்கு
யார்கிண்டல் செய்தாலும் சிரிப்பான் கோபமில்லாமல்
11 வது வகுப்பில் பொதுத்தேர்வுக்கு முன்னாள் மூன்று ரிவிசன் டெஸ்ட்டுகள் வைப்பார்கள். அதுக்கு வடிகட்டி எக்சாம்கள் நு பேரு. ஜனவரில தொடங்கிவிடும் போர்சன் எல்லாம் டிடம்பரில் முடித்துவிட்டு ஜனவரி பெப்ரவரி மார்ச் எல்லாம் ரிவிசன் டெஸ்ட்தான் நடக்கும்
பள்ளிக்கு 100 சதவீதம் ரிசல்ட் வருவதற்காக பாஸ் ஆகும் வாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களை வடி கட்டி அவர்களை பிரைவேட்டாக தேர்வு எழுதச்சொல்லி விடுவார்கள் அப்ப எல்லாம்
ஏனென்றால் பள்ளிவழியாக எழுதி பெயில் ஆனால் பள்ளிக்குக் கெட்ட பெயட் 100\100 சதவீதம் பாஸ் என்று பெயர் வாங்கமுடியாது அதற்காக அந்த இரக்கமற்ற செயலைச்செய்வார்கள்
அன்று மூன்றாவது டெஸ்ட் முடிந்து பேப்பர்கள் எல்லாம் திருத்தி வந்த நேரம். பள்ளியில் இருந்து சில மாண்வர்களின் பெற்றோர்களை வரச்சொல்லி இருந்தார்கள். தலைமை ஆசிரியர் அவர்களைப் பார்க்கச்சொல்லி அனுப்பினார்கள் மாணவர்களோடு
அதில் காளிதாசும் இருந்தான். அவனின் பெற்றோர் அழமாட்டாத குறையாக தலைமை ஆசிரியர் அறைமுன் நின்று கொண்டிருந்தனர்.
நாங்கள் வகுப்புக்குப்போய்விட்டு இடைவேளை பெல் அடிக்கும் போது போய்ப்பார்த்தோம். அவன் அழுது கொண்டிருந்தான். விசாரித்தபோது அவன் சொன்னான் டி.சி கொடுத்துவிட்டார்கள். பிரைவேட்டா 11 வது பொதுத்தேர்வு எழுதச்சொல்லிவிட்டார்கள் என்று கண்ணீர்வழியச்சொன்னான் அவனைப்போல 7 பேர் வெளியேற்றப் பட்டனர். அவர்களில் கறிக்கடைக்காரர் மகன் சுப்பிரமணி சாக்குவியாபாரி மகன் வில்லியம்ஸ் சேரியில் இருந்து வரும் கோபால் எல்லாம் இருந்தார்கள்
நாங்கள் சரி பரவாயில்லை பிரைவேட்டா எழுதுங்க நு சொல்லிவிட்டு வகுப்புகளுக்குப் போனோம்
எங்களுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.
அதற்குப்பிறகு பொதுத்தேர்வு நடந்து ரிசல்ட் வந்தபோது பள்ளி 100/100 சதவீதம் தேர்வு என்று போஸ்டர் ஒட்டிக்கொண்டாடினார்கள். ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினார்கள்
நாங்கள் பி.யு.சி சேர்ந்தபொழுது கறிக்கடைக்காரர் மகன் சுப்பிரமணி கறிக்கடையில் உட்கார்ந்திருந்தான். சாக்கு வியாபாரி மகன் வில்லியம்ஸ் டுடோரியல் காலேஜ்க்கு படிக்கப்போனான் சேரியில் இருந்து வரும் கோபால்
ஊர் சுற்றிக்கொண்டிருந்தான்
காளிதாஸைப்பார்க்க முடியவில்லை அவனைப்பற்றி யோசிக்க நேரமும் இல்லை
அதற்குப்பிறகு அன்றுதான் பார்த்தேன்
”என்னடாகாளிதாஸ்”என்றேன்
”நான் பெயிலாயிட்டேன்” என்றான்வெள்ளந்தியாக
பள்ளிக்கூடத்தின் வழியா எழுதியிருந்தா பாஸ் ஆயிருப்பேன். என் தலைவிதி என்றான் விரக்தியாக சிரித்துக்கொண்டே”
”இப்ப பசிக்குது அப்பா அம்மா இல்ல சாப்பிட்டு ரெண்டு நாளாகுது ”என்றான்கண்களில் நீர்முட்ட
அவனை அழைத்து சாப்பிடச்சொன்னேன்
எல்லாத்தையும் சட்டியில் போடு நான் வைச்சி சாப்புட்டுக்கிறேன் என்றான் வெள்ளந்தியாக
வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக்கொடுத்தேன் கையில் பணமும் கொடுத்தேன் கண்ணீருடன்
”நீ பாசாயிட்டயா நான் எல்லாத்துலயும் பெயில் ஆயிட்டேன் ஆமா தோத்துப்போயிட்டேன் என்று சொல்லிக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல்
நடந்தான் என் கண்களில் வழிந்த விழிநீர் அவனை மறைத்தது
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்