தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ’இன்று ஒரு தகவல்’!

By சரவணன்

தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ’இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சி. 

வானொலிக்கென ஒரு தனிப்பட்ட பேச்சு வழக்கு மொழி பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தில் எளிய தமிழில் பக்கத்து வீட்டுக்காரரின் பாவனையுடன் வட்டார வழக்கில் தினமும் ஒரு தகவலை மிக சுவாரஸ்யமாக சொல்லுவார். 

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொல்லும் பயனுள்ள தகவல்கள் பெரும்பாலும் விவசாய குறிப்புகளாக இருக்கும். எந்த விதமான நோய்கள் பயிர்களை எந்தப் பருவத்தில் தாக்கும் அதற்கான கட்டுப்படுத்தும் முறைகளை அவர் சொல்வதைக் கேட்பதற்கே மிக அழகாக இருக்கும்.

நம்முடைய பக்கத்து வீட்டு விவசாயி பேசுவது போலவே தென்கச்சி கோ.சுவாமிநாதனின் பேச்சு அமைந்திருக்கும். "ஒரு அரை பக்கெட் தண்ணி எடுத்துக்கங்க... அதில் 100 மிலி மருந்தை ஊத்தி நல்லா கலக்குங்க... அப்பறமா அத பயிர் மேல தெளிச்சு விட்ருங்க... அப்படிச் செஞ்சீங்கன்னா பூச்சியெல்லாம் ஒரே நாள்ல செத்துடும்" என்று எளிமையாகச் சொல்வார். 

விவசாயத் தகவல்கள் முடியும்போது, ’இப்படித்தான்... ஒரு ஊர்ல...’ என்று ஒரு குட்டி கதையைச் சொல்லத் தொடங்கி சுவாரஸ்யமாகக் கதையை முடிப்பார். 

நன்றி: விகடன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE