நம் அம்மாவை மகிழ்விக்கும் பழக்க வழக்கங்கள்?

By செய்திப்பிரிவு

சில சின்ன சின்ன அழகான தருணங்கள் பற்றியும் பார்க்கலாம்.
வேலை ஒன்னுமே இல்லைனாலும்
குறைந்தது அதிகாலை 5 மணிக்கே எழுந்துவிடுவது,
தியானமோ அல்லது யோகாசனமோ செய்வது,

"குளித்துவிட்டு" கோயிலுக்கு போவது,
ஒரு நாளைக்கு 5 வேளையாவது நம்மை சாப்பிட வைக்க நடக்கும்
அலப்பறைகளில் அம்மாவை வெற்றியடைய செய்வது,
போதுமென்ற பிறகும் எக்ஸ்ட்ரா கொஞ்சம் சாப்பாடு வைக்கும் தருணம்,

அதையும் சாப்பிட்டுவிட்டால் "இன்னும் கொஞ்ஞ்ஞ்சம்?" என இன்னொருதடவை கேட்டுவிட்டு நம்முடைய "ம்ம்" என்ற பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி முகத்தை பார்க்கும் தருணம்,
குறைந்தது 2 வேளையாவது நம் தலைக்கு எண்ணெய் வைத்துவிட அனுமதிக்கும் போது,
தலை முடியை படிய வாரி, வாக்கெடுத்து சீவியிருக்கும் போது,

சலூனில் முடியை ஒட்ட வெட்டிக்கொண்டும், க்ளீன் சேவும் செய்துகொண்டு வரும்போது,
மொபைல், லேப்டாப், டேப் னு எதையும் ஒருநாளைக்காவது தொடாம இருக்கும் போது,
வீட்டில் சாமி போட்டோக்களுக்கும், சாமியான பெரியவங்க
போட்டோக்களுக்கும் பூ வைக்கும் போது,

பைக்கை ஓட்டுகையில் 20–30 வேகத்தை மிகாமல் ஓட்டும் போது,
சாவிகளை அதற்கான ஹேங்கரில் மாட்டும் போது,

டி.வியை கடந்து போகையில் பழைய படமோ பாடல்களோ ஓடுவதை பார்த்தும், சேனல் மாற்றாமல் கடந்து போவது,
அம்மா சொல்லாமலேயே, ஒட்றை அடிப்பது, அலமாறியை சுத்தம் செய்வது, காய்ந்த துணிகளை கொண்டுவந்து உடனடியாக மடித்து அலமாறியில் வைக்கும் போது,

குக்கர் விசில் சத்தத்தை சரியாக ஞாபகம் வைத்து அடுப்பை அணைக்கும் போது,
வாசற் கோலம் போடுகையில் அருகில் நின்று ஐடியா கொடுக்கும் போது,
அட்லீஸ்ட் கிட்ட நின்னு ரசிக்கும் போது,

அடிக்கடி இல்லனாலும் எப்போதாவது "இன்னிக்கி சாப்பாடு சூப்பர் மா" என பாராட்டும் போது,
"நீ எப்பிடி மா போயும் போயும் அப்பாவ போய் கல்யாணம் பண்ணிகிட்ட" என அம்மாவையும் அவங்க ஃபேமிலியையும் கொஞ்சம் பில்டப் ஏத்தி பேசும் போது,

அவங்க சொல்ற சில வேலைகளில் ஒரு வேலையையாவது உடனேயோ அல்லது உருப்படியாகவோ நாம் செய்யும் போது,
ஒரு வேளையாவது நாம அவங்களுக்கு கேட்டு கேட்டு பரிமாறும் போது,

அப்பப்போ ஊட்டிவிட சொல்லி கேட்கும் போது, மற்றும் நாம அவங்களுக்கு ஊட்டிவிடும் போது,
இரவு கரண்ட் இல்லாதப்பவோ, இல்ல மொட்டமாடில தனியா இருக்குறப்பவோ மடியில படுத்துட்டு அவங்களோட சின்ன வயசு வாழ்க்கை சம்பவங்கள சொல்லும் போது அல்லது சொல்லச் சொல்லி கேட்கும் போது,

அப்படி சொல்லும் போது, கிண்டல் கேலி எதுவும் பண்ணாம, குறுக்க பேசாமா அவங்கள மட்டும் முழுசா பேசவிட்டு ரசிக்கும் போது,
அவங்க மடியிலயே தூங்கிவிடும் போது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE